Thursday, February 28, 2013

மார்ச் 3, 2013

தவக்காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
ஆண்டவருக்கு உரியவர்களே,
  தூயவராம்
ஆண்டவர் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற் கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். ஆண்டவர் முன்னிலையில் தூயவர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கி றது. வரலாற்றை வழிநடத்தும் கடவுளின் பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், நமது அழைத்தலின் மேன்மையை உணர அழைக்கப்படுகிறோம். தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும், தங்களை மாசற்ற  பலிப்பொருளாக அர்ப்பணிக்க வேண்டுமென கடவுள் விரும்புகிறார். நாம் பாவிகள் என்பதை உணர்ந்து மனம் மாறும் பொழுது ஆண்டவரின் மீட்பை பெற்றுக்கொள்வோம். "மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அழிவீர்கள்" என்ற இயேசுவின் எச்சரிக்கைக்கு செவிகொடுத்து, தூய வாழ்வு வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
ஆண்டவருக்கு உரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், ஓரேபு மலையில் ஆடு மேய்த்து கொண்டிருந்த மோசேயை ஆண்டவர் அழைத்ததை பற்றி எடுத்துரைக்கிறது. எகிப்திய அடிமைத்தனத்தில் சிக்கித் தவித்த இஸ்ரயேல் மக்களை விடுவித்து, பாலும் தேனும் பொழியும் பரந்ததோர் நாட் டிற்கு அவர்களை நடத்திச் செல்ல ஆண்டவர் மோசேயைத் தேர்ந்தெடுக்கிறார். எரியும் முட்புதரில் மோசேக்கு காட்சி அளித்த கடவுள், அவரிடம் தூய்மையை எதிர்பார்க்கிறார். "உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமானது" என்று ஆண்டவர் மோசேயிடம் அறிவுறுத்துவதைக் காண்கி றோம். என்றென்றும் 'இருக்கின்றவராக இருக்கின்ற' கடவுள் முன்னிலையில் தூயவர்க ளாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆண்டவருக்கு உரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், எகிப்திய அடிமைத்தனத்திலி ருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரயேலரைப் பற்றி எடுத்துரைக்கிறார். பாலைநிலத்தில் அவர் களுக்கு உணவும் தண்ணீரும் கிடைத்த பொழுதும், பெரும்பான்மையோர் ஆண்டவருக்கு எதிராக முணுமுணுத்தனர். கடவுளுக்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் அழிவுக்கு ஆளானார்கள். நாம் மனம் மாறும் பொருட்டு, இவை நமக்கு எச்சரிக்கையாக அமைந் திருக்கின்றன என்பதை திருத்தூதர் சுட்டிக்காட்டுகிறார். பாவத்தின் தீய விளைவினை உணர்ந்தவர்களாய், மனம் மாறிய புதுவாழ்வு வாழும் வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. தூய்மையின் நிறைவாம் இறைவா,
    உமது அருளும் வல்லமையும் பெற்ற ஒருவரை எம் திருச்சபையை வழிநடத்தும் தலைமை பொறுப்புக்கு தேர்வு செய்து, அவர் வழியாக திருச்சபையும் உலகமும் உம்மை நோக்கி முன்னேற துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. என்றும் வாழும் இறைவா,
   உமது திருச்சபையின் உறுப்பினர்களான ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொது நிலையினர் அனைவரும் தங்கள் அழைத்தலின் மேன்மையை உணர்ந்தவர்களாய், தூய கிறிஸ்தவ வாழ்வு வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. இருக்கின்றவராக இருக்கின்ற இறைவா,
   உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும், உமக்கும், உமது மக்களுக்கும் பணி செய்யவே அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, நீதி மற்றும் உண்மையின் பாதையில் மக்களை வழிநடத்த உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மனமாற்றம் அருளும் இறைவா,
   இவ்வுலகின் கவலைகளாலும், பண ஆசையாலும் உம்மை மறந்து, தீமையின் பாதை யில் பயணித்து கொண்டிருக்கும் மதிகெட்ட மனிதர்களை மனந்திருப்பி, தூய வாழ்வு வாழ தூண்டுதல் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. புனிதத்துக்கு அழைக்கும் இறைவா,
   உம் திருமகனின் எச்சரிக்கையை முழுமையாக உணர்ந்தவர்களாய், மாசற்ற புதுவாழ்வு வாழும் வரத்தை எம் பங்கு மக்கள், அருட்சகோதரிகள், பங்குத்தந்தை அனைவருக்கும் வழங்கி ஆசீர்வதிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, February 23, 2013

பிப்ரவரி 24, 2013

தவக்காலம் 2-ம் ஞாயிறு

முதல் வாசகம்: தொடக்கநூல் 15:5-12,17-18,21
   அந்நாள்களில் ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழி மரபினரும் இருப்பர்'' என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். ஆண்டவர் ஆபிராமிடம், "இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே'' என்றார். அதற்கு ஆபிராம், "என் தலைவராகிய ஆண் டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்துகொள்வேன்?'' என்றார். ஆண்டவர் ஆபிராமிடம், "மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள் ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா'' என்றார். ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டு வந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்ட வில்லை. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார். கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. கதிரவன் மறைந்ததும் இருள் படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்துகொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன. அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, "எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்'' என்றார்.
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 3:17-4:1
   சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். கிறிஸ்து வின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப்பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. நமக்கோ விண்ணகமே தாய் நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக் கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர். ஆகவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 9:28-36
   அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக் கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். அவர் வேண்டிக் கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண் மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக்கொண்டிருந் தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேற இருந்த அவருடைய இறப்பைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்க கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள். அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல் லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங் களை அமைப்போம்'' என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழ லிட்டது. அம்மேகம் அவர்களைச் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள். அந்த மேகத்தி னின்று, "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவி சாயுங்கள்'' என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல் லாமல் அமைதி காத்தார்கள்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, February 21, 2013

பிப்ரவரி 24, 2013

தவக்காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
மாட்சிக்கு உரியவர்களே,
  எல்லாம் வல்ல ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். நம் 
ஆண்டவர் இயேசுவின் மாட்சியில் பங்குபெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் மாட்சியில் பங்குபெற வேண்டுமெனில், முதலாவதாக நாம் அவரது பாடுகளில் பங்கேற்க வேண்டும். நாம் இயேசுவோடு இணையும்போது, இறைத்தந்தையின் உரிமை பிள்ளைகளாக மாற முடியும். இறைமாட்சியில் நாம் பங்கு பெறும்போது, பேதுருவைப் போன்று இயேசுவோடு இருப்பது நலம் என்பதை உணர் வோம். கிறிஸ்து இயேசுவின் வழியாக இறைவன் தரும் மாட்சியை உரிமையாக்கி கொள்ள வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
மாட்சிக்கு உரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், கடவுள் மீது ஆபிரகாம் கொண்ட நம்பிக்கையைப் பற்றி எடுத் துரைக்கிறது. ஆண்டவர் ஆபிரகாமுக்கு நாட்டை உரிமைச்சொத்தாக வழங்குவது குறித்த உடன்படிக்கையை செய்து கொள்வதைப் பற்றி வாசிக்க கேட்கிறோம். வானத்து விண் மீன்களைப் போன்று, ஆபிரகாமின் வழிமரபினரை பெருகச் செய்ய இருப்பதாக ஆண்டவர் வாக்களிக்கிறார். ஆண்டவரின் வாக்குறுதிகளுக்கு ஆபிரகாமின் நம்பிக்கையே காரணம் என விவிலியம் கூறுகிறது. நாமும் ஆபிரகாமைப் போல கடவுள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, அவரது ஆசிகளை உரிமையாக்கி கொள்ளும் வரம் கேட்டு, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
மாட்சிக்கு உரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துவின் சிலுவையே மீட் புக்கு வழி என்பதை எடுத்துரைக்கிறார். சிலுவைக்கு பகைவர்களாய் இருப்போர் மானக் கேட்டுக்கும், அழிவுக்கும் ஆளாவர் என்று தெளிவுபடுத்துகிறார். இறைமகன் இயேசு மனிதரின் நிலைக்கு தம்மை தாழ்த்தியதால், நம்மை மாட்சிக்கு உரியவர்களாய் மாற்ற வல்லவர் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருந்து, அவர் தரும் உருமாற்றத்தை பெற்று மகிழும் வரம் கேட்டு, இவ்வாசகத் திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மாட்சி மிகுந்தவரா இறைவா,
   திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், ஆபிரகாம் கொண்ட நம்பிக்கையின் வழிமரபினராக விளங்கும் திருச்சபையின் மக்களை, உமது மாட்சிக்கு உகந்தவர்களாக உருமாற்றும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மகத்துவம் மிக்கவரா இறைவா,
       சிலுவை வழியாக உம் திருமகன் நிறைவேற்றிய மீட்புச் செயலை, உலக மக்கள் எல் லோரும் அறிந்து ஏற்றுக்கொள்ளவும், உம்மில் நம்பிக்கை கொண்டவர்களாய் நீர் தரும் மாட்சியை உரிமையாக்கவும் அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நலம் அளிப்பவரான இறைவா,
   எம் நாட்டு மக்களிடையே நிலவும் தவறான நம்பிக்கைகள், கொள்கைகள், கோட்பாடு கள் அனைத்தும் மறையவும், தீமை, வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றின் மீதான வெறுப்புணர்வு பெருகவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நிறைவு தருபவரா இறைவா,
   உலக ஆசைகளாலும், போட்டி, பொறாமையினாலும் மன அமைதி இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், உமது மாட்சியில் நிறைவு காண்பவர்களாய் வாழ்ந்து, அமைதியை யும் மகிழ்ச்சியையும் சுவைக்க வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உருமாற அழைப்பவரா இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது நிறைவான ஆசீரைப் பெற்று உருமாறியவர்களாய், உலகத்தின் முன்னிலையில் இறை மாட்சிக்கு உகந்த புதுவாழ்வு வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, February 16, 2013

பிப்ரவரி 17, 2013

தவக்காலம் முதல் ஞாயிறு

முதல் வாசகம்: இணைச்சட்டம் 26:4-10
   மோசே மக்களை நோக்கிக் கூறியது: "முதற்பலன் நிறைந்த கூடையை குரு உன் கையி லிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார். நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: நிரந் தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அன்னியராய் இருந்தார். ஆனால் அங்கேயே பெரிய, வலிமைமிகு, திர ளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார். எகிப்தியர் எங்களை ஒடுக்கினர்; துன்புறுத் தினர்; கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர். அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்ட வர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியை யும் கண்டார். தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப் படச் செய்தார். அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டி வந்தார். பாலும் தேனும் வழிந் தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார். எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற் பலனைக் கொண்டுவந்துள்ளேன் என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்."
இரண்டாம் வாசகம்: உரோமையர் 10:8-13
   சகோதர சகோதரிகளே, மறைநூலில் சொல்லியிருப்பது இதுவே: "வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.'' இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும். ஏனெனில், 'இயேசு ஆண் டவர்' என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவு ளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், "அவர்மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்'' என்பது மறைநூல் கூற்று. இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்ட வர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். "ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்பு பெறுவர்'' என்று எழுதியுள்ளது அல்லவா?

நற்செய்தி வாசகம்: லூக்கா 4:1-13
   அக்காலத்தில் இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றைவிட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட் டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன் றும் சாப்பிடவில்லை. அதன்பின் அவர் பசியுற்றார். அப்பொழுது அலகை அவரிடம், "நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்'' என்றது. அதனிடம் இயேசு மறுமொழியாக, "'மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை' என மறைநூ லில் எழுதியுள்ளதே'' என்றார். பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் அவருக்குக் காட்டி, அவரிடம், "இவற் றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற் றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்'' என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, "'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக' என்று மறைநூலில் எழுதியுள்ளது'' என்றார். பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, "நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; 'உம்மைப் பாது காக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்' என்றும் 'உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள் வார்கள்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது'' என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, "'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே'' என்றார். அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்த பின்பு, ஏற்ற காலம் வரும் வரை அவரை விட்டு அகன்றது.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, February 14, 2013

பிப்ரவரி 17, 2013

தவக்காலம் முதல் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   மீட்பளிக்கும் கடவுளின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வர வேற்கிறோம்.
மனமாற்றத்திற்கு தூண்டும் காலமாகிய தவக்காலத்தின் முதல் ஞாயிறை நாம் இன்று சிறப்பிக்கின்றோம். உலகப் பொருட்களால் ஏற்படும் சோதனைகளுக்கு மயங் காமல், கடவுளுக்கு முழு மனதோடு பணிபுரிய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு திருமுழுக்கு பெற்று, தன் பணிவாழ்வைத் தொடங்கும் முன் பாலை நிலத்தில் தனித்திருந்து இறைவனோடு உறவாடினார். அவ்வேளையில் அலகை அவரை சோதித்தபோது, கடவுளில் முழு நம்பிக்கை கொள்ளும் வழியை நமக்கு காட்டினார். அலகையின் தந்திர மொழிகளில் ஏமாறாமல், அந்த சோதனைகளை இயேசு வெற்றி கொண்டார். அவரைப் பின்பற்றி கடவுளுக்கு எதிராக நம் வாழ்வில் வரும் சோதனை களை முறியடிக்கும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில் மோசே, கடவுளின் மீட்பளிக்கும் ஆற்றலை நினைவு கூரும் வழியை இஸ்ரயேல் மக்களுக்கு கற்பிக்கிறார். எகிப்தியரால் கடுமையாக ஒடுக் கப்பட்ட இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கி கூக்குரல் எழுப்பியபோது, ஆண்டவர் தம் ஓங்கிய புயத்தின் ஆற்றலால் அவர்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டதை மோசே நினைவூட்டுகிறார். ஆண்டவர் வழங்கிய பாலும் தேனும் பொழியும் புதிய நாட்டுக்காக நன்றி செலுத்த அவர் அழைப்பதையும் இங்கு காண்கிறோம். நம் பாவச்சூழலில் இருந்து விடுபட ஆண்டவரின் உதவியை நாடி, அவர் அளிக்கும் விண்ணக நாட்டை உரிமையாக்கி கொள்ளும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், இயேசுவில் நம்பிக்கை கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறார். இறைவனின் வார்த்தையாக விளங்கும் இயேசுவை நம் ஆண்டவராகவும் மீட்பராகவும் ஏற்க அழைக்கப்படுகிறோம். மரணத்தை வென்று உயிர்த் தெழுந்த கிறிஸ்து இயேசுவில் நம்பிக்கை கொள்ளும் எவரும் வெட்கமடைவதில்லை என்ற உறுதியை பவுல் நமக்கு வழங்குகிறார். ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கை யிட்டு மன்றாடும்போது, நலன்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்வோம் என்பதில் நம் பிக்கை கொண்டவர்களாக வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவி கொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஆசி வழங்குபவராம் இறைவா,
   புதிய இஸ்ரயேலாம் திருச்சபையை வழிநடத்தி வரும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் நீர் வாக்களித்த விண்ணக நாட்டை நோக்கி மக் களை அழைத்து செல்ல, ஆசி வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மீட்பு அளிப்பவராம் இறைவா,
   உமது திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்து வாழியாக நீர் அளித்த மீட்பை, உலக மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு நாடித் தேடி பெற்றுக்கொள்ள உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. புத்துயிர் கொடுப்பவராம் இறைவா,
   தங்கள் மீட்புக்காக உம்மை நோக்கி கூக்குரல் எழுப்பவும், உமது அருளின் உயிரைப் பெற்றவர்களாய் கிறிஸ்துவின் மரணம், உயிர்ப்பு ஆகியவை வழியாக நீர் அளிக்கும் மீட்பை சுவைத்து மகிழவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆற்றல் தருபவராம் இறைவா,
   இவ்வுலகில் எழும் பலவித சோதனைகளால் வாழ்வின் நோக்கத்தை மறந்து திசைமாறி அலையும் மனிதகுலத்துக்கு, உமது அருள் ஒளியால் தீமைகளை வென்று விண்ணக வாழ்வை உரிமையாக்கும் ஆற்றலைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. புதுவாழ்வுக்கு அழைப்பவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், பாவச்சூழல்களால் வரும் சோதனைகளில் வெற்றிபெற்று, உம் மீதான நம்பிக்கையில் முழு மனதோடு நிலைத்திருக்கவும், உமக்கு ஏற்புடைய வாழ்வு வாழவும் துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, February 9, 2013

பிப்ரவரி 10, 2013

பொதுக்காலம் 5-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 6:1-8
   உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர். அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: 'படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது' என்று உரத்த குரலில் கூறிக்கொண்டிருந்தார். கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித் தளங்கள் அசைந்தன; கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது. அப்பொழுது நான், "ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்ட வராகிய அரசரை என் கண்கள் கண்டனவே'' என்றேன். அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப்பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக்கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு, "இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப் பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது'' என்றார். மேலும் "யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?'' என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, "இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்'' என்றேன்.
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 15:1-11
   சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே. நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட் டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லா ருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்ற வன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகி விடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத் தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடு இருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது. நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 5:1-11
   ஒரு நாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஏரிக் கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறி னார். அவர் கரையிலிருந்து அதை சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார். அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, "ஆழத்திற்கு தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங் கள்'' என்றார். சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்'' என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித் தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளை யும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையில் இருந்தன. இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்'' என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, "அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்'' என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, February 7, 2013

பிப்ரவரி 10, 2013

பொதுக்காலம் 5-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கடவுளுக்காக மனிதரைப் பிடிப்பவர்களாக மாற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது பாவத்தின் காரணமாக கடவுளின் பணியை செய்வதற்கான தகுதியை இழந்துவிட்டதாக கருத வேண்டியதில்லை என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். அதேவேளையில், கடவுளின் முன்னிலையில் நமது சிறுமை நிலையை ஏற்றுக்கொண்டு தாழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற படிப்பினையும் நமக்கு வழங்கப்படுகிறது. சீமான் பேதுரு தன சொந்த விருப்பத்தின்படி செயல்படாமல், இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால் அவருக்கு ஏராளமான மீன்கள் கிடைத் தன. நாமும் கடவுளின் திட்டத்துக்கு ஏற்ப வாழ்ந்து, அவரது அருளின் கொடைகளை நிறைவாய் பெற்றுக்கொள்ளவும், பேதுருவைப் போன்று ஆண்டவருக்காக மனிதரைப் பிடிப்பவர்களாய் மாறவும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
     இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் எசாயாவின் அழைப்பை பற்றி எடுத்துரைக் கிறது. ஆண்டவரின் முன்னிலையில் எசாயா தன்னை தாழ்த்திக் கொள்வதை காண்கி றோம். தூய்மையற்ற உதடுகளை உடையவராக தன்னை கருதும் எசாயா ஆண்டவர் முன்னிலையில் நடுங்குகிறார். ஆண்டவரின் இரக்கமோ எசாயாவின் குற்றங்களை மன்னித்து, அவரை தூய்மைப்படுத்துகிறது. ஆண்டவரால் தொடப்பட்டதும், இறைவாக்கு பணிக்கு அர்ப்பணிக்கும் மனநிலையை எசாயா உடனடியாக பெற்றுக்கொள்கிறார். நாமும் ஆண்டவர் முன்னிலையில் நமது பாவங்களை அறிக்கையிட்டு, அவரது தூய இறைவாக் கினராக மாறும் வரம் கேட்டு, இவ்வாசகத்தை உளமேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், தான் திருச்சபையை துன்புறுத்திய வேளையிலும், கடவுளின் அருளால் தேர்ந்தெடுக்கப்பட்டதை குறித்து எடுத்துரைக்கிறார். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும், கிறிஸ்துவின் நற்செய்தியில் உறுதி யாக நிலைத்திருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறார். திருத்தூதர்களால் அறிவிக் கப்பட்ட கிறிஸ்துவின் நற்செய்தியை உறுதியாகப் பற்றிக்கொள்வதன் மூலமே நாம் மீட்பு பெற முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறார். இறைமகனில் முழு மையான நம்பிக்கை கொண்டு, மற்றவர்களிடையே நற்செய்தியை பறைசாற்றும் தூதுவர் களாய் செயலாற்ற வரம் கேட்டு, இவ்வாசகத்தை உளமேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. திருப்பணிக்கு அழைப்பவராம் இறைவா, 
   உமது திருச்சபையில் வழிகாட்டிகளாக விளங்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது முன்னிலையில் தங்கள் சிறுமை நிலையை உணர வும், உம் பணிக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்கவும் துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. உலகோரின் நற்செய்தியாம் இறைவா,
  உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும், மக்களிடையே அமைதியும் ஒற்றுமையும் ஏற்பட உழைக்கவும், உமது திருமகனின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்
டு அன்பின் நற்செய்தியை பறைசாற்றவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மாட்சிமையின் மன்னராம் இறைவா,
  
எம் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், பிற சமய மக்கள் முன்னிலையில் வல்ல இறைவாக்கினராய் திகழ்ந்து, உமக்காக மனிதரைப் பிடிப்பவர்களாய் திகழ உதவி புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நன்மைகளின் நாயகராம் இறைவா,
   உலகில் அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை குறைந்து வருவதால் செய்யப் படும் குற்றங்களும், அமைதியின்மையால் வரும் உடல், மன நோய்களும் மறைய தயை புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. கொடைகளின் வள்ளலாம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது முன்னிலை யில் தங்களைத் தாழ்த்திக்கொண்டு, எளிய மனதோடு உமது நற்செய்தியைப் பறைசாற்று பவர்களாக வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, February 2, 2013

பிப்ரவரி 3, 2013

பொதுக்காலம் 4-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எரேமியா 1:4-5,17-19
   எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: "தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களி னங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன். நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்க முறச் செய்வேன். இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள் ளேன். அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்'' என்கிறார் ஆண்டவர்.
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 12:31-13:13
   சகோதர சகோதரிகளே, நீங்கள் மேலான அருள்கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். எல்லாவற்றையும் விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன். நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும், என்னிடம் அன்பு இல்லை யேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும், என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும், என்னிடம் அன்பு இல்லையேல் எனக் குப் பயன் ஒன்றுமில்லை. அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப் படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்தி லும் மன உறுதியாய் இருக்கும். இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப் பேச்சுப் பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒரு போதும் அழியாது. ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்து போம். நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தை யின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவ னான போது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன். ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன். ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

நற்செய்தி வாசகம்: லூக்கா 4:21-30
   இயேசு தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?'' எனக் கூறி எல்லாரும் அவ ரைப் பாராட்டினர். அவர் அவர்களிடம், "நீங்கள் என்னிடம், 'மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்' என்னும் பழமொழியைச் சொல்லி, 'கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்கு சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப் படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப் பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது'' என்றார். தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3