திருவருகைக்காலம் 4-ம் ஞாயிறு
ஆண்டவர் கூறுவது இதுவே: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின்
குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என்
சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ
ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை
பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய
இனத் தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள்.
அவர் வரும் போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின்
மாட்சி யோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி
வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை
பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 10:5-10
சகோதர சகோதரிகளே, கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, "பலியையும் காணிக்கையை யும் நீர்
விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும்
பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. எனவே நான் கூறியது: என்
கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன். என்னைக் குறித்துத்
திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது'' என்கிறார்.
திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதி லும், "நீர் பலிகளையும் காணிக்கைகளையும்
எரிபலிகளையும் பாவம் போக்கும் பலிகளை யும் விரும்பவில்லை; இவை உமக்கு
உகந்தவையல்ல'' என்று அவர் முதலில் கூறுகி றார்.
பின்னர், "உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்'' என்கிறார்.
பின் னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். இந்தத்
திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச்
செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.
நற்செய்தி வாசகம்: லூக்கா 1:39-45