பொதுக்காலம் 5-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
அன்பர்களே,
பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள்
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்து இயேசுவின் சீடர்களான நாம் ஒவ்வொருவரும் உல கிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு
விடுக் கிறது. உப்பைப் போன்று நாமும் மற்றவர்களின் வாழ்வில் சுவையூட்டுபவர்களாக திகழ இயேசு நம்மை அழைக்கிறார். இருளின் பிடியில் சிக்கித் தவிப்போருக்கு ஒளியாக சுடர நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். பிறரது வாழ்வில் சுவை தரும் உப்பாகவும், சுடர் விடும் ஒளியாகவும் வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
இன்றைய முதல் வாசகம் நமது ஒளியை மற்றவர்கள் முன் ஒளிரச் செய்வது எப்படி என்பதைக் கற்றுத் தருகிறது. பசித்தோருக்கு உணவளிக்கவும், வறியோருக்கு உதவி செய்யவும் இறைவாக்கினர் எசாயா வழியாக ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். பிறரை சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்த நாம் அழைக்கப்படுகிறோம். இவ்வாறு தீமைகளுக்கு பதிலாக நன்மைகளைச் செய்து, இருளின் நடுவே ஒளி வீசுபவர்களாக திகழ இறைவனின் உதவி வேண்டி, இவ்வாசகத்தை உள மேற்போம்.
முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே,
இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
இன்றைய இரண்டாம் வாசகம் திருத்தூதர் பவுல், இயேசுவின் நற்செய்திக்கு சான்று பகர்ந்தது குறித்து எடுத்துரைக்கிறது. கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்கும் அளவுக்கு தன்னிடம் சொல்வன்மையோ ஞானமோ இருந்ததில்லை என்று பவுல் கூறு கிறார். இருந்தாலும் அங்கு தூய ஆவியின் வல்லமை செயல்பட்டதை நினைவுறுத்து கிறார். நமது நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே என்பதை உணர்ந்து செயலாற்ற இறைவனின் அருள் வேண்டி, இவ்வாசகத்தை உளமேற் போம்.

1. ஞானத்தின் ஊற்றே இறைவா,
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்,
துறவறத்தார் அனைவ ரும், மனித ஞானத்தின் மீது ஆர்வம் காட்டாமல் உமது தூய ஆவியின் வல்லமையில் நம்பிக்கை வைத்து நற்செய்தி பணியாற்றத் தூண்டுமாறு உம்மை
மன்றாடுகிறோம்.
2. வழிகாட்டும் ஒளியே இறைவா,
உலகெங்கும் வாழும் பிற சமய மக்களிடம் உமது நற்செய்தியின் ஒளியை எடுத்துச் செல்லும் தூதுவர்களாக செயல்படும் ஆவலை கிறிஸ்தவர்கள் அனைவரது உள்ளத்தி லும் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
உலகெங்கும் வாழும் பிற சமய மக்களிடம் உமது நற்செய்தியின் ஒளியை எடுத்துச் செல்லும் தூதுவர்களாக செயல்படும் ஆவலை கிறிஸ்தவர்கள் அனைவரது உள்ளத்தி லும் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. சுவையூட்டும் உப்பே இறைவா,
எம் நாட்டில் உம்மைப் புறக்கணித்து சுவையற்ற வாழ்வு வாழும் மக்களிடையே உமது நற்செய்தியை சுவையைப் பரப்பும் உப்பாக செயல்படும் ஆர்வத்தை கிறிஸ்தவர்களிடம் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
எம் நாட்டில் உம்மைப் புறக்கணித்து சுவையற்ற வாழ்வு வாழும் மக்களிடையே உமது நற்செய்தியை சுவையைப் பரப்பும் உப்பாக செயல்படும் ஆர்வத்தை கிறிஸ்தவர்களிடம் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வளிக்கும் சுடரே இறைவா,
தீமைகளின் பிடியிலும், பாவ இருளிலும், துன்ப நோயிலும் சிக்கி, ஆறுதல் இழந்து தவிக் கும் மக்கள் அனைவருக்கும் ஒளியாக இருந்து வழிகாட்டி, உப்பாக இருந்து சுவையூட்டு மாறு உம்மை மன்றாடுகிறோம்.
தீமைகளின் பிடியிலும், பாவ இருளிலும், துன்ப நோயிலும் சிக்கி, ஆறுதல் இழந்து தவிக் கும் மக்கள் அனைவருக்கும் ஒளியாக இருந்து வழிகாட்டி, உப்பாக இருந்து சுவையூட்டு மாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. மகிழ்வின் நிறைவே இறைவா,
எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது வல்லமையில் முழுமையான நம்பிக்கை வைத்து, தங்கள் சுற்றத்தாருக்கும் நண்பர்களுக்கும் உப்பாகவும் ஒளியாகவும் திகழச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.