பொதுக்காலம் 28-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் இருபத்தெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள்
அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். கடவுளைவிட உலகப் பொருட்களில் அதிகப் பற்று வைக்கும் எவரும் இறையாட்சில் நுழைய முடியாது என்பதை உணர இன்றைய திரு வழிபாடு நமக்கு அழைப்பு
விடுக்கிறது. மனிதர்களாகிய நாம் அனைவரும் கடவுளை அறிந்து, அவரை அன்புசெய்து வாழவே படைக்கப்பட்டிருக்கிறோம். இறை உறவிலும், மனித உறவிலும் நாம் வளர்ச்சி காண கடவுள் வழங்கியுள்ள பத்து கட்டளைகள் நமக்கு வழிகாட்டுதலாக அமைந்துள்ளன. அவற்றைச் சுருக்கி ஒரே அன்பு கட்டளையாக இயேசு நமக்கு வழங்கினார். நமது அன்பு செயல் வடிவம் பெறும் பொழுதுதான் நாம் இறையாட் சிக்கு நெருக்கமானவர்களாக மாற முடியும். செல்வம், உறவு, புகழ் என எது அன்புக்குத் தடையாக இருந்தாலும் அங்கு இறையாட்சி தடுக்கப்படுகிறது. உலகப் பொருட்களைப் புறக்கணித்து இறையாட்சியை விரும்பித் தேடும் நல்ல மனம் வேண்டி, இந்த திருப்பலி யில் பங்கேற்போம்.
இன்றைய முதல் வாசகம் ஞானத்தின் மேன்மையைப் பற்றி எடுத்துரைக்கிறது. பொன் னும் வெள்ளியும் ஞானத்துக்கு முன் மண்ணைப் போன்று இருப்பதாக சாலமோன் கூறுவதைக் காண்கிறோம். அரசப் பதவியின் செங்கோலும் அரியணையும் ஞானத்துக்கு முன் ஒன்றுமில்லாதது என்று குறிப்பிடுகிறார். ஞானத்தால் அனைத்துவித நலன்களும் தனக்கு கிடைத்ததாகவும் சாலமோன் எடுத்துரைக்கிறார். நாமும் இறைவனிடம் ஞானத் தைக் கேட்டுப் பெறுபவர்களாய் வாழும் வரம் கேட்டு, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.
முதல் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகம் இறைவார்த்தையின் மேன்மையைப் பற்றி எடுத்துரைக் கிறது. கடவுளின் வார்த்தை உயிருள்ளதும், ஆற்றல் வாய்ந்ததுமாக உள்ளது என்பதை திருமுக ஆசிரியர் விளக்குகிறார். எண்ணங்களை சீர்தூக்கிப் பார்க்கும் இறைவார்த் தைக்கு உண்மையுள்ளவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்ற உள்ளுணர்வோடு செயல்படும்போது, நாம் கடவுளுக்கு உகந்த தூய வாழ்வு வாழ முடியும். இறையாட்சியில் நுழையத் தகுதியுடையவர்களாய் மாற வரம் கேட்டு, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

1. ஞானத்தின் ஊற்றாம் இறைவா,
எம் திருத்தந்தை,
ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பெற்று, திருச்சபையின் மக்கள்
அனைவரையும் ஞானத்தில் வழி நடத்த தேவையான அருளை வழங்க
வேண்டுமென்று
உம்மை
மன்றாடுகிறோம்.
2. வாழ்வின் ஊற்றாம் இறைவா,
உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் அனைவரும் மக்களை வாழ்வின் பாதை யில் வழிநடத்தவும், போர், தீவிரவாதம், வன்முறை, கலவரம் போன்ற அழிவுக்குரிய செயல்களில் இருந்து மக்களை விலக்கிப் பாதுகாக்கவும் தூண்டுதல் அளிக்க வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. உண்மையின் ஊற்றாம் இறைவா,
எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மை, நீதி, அமைதி உண்மை ஆகியவற்றை விரும் பித் தேடவும், அதன் வழியாக உமது உண்மையான அன்பையும் இரக்கத்தையும் உணர வும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மை, நீதி, அமைதி உண்மை ஆகியவற்றை விரும் பித் தேடவும், அதன் வழியாக உமது உண்மையான அன்பையும் இரக்கத்தையும் உணர வும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நீதியின் ஊற்றாம் இறைவா,
உலகில் பண ஆசை, பதவி மோகம், மத வெறி, தன்னலம், இன வெறி போன்ற காரணங் களால் நீதி மறுக்கப்படும் இடங்கள் அனைத்திலும் உம் இறையாட்சியின் மதிப்பீடுகள் விதைக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. மீட்பின் ஊற்றாம் இறைவா,
எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உலகப் பொருட்கள் மீதான நாட்டங்களில் இருந்து விலகி, உமக்கு உகந்த வாழ்வு வாழ்ந்து இறையாட்சியை உரிமையாக்கிக்கொள்ளும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.