பொதுக்காலம் 25-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் இருபத்தைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள்
அனை வரையும் பணிவுடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு கடவுளுக்கு உகந்த பணி யாளர்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. எத்தனை இடையூறுகளும் துன்பங்க ளும் வந்தாலும் எப்பொழுதும் பிறருக்கு நன்மை செய்பவர்களாக செயல்பட நாம்
அழைக் கப்படுகிறோம். நீதிமான்களுக்கு எதிராக எத்தனை பேர் சூழ்ச்சி செய்தாலும் கடவுள் அவர் களுக்கு துணை நிற்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். நம்மில் இருக்கும் தீய நாட்டங்களுக்கு இடம் கொடுக்காமல், இயேசுவைப் போன்று கடவுளின்
திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாய் வாழ நாம் அழைப்பு பெற்றுள்ளோம். நம்மில் யார் பெரியவர் என்ற போட்டியில் நம்மை இழந்துவிடாமல், கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றும் பணியாளர்களாக செயல்படும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
இன்றைய முதல் வாசகம் நீதிமான்களுக்கு எதிராக பொல்லாதவர்கள் செய்கிற சூழ்ச் சியைப் பற்றி எடுத்துரைக்கிறது. நாம் கடவுளுக்கு உகந்த நீதிமான்களாக வாழ்ந்தால், இவ்வுலகின் மக்கள் நம்மைத் துன்புறுத்த திட்டம் தீட்டலாம். ஆனால், பகைவர்களின் கையிலிருந்து நம்மை விடுவித்து காக்க கடவுள் வல்லவர் என்பதை புரிந்துகொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளின் துணையை நம்பி, நீதிமான்களாக வாழும் வரம் கேட்டு, இந்த
வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.
முதல் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
இரண்டாம் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, ஞானம் காட்டும் வழியில் தூய்மையாக வாழுமாறு அழைப்பு விடுக்கிறார். சிற்றின்ப நாட்டங்களில் ஆர்வம் கொள் வதையும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதையும் கண்டிக்கிறார். அமைதியை நாடும் ஞானத்தால் இரக்கமுள்ள நற்செயல்களைச் செய்து நீதியின் கனியை விளைவிக்குமாறு அறிவுறுத்துகிறார். தூய உள்ளத்தோடு, நீதியை நிலைநாட்டுபவர்களாக வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

1. பணியாற்ற அழைப்பவராம் இறைவா,
எங்கள் திருத்தந்தை,
ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமக்கு உகந்த பணியாளர்களாக திருச்சபையின் மக்களை வழிநடத்த தேவையான ஞானத்தை வழங் கிட வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
2. ஞானத்தை தருபவராம் இறைவா,
உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் உம்மைப் பற்றிய ஞானத்தைப் பெற்றுக் கொள்ளவும், வன்முறைகளில் இருந்து மக்களை விலக்கி காத்து, அமைதியை நிலைநாட் டவும் தேவையான உறுதியை அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. நீதியின் நாயகராம் இறைவா,
எம் நாட்டு மக்கள் அனைவரும், நீதியின் வழியில் அமைதியை விரும்புபவர்களாக வாழவும், சண்டை சச்சரவுகளுக்கு இடம் கொடுக்காமல் மனித நேயத்தோடு செயல்பட வும் தேவையான தூய உள்ளத்தை தந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. துன்பங்களை நீக்குபவராம் இறைவா,
உலகெங்கும் நீதிக்காகவும், அமைதிக்காகவும் ஏங்கும் உமது மக்களின் துன்பங்களை நீக்கி, அவர்கள் விரும்பும் நீதியும் அமைதியும் நிறைந்த உலகை உருவாக்கிட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
உலகெங்கும் நீதிக்காகவும், அமைதிக்காகவும் ஏங்கும் உமது மக்களின் துன்பங்களை நீக்கி, அவர்கள் விரும்பும் நீதியும் அமைதியும் நிறைந்த உலகை உருவாக்கிட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நன்மைகளின் பிறப்பிடமாம் இறைவா,
உம் திருவுளத்தை உணர்ந்தவர்களாய், நீதியின் வழியில் நன்மை செய்பவர்களாக வாழத் தேவையான அருள் வரங்களை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக் கள் அனைவர் மீதும் பொழிந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.