பொதுக்காலம் 27-ம் ஞாயிறு
முதல் வாசகம்: தொடக்க நூல் 2:18-24
அனைத்தையும் படைத்து முடித்த பின் ஆண்டவராகிய கடவுள், "மனிதன் தனிமையாக
இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்'' என்றார். ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப்
பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க,
அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன
பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள்,
காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத்
தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை. ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன்
உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச்
சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா
எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார்.
அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும்
ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்''
என்றான். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன்
ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 2:9-11
சகோதர சகோதரிகளே, நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்று
தாழ்ந்த வராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும்
மாண்பும் இவ ருக்கு முடியாக சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின்
அருளால் அனைவ ருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்படவேண்டியிருந்தது.
கடவுள் எல்லாவற்றை யும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை
மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பிய போது, அவர்களது மீட்பைத்
தொடங்கி வழிநடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற
செயலே. தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல்
ஒன்றே. இதனால் இயேசு இவர்க ளைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க
வெட்கப்படவில்லை.
நற்செய்தி வாசகம்: மாற்கு 10:2-16