தவக்காலம் முதல் ஞாயிறு
மோசே மக்களை நோக்கிக் கூறியது: "முதற்பலன் நிறைந்த கூடையை குரு உன்
கையி லிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன்
வைப்பார். நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக்
கூறவேண்டியது: நிரந் தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு
இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அன்னியராய் இருந்தார். ஆனால்
அங்கேயே பெரிய, வலிமைமிகு, திர ளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார்.
எகிப்தியர் எங்களை ஒடுக்கினர்; துன்புறுத் தினர்; கடினமான அடிமை வேலைகளை
எங்கள்மீது சுமத்தினர். அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல்
எழுப்பினோம். ஆண்ட வர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும்
வருத்தத்தையும் அவதியை யும் கண்டார். தம் வலிய கரத்தாலும், ஓங்கிய
புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும்,
அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப் படச் செய்தார்.
அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டி வந்தார். பாலும் தேனும் வழிந் தோடும்
இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார். எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற் பலனைக்
கொண்டுவந்துள்ளேன் என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில்
வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்."
இரண்டாம் வாசகம்: உரோமையர் 10:8-13
சகோதர
சகோதரிகளே, மறைநூலில் சொல்லியிருப்பது இதுவே: "வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது;
உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.'' இதுவே நீங்கள் நம்பிக்கை
கொள்ளவேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும். ஏனெனில், 'இயேசு
ஆண் டவர்' என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச்
செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு
உள்ளூர நம்புவோர் கடவு ளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர்
மீட்புப் பெறுவர். ஏனெனில், "அவர்மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு
உள்ளாக மாட்டார்'' என்பது மறைநூல் கூற்று.
இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்ட வர்
ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப்
பொழிகிறார். "ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும்
மீட்பு பெறுவர்'' என்று எழுதியுள்ளது அல்லவா?
நற்செய்தி வாசகம்: லூக்கா 4:1-13
சிந்தனை: வத்திக்கான் வானொலி