பாஸ்கா காலம் 5-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
ஆண்டவரின் அன்புக்குரியோரே,
நம் அன்பராம் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு
திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நமது ஆண்டவர் இயேசு நம்மை அன்பு செய் தது போன்று, நாமும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டவர்களாய் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் வாழ்வு கடவுளை மாட்சிப்படுத் தியது போல, நம் அன்பு வாழ்வின் வழியாக கடவுளை மாட்சிப்படுத்த நாம் அழைக்கப் பட்டுளோம். இயேசுவின் அழைப்புக்கு ஏற்ப அவரது சீடர்களாய் வாழ்ந்து,
கடவுள் தரும் மாட்சியைப் பெற வரம் வேண்டி, நாம் இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
அன்புக்குரியோரே,
இன்றைய முதல் வாசகம், பவுலும் பர்னபாவும் திருச்சபையின் மக்களை விசுவாசத் தில் உறுதிபடுத்திய நிகழ்வை நமக்கு தருகிறது. லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக் கியா என பல்வேறு இடங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை சந்தித்து, திருத்தூதர்கள் தங்கள் மேய்ப்பு பணியை ஆற்றுவதை இங்கு காண்கிறோம். பல வேதனைகள் வழியா கவே இறையாட்சிக்கு நாம் உட்பட முடியும் என்ற அறிவுரை நமக்கு வழங்கப்படுகிறது. அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று தேர்வு செய்யப்பட்டுள்ள நாம், அந்த பணியை சிறப்பாக நிறைவேற்ற வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.
முதல் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்புக்குரியோரே,
இன்றைய இரண்டாம் வாசகம், புதிய விண்ணகத்தையும் புதிய மண்ணகத்தையும் பற்றி பேசுகிறது. மனிதர் நடுவே உள்ள உறைவிடத்தில் கடவுள் குடியிருப்பார் என்ற வாக்குறுதி நமக்கு வழங்கப்படுகிறது. நம் கண்ணீர் அனைத்தையும் துடைக்கும் கடவுளின் மக்களாக வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். சாவு, துயரம், அழுகை இல்லாத புதிய வாழ்வை வழங்க வல்லவராம் கடவுளில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.
இறைமக்கள் மன்றாட்டு:
1. வாழ்வின் வழியாம் இறைவா,
திருச்சபையின் மக்கள் அனைவரும் இறையன்பிலும், பிறரன்பிலும் வளர வழிகாட்டு பவர்களாய் திகழும் வரத்தை திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ருக்கும் வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வின் ஒளியாம் இறைவா,
கிறிஸ்தவ உண்மைகளை எதிர்ப்பதையே நோக்கமாக கொண்டு வாழும் மாற்று சமயத் தினர் அனைவரும் மனந்திரும்பி, உமது உண்மையின் ஒளியை நோக்கி முன்னேற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. வாழ்வின் இலக்காம் இறைவா,
கிறிஸ்தவர்கள் செய்யும் சமூக நலப் பணிகளை தவறாக கண்ணோக்கும் இயக்கங்களின் வழிகாட்டுதலால் மனதில் நஞ்சு கலந்திருக்கும் இளைஞர்கள், நீரே வாழ்வின் உண்மை யான இலக்கு என்பதை உணர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வின் துணையாம் இறைவா,
நோய், துன்பம், அழுகை போன்றவற்றையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் மக்கள், மன அமைதியையும், மகிழ்ச்சியையும் சுவைக்கும் வகையில் புதிய வாழ்வைக் காண துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வாழ்வின் நிறைவாம் இறைவா,
எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது மாட்சியில் பங்குபெறும் வகையில் அன்பு வாழ்வின் மூலம் கிறிஸ்துவின் சீடர்களாக திகழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.