பொதுக்காலம் 26-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் இருபத்தாறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள்
அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். நமது பாவ இயல்புகளைக் களைந்துவிட்டு கடவு ளுக்கு உரியவர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. உண்மை கடவுளை அறிந்துகொள்ளாத மற்றவர்கள் முன்னிலையில், கடவுளுக்கு சான்று பகர்பவர்களாக வாழவும், கிறிஸ்துவின் பெயரால் நற்செயல் புரிவோரை ஏற்றுக்கொள்ள வும் நாம் அழைக்கப்படுகிறோம். நமது உடல் உறுப்புகளைக் கொண்டு பாவம் செய்வதை விட, அவற்றை வெட்டி எரிந்துவிடுவதே நல்லது என்ற கடுமையான வார்த்தைகள் இயேசுவின் வாயில் இருந்து புறப்படுவதை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். ஆண்டவரின் ஆவியைப் பெற்றவர்களாய், புனிதமான வாழ்வு வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
இன்றைய முதல் வாசகம் மோசேயைத் தவிர, கடவுளின் ஆவியைப் பெற்ற மேலும் எழுபது பேர் இறைவாக்கு உரைத்ததைப் பற்றி எடுத்துரைக்கிறது. அவர்களில் இருவர் பாளையத்தில் இறைவாக்கு உரைத்ததைக் கண்டு, அவர்களைத் தடுத்து நிறுத்துமாறு யோசுவா மோசேயிடம் கேட்பதைக் காண்கிறோம். மோசேயோ கடவுளின் திட்டத்தில் நாம் குறுக்கிடக்கூடாது என்பதை உணர்த்தும் பதிலை அளிக்கிறார். கடவுளின் திட்டத்தை சரியாக உணர்ந்து வாழும் வரம் கேட்டு, இந்த
வாசகத்துக்கு செவிகொடுப்போம்.
முதல் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, தீய வழியில் செல்வம் சேர்ப் போரின் இழிநிலையைப் பற்றி எடுத்துரைக்கிறார். பிறருடைய உழைப்புக்குரிய ஊதியத் தினை வழங்காமல், அதில் சேர்த்த செல்வத்தைக் கொண்டு வாழ்வோருக்கு கேடு விளை யும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இவ்வுலக செல்வமும், ஆடம்பர வாழ்வும் நிலையற் றவை என்பதை உணர நமக்கு அழைப்பு விடுக்கிறார். உலகப் பொருட்களாலும், இன்பங் களாலும் மயங்கிவிடாமல், கடவுளுக்கு உரியவர்களாக வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

1. புனிதத்தின் ஊற்றாம் இறைவா,
உமது திருச்சபையின் வழிகாட்டிகளாக நீர் தேர்ந்தெடுத்துள்ள எங்கள்
திருத்தந்தை,
ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், இவ்வுலகின் தீய வழிகளில் இருந்து விலகி, புனிதம் நிறைந்த வாழ்வு வாழத் தேவையான அருளை வழங்க வேண்டுமென்று
உம்மை
மன்றாடுகிறோம்.
2. இறைவாக்கினரை உருவாக்குபவராம் இறைவா,
உமது திருச்சபையின் மக்கள் அனைவரும், உம்மைப் பற்றிய உண்மைகளுக்கு சான்று பகரும் இறைவாக்கினர்களாய் திகழ்ந்து, உலக மக்களை மனந்திருப்பத் தேவையான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. அற்புதங்கள் நிகழ்த்துபவராம் இறைவா,
உண்மை கடவுளாகிய உம்மைப் புறக்கணித்து வாழும் எம் நாட்டு மக்கள் அனைவரும், உமது மேலான வல்ல செயல்களாலும், அகத் தூண்டுதலாலும் உம்மை அறிந்து ஏற்றுக் கொள்ளத் தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. விடுதலை அளிப்பவராம் இறைவா,
உலக மக்களிடையே நிலவும் தீய நாட்டங்கள், பயங்கரவாதப் போக்குகள், வன்முறை ஆர்வங்கள், பழிவாங்கும் எண்ணங்கள் ஆகியவற்றைக் களைந்து, நீதியும் அன்பும் அமை தியும் நிலவும் சூழல் உருவாக உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. தூய்மையின் பிறப்பிடமாம் இறைவா,
எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது ஆவியைப் பெற்றவர்களாய் தூய வாழ்வு வாழ்ந்து, பிறர் முன்னிலையில் உமக்கு சான்று பகரும் இறைவாக்கினர்களாய் திகழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.