Wednesday, December 5, 2012

டிசம்பர் 9, 2012

திருவருகைக்காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
   திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்துவின் வருகைக்காக தயாரிக்கும் நாம், இன்று திரு முழுக்கு யோவானின் அழைப்பை சிந்திக்க அழைக்கப்படுகிறோம். நம் பாவங்களுக்கு மன்னிப்பு பெறும் வகையில், மனம்மாற வேண்டுமென யோவான் நமக்கு அழைப்பு விடுக் கிறார். ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்யும் வகையில், கோணலானவை அனைத்தும் நேராக்கப்பட வேண்டும். ஆண்டவர் முன்னிலையில் தூயவராக நிற்குமாறு, நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வாழ இன்றைய திரு வழிபாடு நம்மை அழைக்கிறது. ஆண்டவருக்காக நமது பாதையைச் செம்மையாக்கும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம் கடவுளின் பிள்ளைகளாக வாழ்வோர் பெறும் மாட்சியின் பேரழகை பற்றி எடுத்துரைக்கிறது. ஆண்டவரிடம் இருந்து வரும் நீதியை நாம் ஆடையை அணிந்துகொள்ளும் பொழுது, அவரது மாட்சியை நாம் மணிமுடியாக சூடிக்கொள்ள முடியும் என்ற வாக்குறுதி இங்கு தரப்படுகிறது. ஆண்டவரின் பாதையில் நடப்போரின் பாதுகாப்புக்காக, குன்றுகளும் பள்ளத்தாக்குகளும் சமதளமாக்கப்படும் என்ற இறைவாக் கினை காண்கிறோம். கடவுளின் ஒளியில் அவரது இரக்கத்திலும், நீதியிலும் மகிழ்ச்சி யுள்ளவர்களாய் வாழ வரம் கேட்டு, இந்த வாசகத் துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூர் பவுல், கிறிஸ்தவர்கள் அனைவரும் கடவு ளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் வாழ வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டு கிறார். கிறிஸ்து இவ்வுலகிற்கு மீண்டும் வரும் நாள் வரை, நாம் கடவுளைப் பற்றிய அறி விலும், அன்பு மற்றும் நற்செயல்களுடன் கூடிய பண்பிலும் மேன்மேலும் வளர வேண்டு மென்று அறிவுறுத்துகிறார். நாம் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று, குற்றமற்றவர் களாக நேர்மையோடு வாழ வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மாட்சி மிகுந்தவராம் இறைவா, 
   உமது திருமகனின் வருகைக்காக உமக்காக வழியை ஆயத்தம் செய்பவர்களாக வாழும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறை வாகப் பொழிந்து, புனிதத்தில் வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதி நிறைந்தவராம் இறைவா,
   
மக்களிடையே இரக்கமும், நீதியும், அன்புடன் கூடிய நற்செயல்களும் பெருக உழைக் கும் நல்ல மனதினை உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. புனிதம் மிகுந்தவராம் இறைவா,
 
புனிதத்துக்கு எதிராக எம் நாட்டில் நிலவும் ஒழுக்க கேடுகளும், பொய்யான வழிபாடு களும் மறையும் வகையில் மக்களிடையே மனமாற்றத்தை உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கம் நிறைந்தவராம் இறைவா,
   அன்பு, நீதி, இரக்கம் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகளால் பல்வேறு துன்பங் களுக்கு ஆளாகியிருக்கும் மக்கள் மீது பரிவு கொண்டு, அவர்களது வேதனை நீங்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நன்மை மிகுந்தவராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் நீதியின் செயல் களால் நிரப்பப்பெற்று, குற்றமற்றவர்களாக வாழத் தேவையான அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.