பொதுக்காலம் 6-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள்
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கொலை, விபசாரம், பொய்யாணை போன்ற திருச்சட்டத்துக்கு எதிரான தீமைகளில் இருந்து விலகி வாழ இன்றைய திருவழிபாடு
நமக்கு அழைப்பு
விடுக் கிறது. தம் சகோதரரையோ சகோதரியையோ 'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளா வார் என்று இயேசு எச்சரிக்கை விடுக்கிறார். உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதை விட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது என கடுமையான அறி வுரையை அவர் நமக்கு வழங்குகிறார். எதன் மீதும் ஆணையிட வேண்டாம் என்றும் நாம் அறிவுறுத்தப்படுகிறோம். 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும், 'இல்லை' என்றால் 'இல்லை' என வும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடன் வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலி யில் பங்கேற்போம்.
இன்றைய முதல் வாசகம், கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து தூய வாழ்வு வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுள் நம்முன் வைத்துள்ளவற்றில் இருந்து நமக்கு விருப் பமானதை தேர்வுசெய்ய அவர் நம்மை அனுமதிக்கிறார் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். வாழ்வையா, அழிவையா எதை தேர்வு செய்கிறோம் என்பதில் விழிப்போடு இருக்குமாறு நாம் எச்சரிக்கப்படுகிறோம். மனிதரின் செயல்கள் அனைத்தையும் ஆய்ந்தறியும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்போராய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.
முதல் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், இறை ஞானத்தை பெற்றுக்கொள் வதில் ஆர்வம் காட்டுமாறு அழைப்பு விடுக்கிறார். உலக ஞானம் அழிவுக்குரியது என்பதை உணர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். தம்மிடம் அன்பு கொள்கிறவர்களுக்காக கடவுள் ஏற்பாடு செய்துள்ள மீட்புத் திட்டத்தில் முழு மனதோடு பங்கேற்க பவுல் நம்மை அழைக்கிறார். கடவுளின் திருவுளத்தை அறிந்து வாழ தூய ஆவியின் உதவி வேண்டி, இவ் வாசகத்துக்கு செவிமடுப்போம்.

1. ஞானத்தின் நிறைவே இறைவா,
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்,
துறவறத்தார் அனைவரும் இறை ஞானத்துடன், உமது மீட்புத் திட்டத்தை உலக மக்களிடையே கொண்டு சேர்க்க உதவ வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
2. நன்மையின் ஊற்றே இறைவா,
உலகில் வாழும் மக்கள் அனைவரும் நல்லவற்றை விரும்பித் தேடவும், தீயவற்றை துணிவோடு எதிர்த்துப் போராடவும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
உலகில் வாழும் மக்கள் அனைவரும் நல்லவற்றை விரும்பித் தேடவும், தீயவற்றை துணிவோடு எதிர்த்துப் போராடவும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் உறைவிடமே இறைவா,
உலக ஞானத்தின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அழிவுக்குரிய நெறிகளைப் பின்பற்றி வாழும் எம் நாட்டவர் அனைவரும், உம்மிடம் மனந்திரும்பி வர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
உலக ஞானத்தின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அழிவுக்குரிய நெறிகளைப் பின்பற்றி வாழும் எம் நாட்டவர் அனைவரும், உம்மிடம் மனந்திரும்பி வர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வின் வழியே இறைவா,
கொலை, விபசாரம் போன்ற தீமைகளின் பிடியில் சிக்கி உமது திட்டத்துக்கு எதிராக செயல்படுவோர் அனைவருக்கும், தூய வாழ்வுக்கான வழியைக் காட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
கொலை, விபசாரம் போன்ற தீமைகளின் பிடியில் சிக்கி உமது திட்டத்துக்கு எதிராக செயல்படுவோர் அனைவருக்கும், தூய வாழ்வுக்கான வழியைக் காட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மகிமையின் அரசரே இறைவா,
உமது கட்டளைகளுக்கு எதிரான தீமைகளில் இருந்து விலகி புனித வாழ்வு வாழும் வரத்தை, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.