பொதுக்காலம் 5-ம் ஞாயிறு
உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர்
அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது.
அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு
இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை
மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற
இரண்டால் பறந்தனர்.
அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: 'படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர்,
தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது' என்று உரத்த
குரலில் கூறிக்கொண்டிருந்தார். கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின்
அடித் தளங்கள் அசைந்தன; கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது. அப்பொழுது
நான், "ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன்
நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின்
ஆண்ட வராகிய அரசரை என் கண்கள் கண்டனவே'' என்றேன்.
அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப்பொறி
ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக்கொண்டு என்னை நோக்கிப்
பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு, "இதோ, இந்நெருப்புப்பொறி உன்
உதடுகளைத் தொட்டது. உன் குற்றப் பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம்
மன்னிக்கப்பட்டது'' என்றார்.
மேலும் "யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?'' என வினவும்
என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, "இதோ நானிருக்கிறேன். அடியேனை
அனுப்பும்'' என்றேன்.
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 15:1-11
சகோதர
சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை
நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான்
உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால்
அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும்
நம்பிக்கை பொருளற்றதே.
நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும்
இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து,
அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன்
எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும்
தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே
நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்;
சிலர் இறந்துவிட் டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர்
அனைவருக்கும் தோன்றினார். எல்லா ருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த
குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.
நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத்
தகுதியற்ற வன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால்
இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர்
எனக்களித்த அருள் வீணாகி விடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான்
மிகுதியாகப் பாடுபட்டு உழைத் தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடு
இருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது. நானோ மற்றத்
திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே
நம்பினீர்கள்.
நற்செய்தி வாசகம்: லூக்கா 5:1-11
சிந்தனை: வத்திக்கான் வானொலி