பொதுக்காலம் 26-ம் ஞாயிறு
முதல் வாசகம்: எண்ணிக்கை 11:25-29
அந்நாள்களில் ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார்; அவரில்
இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள்
மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்; அதன் பின்னர் அவர்கள் அப்படிச்
செய்ய வில்லை. இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கி விட்டனர்; ஒருவன் பெயர்
எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள்மீதும் ஆவி இறங்கியது; பதிவு
செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால் அவர்கள் கூடாரத்துக்குச்
சென்றிருக்கவில்லை. ஆகவே அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்கு உரைத்தனர். ஓர் இளைஞன் ஓடி வந்து மோசேயிடம், "எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்கு உரைக்கின்றனர்'' என்று சொன்னான். உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின்
மைந்தருமான யோசுவா, "மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத் தும்''
என்றார்.
ஆனால் மோசே அவரிடம், "என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகி றாயா? ஆண்டவரின்
மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்க ளுக்குத் தம் ஆவியை
அளிப்பது எத்துணைச் சிறப்பு!'' என்றார். பின் மோசேயும் இஸ்ர யேலின்
மூப்பரும் பாளையத்துக்குத் திரும்பினர்.
இரண்டாம் வாசகம்: யாக்கோபு 5:1-6
செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து
அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள்
பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன. உங்கள் பொன்னும் வெள்ளியும்
துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக
இருக்கும்; அது நெருப்புப் போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி
நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே! உங்கள் வயலில்
அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண் டீர்கள்; அது
கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்ட வருடைய
செவிக்கு எட்டியுள்ளது. இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும்
வாழ்ந் தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க
வைத்தீர்கள். நேர் மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை
செய்தீர்கள். ஆனால் அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.
நற்செய்தி வாசகம்: மாற்கு 9:38-48