பொதுக்காலம் 27-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
இறையாட்சிக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் இருபத்தேழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள்
அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். நாம் அனைவரும் உறவில் ஒன்றித்திருக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு
விடுக்கிறது. மனிதர்கள் எல்லோரும் கடவுளின் படைப்பு களாகிய இயற்கையோடும், மற்ற மனிதர்களோடும் ஒன்றித்து வாழ வேண்டுமென இன் றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன. சிறப்பாக அனைத்து உறவுகளுக்கும் உயிர் கொடுக்கும் திருமண உறவு பற்றி இயேசு பேசுகிறார். கணவனும் மனைவியும் அன்பில் ஒன்றித்திருக்க கடவுளால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்று இயேசு அறிவுறுத்துகிறார். அதே வேளையில், குழந் தைகளைப் போல தூய உள்ளம் கொண்டவர்களுக்கே இறையாட்சியில் இடம் கிடைக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார். சிறு பிள்ளைகளைப் போன்று இறையாட்சியை ஏற்றுக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
இன்றைய முதல் வாசகம் முதல் மனிதனான ஆதாம் இயற்கையோடும் ஏவாளோடும் கொண்டிருந்த உறவைப் பற்றி எடுத்துரைக்கிறது. விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பெயரிட்ட மனிதன், தனக்குத் தகுந்த ஒரு துணையைக் காணாமல் தவிப்பதை கடவுள் உணர்கிறார். எனவே ஆணுக்கு ஏற்றத் துணையாகப் பெண்ணை, கடவுள் படைத்ததைக் காண்கிறோம். கணவன், மனைவி இருவரும் ஒன்றித்து வாழ அழைக்கப்பட்டிருக்கிறார் கள் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. எனவே கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுப வர்களாக வாழும் வரம் கேட்டு, இந்த
வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.
முதல் வாசக முன்னுரை:
இறையாட்சிக்குரியவர்களே,
இரண்டாம் வாசக முன்னுரை:
இறையாட்சிக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகம் மனிதரோடு இயேசு கொண்டுள்ள உறவுநிலையி னைப் பற்றி எடுத்துரைக்கிறது. இயேசு தன்னையேத் தாழ்த்தி, துன்பகரமான சாவுக்கு உட்படுத்திக் கொண்டதால் அவர் மாட்சி பெற்றார் என்று திருமுக ஆசிரியர் கூறுகிறார். மனிதருக்கு மீட்பின் மாட்சியை வழங்குமாறு, இறைமகன் இயேசு மனிதராக பிறந்து நமது சகோதரர் ஆனார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இயேசுவின் உண்மையான சகோ தர, சகோதரிகளாக வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

1. எங்கள் ஆயரே இறைவா,
எம் திருத்தந்தை,
ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது திருச்சபை யின் மக்கள் அனைவரையும் உம்மோடும், பிறரோடும், இயற்கையோடும் நல்லுறவு கொண்டவர்களாய் உருவாக்கத் தேவையான அருளை வழங்க
வேண்டுமென்று
உம்மை
மன்றாடுகிறோம்.
2. எங்கள் அரசரே இறைவா,
உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் அனைவரும் திருமண உறவை மதிப்ப வர்களாய் வாழவும், திருமணத்தின் மாண்பைப் பாதுகாப்பவர்களாய் திகழவும் தேவை யான நல்ல மனதினை கொடுக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் அனைவரும் திருமண உறவை மதிப்ப வர்களாய் வாழவும், திருமணத்தின் மாண்பைப் பாதுகாப்பவர்களாய் திகழவும் தேவை யான நல்ல மனதினை கொடுக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் தலைவரே இறைவா,
எம் நாட்டு மக்கள் அனைவரும் உமது மேலான அன்பை உணரவும், உமது திருமகனின் சிலுவை மரணத்தின் வழியாக நீர் ஏற்பாடு செய்துள்ள மீட்பின் பேறுபலன்களைப் பெற்று மகிழவும் தேவையான மனமாற்றத்தை தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் மருத்துவரே இறைவா,
உலகில் பரவி வரும் பண நோயினால் இயற்கை வளங்களை அழிப்பவர்களும், நீர் தந்த அழகிய சுற்றுச்சூழலை மாசுபடுத்திப் பாழாக்குபவர்களும் மனந்திரும்பி, இயற்கையுடன் நல்லுறவு கொண்டவர்களாய் வாழத் தேவையான ஆற்றலை அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் மீட்பரே இறைவா,
எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், சிறு பிள்ளைகளைப் போல இறையாட்சியை ஏற்றுக்கொள்ளும் தூய மனதினைப் பெற்று, உம்மோடும் பிறரோ டும் உறவில் வளரத் தேவையான வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.