Thursday, February 7, 2013

பிப்ரவரி 10, 2013

பொதுக்காலம் 5-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கடவுளுக்காக மனிதரைப் பிடிப்பவர்களாக மாற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது பாவத்தின் காரணமாக கடவுளின் பணியை செய்வதற்கான தகுதியை இழந்துவிட்டதாக கருத வேண்டியதில்லை என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். அதேவேளையில், கடவுளின் முன்னிலையில் நமது சிறுமை நிலையை ஏற்றுக்கொண்டு தாழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற படிப்பினையும் நமக்கு வழங்கப்படுகிறது. சீமான் பேதுரு தன சொந்த விருப்பத்தின்படி செயல்படாமல், இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால் அவருக்கு ஏராளமான மீன்கள் கிடைத் தன. நாமும் கடவுளின் திட்டத்துக்கு ஏற்ப வாழ்ந்து, அவரது அருளின் கொடைகளை நிறைவாய் பெற்றுக்கொள்ளவும், பேதுருவைப் போன்று ஆண்டவருக்காக மனிதரைப் பிடிப்பவர்களாய் மாறவும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
     இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் எசாயாவின் அழைப்பை பற்றி எடுத்துரைக் கிறது. ஆண்டவரின் முன்னிலையில் எசாயா தன்னை தாழ்த்திக் கொள்வதை காண்கி றோம். தூய்மையற்ற உதடுகளை உடையவராக தன்னை கருதும் எசாயா ஆண்டவர் முன்னிலையில் நடுங்குகிறார். ஆண்டவரின் இரக்கமோ எசாயாவின் குற்றங்களை மன்னித்து, அவரை தூய்மைப்படுத்துகிறது. ஆண்டவரால் தொடப்பட்டதும், இறைவாக்கு பணிக்கு அர்ப்பணிக்கும் மனநிலையை எசாயா உடனடியாக பெற்றுக்கொள்கிறார். நாமும் ஆண்டவர் முன்னிலையில் நமது பாவங்களை அறிக்கையிட்டு, அவரது தூய இறைவாக் கினராக மாறும் வரம் கேட்டு, இவ்வாசகத்தை உளமேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், தான் திருச்சபையை துன்புறுத்திய வேளையிலும், கடவுளின் அருளால் தேர்ந்தெடுக்கப்பட்டதை குறித்து எடுத்துரைக்கிறார். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும், கிறிஸ்துவின் நற்செய்தியில் உறுதி யாக நிலைத்திருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறார். திருத்தூதர்களால் அறிவிக் கப்பட்ட கிறிஸ்துவின் நற்செய்தியை உறுதியாகப் பற்றிக்கொள்வதன் மூலமே நாம் மீட்பு பெற முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறார். இறைமகனில் முழு மையான நம்பிக்கை கொண்டு, மற்றவர்களிடையே நற்செய்தியை பறைசாற்றும் தூதுவர் களாய் செயலாற்ற வரம் கேட்டு, இவ்வாசகத்தை உளமேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. திருப்பணிக்கு அழைப்பவராம் இறைவா, 
   உமது திருச்சபையில் வழிகாட்டிகளாக விளங்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது முன்னிலையில் தங்கள் சிறுமை நிலையை உணர வும், உம் பணிக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்கவும் துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. உலகோரின் நற்செய்தியாம் இறைவா,
  உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும், மக்களிடையே அமைதியும் ஒற்றுமையும் ஏற்பட உழைக்கவும், உமது திருமகனின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்
டு அன்பின் நற்செய்தியை பறைசாற்றவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மாட்சிமையின் மன்னராம் இறைவா,
  
எம் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், பிற சமய மக்கள் முன்னிலையில் வல்ல இறைவாக்கினராய் திகழ்ந்து, உமக்காக மனிதரைப் பிடிப்பவர்களாய் திகழ உதவி புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நன்மைகளின் நாயகராம் இறைவா,
   உலகில் அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை குறைந்து வருவதால் செய்யப் படும் குற்றங்களும், அமைதியின்மையால் வரும் உடல், மன நோய்களும் மறைய தயை புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. கொடைகளின் வள்ளலாம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது முன்னிலை யில் தங்களைத் தாழ்த்திக்கொண்டு, எளிய மனதோடு உமது நற்செய்தியைப் பறைசாற்று பவர்களாக வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.