Wednesday, April 25, 2012

ஏப்ரல் 29, 2012

பாஸ்கா காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   நம் ஆயர் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நல்லாயன் ஞாயிறை சிறப்பிக்கும் இன்றைய திருவழிபாடு இயேசுவை நமது ஆயராக ஏற்று, அவரது குரலுக்கு செவிகொடுக்கும் நல்ல ஆடுகளாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமக்காக உயிரைக் கொடுத்த நல்லாயர் இயேசுவுக்குரிய ஒரே மந்தையின் உறுப்பினர்களாக உலக மக்களை ஒன்றிணைக்க நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளின் அழைப்பை உணர்ந்தவர்களாய், கிறிஸ்து இயேசுவில் இணைந்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய முதல் வாசகம், இயேசுவின் பெயரால் கால் நலமடைந்தவரைப் பற்றிய செய்தியை நமக்கு தரு
கிறது. குணமடைந்தவரைச் சுட்டிக்காட்டி, 'இயேசுவே மக்கள் அனைவருக்கும் மீட்பராகவும், திருச்சபைக்கு மூலைக்கல்லாகவும் விளங்குகிறார்' என்று திருத்தூதர் பேதுரு சான்று பகர்கிறார். விலையுயர்ந்த மூலைக்கல்லாகிய இயேசுவோடு இசைந்த கட்டடமாக திருச்சபை வளர்ச்சி பெற வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவன முடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், இயேசுவில் வெளிப்பட்ட கடவுளின் அன்பைப் பற்றிக்
கூறுகிறது. இயேசுவின் இணையற்ற தியாகத்தால் கடவுளின் பிள்ளைகளாகி இருக்கும் நாம், இறையாட்சியின் நாளில் கடவுள் இருப்பது போலவே அவரைக் காண்போம் என திருத்தூதர் யோவான் நமக்கு எடுத்துரைக்கிறார். கிறிஸ்து வழியாக கடவுளை அறிந்து கொண்ட நாம் அனைவரும், இறைமாட்சியைக் காணும் வரம் வேண்டி இந்த வாசகத் திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எங்கள் நல்லாயராம் இறைவா,
  
உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு உகந்த மந்தையாக இறைமக்களை உருவாக்க துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் வழிகாட்டியாம் இறைவா,
   உம்மைப் பற்றிய உண்மையைப் புறக்கணித்து, தவறான கொள்கைகளையும் சமயங் களையும் பின்பற்றி வாழும் மக்கள், உண்மை கடவுளாகிய உம்மை ஏற்றுக்கொள்ளவும் உமது அரசில் ஒன்றிணையவும் அருள்புரிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் மேய்ப்பராம் இறைவா,
   எங்கள் நாட்டை வழிநடத்தும் அரசியல், சமூகத் தலைவர்
கள் அனைவரும் நீதியோடும், நேர்மையோடும் மக்களை உண்மையின் பாதையில் வழிநடத்தவும், உமது திருச்சபை இம்மண்ணில் வளர துணை நிற்கவும் உதவ வேண்டுமென்று  உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் மருத்துவராம் இறைவா,
   உலகில் குடி, புகை, போதைப் பழக்கங்களாலும், சுயநலம், பேராசை, வன்மம் போன்ற தீய குணங்களாலும், தங்களையும் பிறரையும் அச்சுறுத்தி வருவோர்
அனைவருக்கும் உமது அருளால் குணமளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் மகிழ்வாம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது மந்தை யின் நல்ல ஆடுகளாகவும், உமக்கு சான்று பகரும் நல்ல கிறிஸ்தவர்களாகவும் வாழத் தேவையான நலன்களை எம்மில் பொழிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.