பொதுக்காலம் 22-ம் ஞாயிறு
முதல் வாசகம்: இணைச்சட்டம் 4:1-2,6-8
இஸ்ரயேலரே! கேளுங்கள்: "நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள்
முறைமை களின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின்
கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை
உரிமையாக்குவீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு
எதையும் சேர்க்க வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள்
கடவுளாகிய ஆண்டவரின் கட்டளை களை நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்;
அவற்றைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவற் றைப் பின்பற்றி நடங்கள். அதுவே
மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த
நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும் உண்மை யில் இப்பேரினம் ஞானமும்
அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார்.
அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம்
ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத்
தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு
பேரினம் ஏதாகிலும் உண்டா?"
இரண்டாம் வாசகம்: யாக்கோபு 1:17-18,21-22,27
சகோதர
சகோதரிகளே, நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான
விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வ கையான மாற்றமும் இல்லை;
அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்பு களுள் நாம்
முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன் றெடுக்க
அவர் விரும்பினார். உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணி வோடு
ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள். தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு
எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்க ளையும் கவனித்தலும்,
உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.
நற்செய்தி வாசகம்: மாற்கு 7:1-8,14-15,21-23