பொதுக்காலம் 25-ம் ஞாயிறு
முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 2:12,17-20
பொல்லாதவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்வதாவது: 'நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண் டிக்கிறார்கள்; நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள். நீதிமான்க ளுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்க ளுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். அவர்களது கனிவி னைக் கண்டு கொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன் புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடு வோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.'
இரண்டாம் வாசகம்: யாக்கோபு 3:16-4:3
அன்பிற்குரியவர்களே, பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில்
குழப்ப மும் எல்லாக் கொடுஞ்செயல்களும் நடக்கும். விண்ணிலிருந்து வரும்
ஞானத்தின் தலை யாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்;
பொறுமை கொள் ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும்
நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த
அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது. உங்களிடையே
சண்டை சச்ச ரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக்
கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது
கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற
முடியாததால் சண்டை சச்சரவுகள் உண்டாக்கு கிறீர்கள். அதை நீங்கள் ஏன்
பெறமுடிவதில்லை? நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன்
அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கி றீர்கள்; சிற்றின்ப
நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள்.
நற்செய்தி வாசகம்: மாற்கு 9:30-37