பொதுக்காலம் 6-ம் ஞாயிறு
முதல் வாசகம்: சீராக்கின் ஞானம் 15:15-20
நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது
விருப் பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர்
வைத்துள்ளார்; உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள்.
மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள்
விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக் கப்படும்.
ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல்மிக்கவர்; அனைத்தையும் அவர்
காண்கிறார். ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்;
மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார். இறைப் பற்றின்றி இருக்க
யாருக்கும் ஆண் டவர் கட்டளையிட்டதில்லை; பாவம் செய்ய எவருக்கும் அவர் அனுமதி
கொடுத்தது மில்லை.
பதிலுரைப் பாடல்:
திருப்பாடல் 119:1-2.4-5.17-18.33-34
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறு பெற்றோர். அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்; முழு மனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். (பல்லவி)
ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர். உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! (பல்லவி)
உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன். உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண் களைத் திறந்தருளும். (பல்லவி)
ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன். உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய் யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். (பல்லவி)
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 2:6-10

சகோதர சகோதரிகளே, முதிர்ச்சி பெற்றவர்களோடு நாங்கள் ஞானத்தைப் பற்றிப் பேசு கிறோம். ஆனால் இது
உலக ஞானம் அல்ல; உலகத் தலைவர்களின் ஞானமும் அல்ல. அவர்கள்
அழிவுக்குரியவர்கள். வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை
ஞானத்தைப் பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெறவேண்டும்
என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது.
இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை அறிந்துகொள்ளவில்லை. அறிந்திருந்தால்,
அவர்கள் மாட்சிக் குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் மறைநூலில் எழுதியுள்ளவாறு, "தம்மிடம் அன்புகொள்ளுகிறவர்களுக்கு
என்று கடவுள் ஏற்பாடு செய் தவை கண்ணுக்குப் புலப்படவில்லை; செவிக்கு
எட்டவில்லை; மனித உள்ளமும் அதை அறியவில்லை.'' இதைக் கடவுள் தூய ஆவியாரின்
வழியாக நமக்கு வெளிப்படுத்தினார். தூய ஆவியாரே அனைத்தையும் துருவி
ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார்.
வாழ்த்தொலி: மத்தேயு 11:25
வாழ்த்தொலி: மத்தேயு 11:25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில்
ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர்.
அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்: மத்தேயு 5:17-37
சிந்தனை: வத்திக்கான் வானொலி