Saturday, March 29, 2014

மார்ச் 30, 2014

தவக்காலம் 4-ம் ஞாயிறு

முதல் வாசகம்: 1 சாமுவேல் 16:1,6-7,10-13
   அந்நாள்களில் ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "உன்னிடமுள்ள கொம்பை எண்ணெ யால் நிரப்பிக் கொண்டுபோ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்" என்றார். ஈசாயின் புதல்வர்கள் வந்தபோது, அவர் எலியாவைப் பார்த்தவுடனே, "ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்'' என்று எண்ணினார். ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், "அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்'' என்றார். இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். "இவர்களை யும் ஆண்டவர் தேர்ந்துகொள்ளவில்லை'' என்றார் சாமுவேல். தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, "உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?" என்று கேட்க, "இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான்" என்று பதிலளித் தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம், "ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்" என்றார். ஈசாய் ஆள் அனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழ கிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், "தேர்ந்து கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!" என்றார். உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்றுமுதல் ஆண்டவரின் ஆவி தாவீதின்மேல் நிறைவாக இருந்தது.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 23:1-3.3-4.5.6 
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
   ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். (பல்லவி)
   தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக் கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். (பல்லவி)
  என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. (பல் லவி)
   உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடை சூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: எபேசியர் 5:8-14
   சகோதர சகோதரிகளே, ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவ ரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக் கிறது. ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள். பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை குற்றமென எடுத்துக்காட்டுங்கள். அவர்கள் மறைவில் செய்பவற்றைச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது. அவர்கள் செய்வதை எல்லாம் குற்றமென ஒளியானது எடுத்துக்காட்டும் போது அவற்றின் உண்மை நிலை வெளியாகிறது. அவ்வாறு தெளிவாக்கப்படுவது எல் லாம் ஒளி மயமாகிறது. ஆதலால், 'தூங்குகிறவனே, விழித்தெழு; இறந்தவனே, உயிர்பெற் றெழு; கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்' என்று கூறப்பட்டுள்ளது.

வாழ்த்தொலி: யோவான் 8:12
   "உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்: யோவான் 9:1-41
   அக்காலத்தில் இயேசு சென்று கொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். "ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?'' என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட் டார்கள். அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார். பகலாய் இருக்கும்வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண் டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது. நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி'' என்றார். இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்க ளில் பூசி, "நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்'' என்றார். சிலோவாம் என்பதற்கு 'அனுப்பப்பட்டவர்' என்பது பொருள். அவரும் போய்க் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தார். அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், "இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல் லவா?'' என்று பேசிக்கொண்டனர். சிலர், "அவரே'' என்றனர்; வேறு சிலர், "அவரல்ல; அவ ரைப்போல் இவரும் இருக்கிறார்'' என்றனர். ஆனால் பார்வை பெற்றவர், "நான்தான் அவன்'' என்றார். அவர்கள், "உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?'' என்று அவரிடம் கேட்டார்கள். அவர் அவர்களைப் பார்த்து, "இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி, 'சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்' என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது'' என்றார். "அவர் எங்கே?'' என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர்," எனக்குத் தெரியாது'' என்றார். முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டி வந்தார்கள். இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்த நாள் ஓர் ஓய்வுநாள். எனவே, "எப்படிப் பார்வை பெற்றாய்?'' என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர், "இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின் நான் கண்களைக் கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது'' என் றார். பரிசேயருள் சிலர். "ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிட மிருந்து வந்திருக்க முடியாது'' என்று பேசிக்கொண்டனர். ஆனால் வேறு சிலர், "பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?'' எனக் கேட்ட னர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம்", உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?'' என்று மீண்டும் கேட்டனர். "அவர் ஓர் இறைவாக்கினர்'' என்றார் பார்வை பெற்றவர். அவர் பார்வையற்றி ருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை. "பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங் கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?'' என்று கேட்டார்கள். அவருடைய பெற்றோர் மறுமொழியாக, "இவன் எங்களுடைய மகன் தான். இவன் பிறவியிலேயே பார்வையற்றவன்தான். ஆனால் இப்போது எப்படி அவனுக் குக் கண் தெரிகிறது என்பதோ யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்க ளுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன்தானே! நடந்ததை அவனே சொல்லட்டும்'' என்றனர். யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளும் எவரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிட வேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்க ளிடையே உடன்பாடு செய்திருந்தார்கள். அதனால் அவருடைய பெற்றோர், "அவன் வயது வந்தவன்தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்'' என்றனர். பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு அவரிடம், "உண்மையைச் சொல்லி கட வுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்'' என்றனர். பார்வை பெற்றவர் மறுமொழியாக, "அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரி யாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்: நான் பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன்'' என்றார். அவர்கள் அவரிடம், "அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?'' என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, "ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்? ஒருவேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர் களோ?'' என்று கேட்டார். அவர்கள் அவரைப் பழித்து, "நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள். மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்; இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது'' என்றார்கள். அதற்கு அவர், "இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார்; அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே! பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்ப தில்லை; இறைப்பற்று உடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவிசாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும். பிறவியிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே! இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது'' என்றார். அவர்கள் அவரைப் பார்த்து, "பிறப்பி லிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத்தருகிறாய்?'' என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர். யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, "மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?" என்று கேட்டார். அவர் மறுமொழியாக, "ஐயா, அவர் யார்? சொல்லும். அப் போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்" என்றார். இயேசு அவரிடம், "நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்'' என்றார். அவர், "ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்'' என்று கூறி அவரை வணங்கினார். அப்போது இயேசு, "தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வை யுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்" என்றார். அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, "நாங்களுமா பார்வையற்றோர்?" என்று கேட்டனர். இயேசு அவர்க ளிடம், "நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால் உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் 'எங்களுக்குக் கண் தெரிகிறது' என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக் கிறீர்கள்" என்றார்.

Thursday, March 27, 2014

மார்ச் 30, 2014

தவக்காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
ஒளிக்குரியவர்களே,
   உலகின் ஒளியாம் ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம்.
அதிசயங்கள் செய்யும் ஆண்டவரைப் பற்றிய அகப்பார்வை பெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் நமக்கு ஒரு புதிய பார்வையைத் தந்தவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பிறவியில் இருந்தே பார் வையற்ற ஒருவரை அவர் குணப்படுத்தும் நிகழ்வை இன்றைய நற்செய்தி எடுத்துரைக் கிறது. கண்ணால் செய்யப்படும் பாவங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இயேசு நமக்கு படிப்பிக்கிறார். தீர்ப்பளிக்கும் ஆற்றல் கொண்ட தம் மீது நம்பிக்கை கொள்ளுமா றும் ஆண்டவர் அழைக்கிறார். பாவ இருளில் இருந்து விலகி, கிறிஸ்துவின் ஒளியில் பங்குபெற்று வாழும் வரத்துக்காக, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
ஒளிக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் சாமுவேல் தாவீதை ஆண்டவரின் பெயரால் அருட்பொழிவு செய்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. ஈசாயின் புதல்வருள் ஒருவரை அரச ராகத் தேர்வு செய்திருப்பதாக சாமுவேலிடம் ஆண்டவர் கூறுகிறார். புதிய அரசரை அருட் பொழிவு செய்வதற்காக கொம்பில் எண்ணெய்யை நிரப்பிக்கொண்டு, இறைவாக்கினர் பெத்லகேம் செல்கிறார். உடல்திறனும், உயரமும் கொண்ட எழுவரை விட்டுவிட்டு சிறுவ னான தாவீதை ஆண்டவர் தேர்ந்தெடுப்பதைக் காண்கிறோம். அகத்தைப் பார்த்து செயல் படும் ஆண்டவரின் திட்டங்களை நமது வாழ்வில் ஏற்க வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஒளிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நம்மை ஒளியின் மக்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். தீமை விளைவிக்கும் இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு தொடர்பு வைத்திருக்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறார். தீயவர்களின் வாழ்வில் ஒளி விளக்காக சுடர்விட்டு, அவர்களை நல்லவர்களாக மாற்ற அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து வின் ஒளியால் மற்றவர்களை ஒளிர்விக்க திருத்தூதர் நமக்கு நினைவூட்டுகிறார். நம்மில் உள்ள பாவ இயல்பைப் புதைத்துவிட்டு, கிறிஸ்துவின் உயிரைப் பெற்றவர்களாக வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஒளியாய் இருப்பவரே இறைவா,
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ரும், உமது வழிகாட்டும் ஒளியில் பயணிக்க அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. பார்வை அளிப்பவரே இறைவா,
   உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் உமது ஒளியில் நடந்து, மக்களின் துன்பங் களைப் போக்க ஆர்வத்துடன் உழைக்கும் மனம் தந்திடுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒளி தருபவரே இறைவா,
   எம் நாட்டை கவ்வியுள்ள ஆன்மீக, அரசியல், பொருளாதார இருளை அகற்றி, மக்கள் அனைவரும் ஒளியின் பாதையில் முன்னேற உதவிடுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. சுகம் கொடுப்பவரே இறைவா,
   உடல், உள்ள, ஆன்மீக பார்வையிழந்து தவிக்கும் மக்கள் அனைவரையும் குணப்படுத்தி, உமது ஒளியால் இந்த உலகத்தின் முகத்தைப் புதுப்பிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. ஒளியால் நிறைப்பவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும், உமது அன்பின் ஒளியால் நிறைத்து, ஒளியின் மக்களாக வாழ வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, March 22, 2014

மார்ச் 23, 2014

தவக்காலம் 3-ம் ஞாயிறு

முதல் வாசகம்: விடுதலைப்பயணம் 17:3-7
   அந்நாள்களில் தண்ணீரின்றித் தவித்ததால் மக்கள் மோசேயை எதிர்த்து முறுமுறுத்து, "நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளை யும் கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?" என்று கேட்டனர். மோசே ஆண்டவ ரிடம், "இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!" என்று கதறினார். ஆண்டவர் மோசேயிடம், "இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக்கொண்டு மக்கள் முன் செல்; நைல்நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ. இதோ நான் அங்கே ஓரேபில் உள்ள பாறை யில் உனக்குமுன் நிற்பேன். நீ பாறையை அடி; மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப் படும்" என்றார். இஸ்ரயேல் தலைவர்கள் காண மோசே அவ்வாறே செய்தார். இஸ்ரயேல் மக்கள் அங்கு வாதாடியதாலும் ஆண்டவர் தம்மோடு இருக்கிறாரா இல்லையா என்று சோதித்ததாலும், அவ்விடம் "மாசா" என்றும் "மெரிபா" என்றும் பெயரிட் டழைக்கப்பட்டது.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 95:1-2.6-7.7-9
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர், ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.
   வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். (பல்லவி)
   வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். (பல்லவி)
   இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அன்று மெரிபா விலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தி கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: உரோமையர் 5:1-2,5-8
   சகோதர சகோதரிகளே, நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடை யவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந் நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர் நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது. அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற் றம் தராது; ஏனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக் காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்த போதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண் டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்.

வாழ்த்தொலி: யோவான் 4:42,15
   ஆண்டவரே நீர் உண்மையிலே உலகின் மீட்பர்; நான் தாகம் கொள்ளாதபடி வாழ்வு தரும் தண்ணீரை எனக்கு அளித்தருளும்.

நற்செய்தி வாசகம்: யோவான் 4:5-42
   அக்காலத்தில் இயேசு சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம், "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" என்று கேட்டார். அச் சமாரியப் பெண் அவரிடம், "நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?" என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவ தில்லை. இயேசு அவரைப் பார்த்து, "கடவுளுடைய கொடை எது என்பதையும் "குடிக்கத் தண்ணீர் கொடும்" எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்" என்றார். அவர் இயேசுவிடம், "ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமா னது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்" என்றார். இயேசு அவரைப் பார்த்து, "இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொரு வருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்" என்றார். அப்பெண் அவரை நோக்கி, "ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது" என்றார். இயேசு அவரிடம், "நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்" என்று கூறினார். அப்பெண் அவரைப் பார்த்து, "எனக்குக் கணவர் இல்லையே" என்றார். இயேசு அவரிடம், "எனக்குக் கணவர் இல்லை" என நீர் சொல்வது சரியே. உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே" என்றார். அப்பெண் அவரிடம், "ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டு வந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே" என்றார். இயேசு அவரிடம், "அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபட மாட்டீர்கள். யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்" என்றார். அப்பெண் அவரிடம், "கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும் போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்" என்றார். இயேசு அவரிடம், "உம்மோடு பேசும் நானே அவர்" என்றார். அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் "என்ன செய்ய வேண்டும்?" என்றோ, "அவரோடு என்ன பேசுகிறீர்?" என்றோ எவரும் கேட்க வில்லை. அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம், "நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியா வாக இருப்பாரோ!" என்றார். அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள். அதற்கிடையில் சீடர், "ரபி, உண்ணும்" என்று வேண்டினர். இயேசு அவர்களிடம், "நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது" என்றார். "யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ" என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண் டார்கள். இயேசு அவர்களிடம், "என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்று வதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு. 'நான்கு மாதங் களுக்குப் பின்தான் அறுவடை' என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல் வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது. அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர். நீங்கள் உழைத்துப் பயி ரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள். இவ்வாறு 'விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்' என்னும் கூற்று உண்மையாயிற்று" என்றார். "நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்" என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண் டனர். சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்ட னர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். அவர்கள் அப்பெண்ணிடம், "இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்" என்றார்கள்.

Thursday, March 20, 2014

மார்ச் 23, 2014

தவக்காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
தாகமுள்ளவர்களே,
   மீட்பளிக்கும் ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம்.
வாழ்வளிக்கும் தண்ணீரை வழங்கும் ஆண்டவரை நாடிச் சென்று தாகத்தை தணித்துக் கொள்ள இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. குழப்பங்களுக்கு நடுவே விடியலை நோக்கி காத்திருந்த சமாரியப் பெண்ணின் வாழ்வில், ஆண்டவர் இயேசு ஒரு மாற்றத்தை உருவாக்கிய நிகழ்வை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. கடவுளைப் பற்றிய உண்மையைக் கற்றுக்கொடுக்கும் இயேசு, தாமே மெசியா என்பதை உணர்ந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கிறார். இயேசுவை சந்தித்த சமாரியப் பெண் செய்ததைப் போன்று, அவரை மற்றவர்களுக்கு அறிவிக்க நாமும் அழைக்கப்படுகிறோம். இயேசுவே உலக மீட்பர் என்பதை பறைசாற்றும் வரத்துக்காக, இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
தாகமுள்ளவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், பாலைநிலத்தில் தண்ணீரின்றித் தவித்த இஸ்ரயேல் மக்கள் அற்புதமாக தாகம் தணித்த நிகழ்வைக் காண்கிறோம். தனக்கு எதிராக முணு முணுத்த மக்களைப் பற்றி ஆண்டவரிடம் முறையிட்டு, மோசே தீர்வு வேண்டுகிறார். ஓரேபின் பாறையை மோசேயின் தடியால் பிளந்து, ஆண்டவர் தண்ணீர் வழங்கிய அற்பு தத்தைக் காண்கிறோம். பாறையில் இருந்து புறப்பட்ட தண்ணீர் மூலம் இஸ்ரயேல் மக்க ளின் தாகம் தீர்ந்தது. நாமும் வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்கும்போது, ஆண்டவரின் உதவியை விரும்பித் தேட வரம் வேண்டி, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
தாகமுள்ளவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துவின் மீதான நம்பிக்கை யால் நாம் கடவுளுடன் நல்லுறவு கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துரைக்கிறார். வாழ் வளிக்கும் தண்ணீராகிய தூய ஆவியார் வழியாக பொழியப்பட்ட கடவுளின் அன்பை உணர்ந்து வாழ அறிவுறுத்துகிறார். நாம் பாவிகளாக இருந்தபோதே நமக்காக தம்மையே பலியாக்கிய கிறிஸ்துவின் அன்பை புரிந்துகொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசு மூலம் நாம் பெற்றுக்கொண்ட அருள்நிலையில் தொடர்ந்து நிலைத்திருக்கும் வரம் வேண்டி, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வாழ்வின் ஊற்றே இறைவா,
   உமது மந்தையாம் திருச்சபையை உம் அருள் ஊற்றை நோக்கி வழிநடத்தும் ஞானத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் பொழிந்திட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. என்றும் வாழ்பவரே இறைவா,
   மக்களின் துன்பங்களைத் தீர்க்க நீர் மட்டுமே உதவ முடியும் என்பதை உணர்ந்து உமது திருவுளப்படி பணியாற்றும் வரத்தை, உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மீட்பின் ஊற்றே இறைவா,
   ஆன்மீக தாகம் கொண்ட எம் நாட்டு மக்கள் அனைவரும் உம்மிடம் இருந்து தண்ணீரைப் பருகவும், அதன் மூலம் மீட்பின் நிறைவைக் கண்டுணர்ந்து உம்மை மகிமைப்படுத்தவும் உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. எல்லாம் வல்லவரே இறைவா,
   அநீதி, மதவாதம், ஊழல், பயங்கரவாதம் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் எம் நாட்டை, உமது வல்லமையுள்ள கரங்களால் சீர்படுத்தி புதுவாழ்வு அளித் திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. புனிதத்தின் ஊற்றே இறைவா,
   மீட்பின் பாறையான கிறிஸ்து இயேசுவிடம் இருந்து தாகம் தணிக்கும் எம் பங்கு மக்கள், அருட்சகோதரிகள், பங்குத்தந்தை அனைவரையும், அவருக்கு சான்றுபகரும் வகையில் வழிநடத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, March 15, 2014

மார்ச் 16, 2014

தவக்காலம் 2-ம் ஞாயிறு

முதல் வாசகம்: தொடக்க நூல் 12:1-4
   அந்நாள்களில் ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிட மிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண் ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்'' என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 33:4-5.18-19.20,22
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
   ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. (பல்லவி)
   தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத் திலும் வாழ்விக்கின்றார். (பல்லவி)
   நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 2 திமொத்தேயு 1:8-10
   அன்பிற்குரியவரே, கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன் மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.

வாழ்த்தொலிமத்தேயு 4:4
   ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்."

நற்செய்தி வாசகம்: மத்தேயு 17:1-9
   அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானை யும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள் முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவரு டைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்க ளுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்'' என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, "எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்'' என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காண வில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, "மானிடமகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது'' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

Thursday, March 13, 2014

மார்ச் 16, 2014

தவக்காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
மாட்சிக்குரியவர்களே,
  எல்லாம் வல்ல ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம்.
நமது பாவங்களுக்காக இறந்து, உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவின் மாட்சியில் பங்கு பெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைத்தந்தையின் அன்பு மைந்தர் இயேசுவுக்கு செவிசாய்க்க கடவுள் நம்மை அழைக்கிறார். திருச்சட்டத்தையும், இறைவாக்குகளையும் நிறைவேற்றிய இயேசுவைப் போன்று, இறைத்திட்டத்தை அறிந்து வாழ்வில் செயல்படுத்த நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் பாடு கள் வழியாக, அவரது உயிர்ப்பின் மாட்சியில் பங்குபெற வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
மாட்சிக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், ஆபிரகாமுக்கு கடவுள் அளித்த வாக்குறுதியை எடுத்துரைக் கிறது. ஆண்டவராகிய கடவுள் தமது திட்டத்தை ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தி, அவரை வேற்று நாட்டுக்கு அனுப்புவதைக் காண்கிறோம். ஆபிரகாமைப் பெரிய இனமாக்குவதாக வும், சிறப்புறச் செய்வதாகவும் ஆண்டவர் வாக்களிக்கிறார். ஆபிரகாமின் வழியாக மண் ணுலகின் மக்களினங்கள் ஆசி பெறும் என்ற வாக்குறுதி வழங்கப்படுகிறது. ஆபிரகாமைப் போன்று ஆண்டவரின் திருவுளத்துக்கு நம்மை அர்ப்பணிப்பவர்களாக வாழ வரம் கேட்டு, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
மாட்சிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துவின் நற்செய்திக்காக துன்பத்தை ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்துவின் அருளால் மீட்கப்பட் டுள்ள நாம் அனைவரும் தூய வாழ்வு வாழ வேண்டுமென அறிவுறுத்துகிறார். அழியா வாழ்வை ஒளிரச் செய்த நம் மீட்பர் இயேசுவின் அருளை நாம் முழுமையாக பயன் படுத்திக்கொள்ள அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவின் துன்பங்களில் பங்கேற்று, அவர் தருகின்ற விண்ணக மாட்சியைப் பெற்று மகிழும் வரம் கேட்டு, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மாட்சி மிகுந்தவரா இறைவா,
   திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், ஆபிரகாம் கொண்ட நம்பிக்கையின் வழிமரபினராக விளங்கும் திருச்சபையின் மக்களை, உமது மாட்சிக்கு உகந்தவர்களாக உருமாற்றும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மகத்துவம் மிக்கவரா இறைவா,
   சிலுவை வழியாக உம் திருமகன் நிறைவேற்றிய மீட்புச் செயலை, உலக மக்கள் அனை வரும் அறிந்து ஏற்றுக்கொள்ளவும், உம்மில் நம்பிக்கை கொண்டவர்களாய் நீர் தருகின்ற மாட்சியை உரிமையாக்கவும் அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நலம் அளிப்பவரான இறைவா,
   எம் நாட்டு மக்களிடையே நிலவும் தவறான நம்பிக்கைகள், கொள்கைகள், கோட்பாடு கள் அனைத்தும் மறையவும், தீமை, வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றின் மீதான வெறுப்புணர்வு பெருகவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நிறைவு தருபவரா இறைவா,
   உலக ஆசைகளாலும், போட்டி, பொறாமையினாலும் மன அமைதி இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், உமது மாட்சியில் நிறைவு காண்பவர்களாய் வாழ்ந்து, அமைதியை யும் மகிழ்ச்சியையும் சுவைக்க வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உருமாற அழைப்பவரா இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது நிறைவான ஆசீரைப் பெற்று உருமாறியவர்களாய், உலகத்தின் முன்னிலையில் இறை மாட்சிக்கு உகந்த புதுவாழ்வு வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, March 8, 2014

மார்ச் 9, 2014

தவக்காலம் முதல் ஞாயிறு

முதல் வாசகம்: தொடக்க நூல் 2:7-9,3:1-7
   ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத் தார். ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார். ஆண்டவரா கிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், "கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களி லிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?" என்று கேட்டது. பெண் பாம்பிடம், "தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். ஆனால் 'தோட்டத் தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொட வும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்' என்று கடவுள் சொன்னார்," என்றாள். பாம்பு பெண்ணிடம், "நீங்கள் சாகவே மாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறி வீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்" என்றது. அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாக வும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந் ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். அப்பொழுது அவர்கள் இருவரின் கண் களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 51:1-2.3-4.10-11.12,15
பல்லவி: ஆண்டவரே, இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
   கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழு வியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். (பல்லவி)
   ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். (பல்லவி) 
   கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். (பல்லவி)
   உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: உரோமையர் 5:12-19
   சகோதர சகோதரிகளே, ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந் தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்பட வில்லை. ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை. எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று; இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார். ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதி யாய்க் கிடைத்தது. இந்த அருள்கொடையின் விளைவு வேறு, அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு. எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள் கொடையாக வந்த விடுதலை. மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால், அருள் பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்துகொண்டவர்கள் வாழ்வு பெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒரு வரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.

வாழ்த்தொலிமத்தேயு 4:4
     மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 4:1-11
   அக்காலத்தில் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலைநிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பி ருந்தார். அதன்பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, "நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்" என்றான். அவர் மறுமொழியாக, "'மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்' என மறைநூலில் எழுதியுள்ளதே" என்றார். பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத் திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, "நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; 'கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள் வார்கள்' என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம், "'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' எனவும் எழுதியுள் ளதே" என்று சொன்னார். மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், "நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்" என்றது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, "அகன்று போ, சாத்தானே, 'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது" என்றார். பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

Thursday, March 6, 2014

மார்ச் 9, 2014

தவக்காலம் முதல் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   வாழ்வளிக்கும் ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சோதனைகளை வெல்லத் தூண்டும் காலமாகிய தவக்காலத்தின் முதல் ஞாயிறை நாம் இன்று சிறப்பிக்கின்றோம். பணம், புகழ், பதவி போன்ற உலக மாயைக ளுக்கு மயங்கிவிடாமல், முழு மனத்துடன் கடவுளுக்கு பணிபுரிய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு தம் பணிவாழ்வைத் தொடங்கும் முன்பு நாற்பது நாட்கள் பாலை நிலத்தில் தனித்திருந்து இறைவனோடு உறவாடினார். அலகையின் சோத னைகளை வென்று, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றும் வழியையும் அவர் நமக்கு காட்டினார். இயேசுவைப் பின்பற்றி வாழ்விலும், தாழ்விலும் நம்மைச் சூழும் சோதனை களை முறியடிக்கும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், கடவுளின் கட்டளைகளை மீறி முதல் பெற்றோர் பாவம் செய்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. அலகையின் மயக்கும் மொழிகளை நம்பி, ஆதாமும் ஏவாளும் ஆண்டவரின் வார்த்தையை மீறியதால் பாவம் உலகில் நுழைவதைக் காண் கிறோம். கடவுளைப் போன்று மாறுவீர்கள் என்ற அலகையின் வார்த்தைகளை நம்பி இறைக்கட்டளையைப் புறக்கணித்ததால், மனிதன் அருள் வாழ்வை இழந்தான் என்ற உண்மை இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது. அலகையின் மயக்கும் வாக்குறுதிகளுக்கு இடம் கொடுக்காமல், கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஒரே மனிதர் வழியாய் இந்த உலகத்தில் பாவமும் சாவும் நுழைந்தது என எடுத்துரைக்கிறார். ஆதாமின் வழியாக சாவு வந்தது போலவே, இயேசு கிறிஸ்துவின் வழியாக வாழ்வு வந்தது என்றும் பறைசாற்று கிறார். அலகையை வென்ற இயேசு கிறிஸ்துவின் வழியாக, இறைவனின் அருள் கொடை களைப் பெற நாம் தகுதி பெறுகிறோம் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவில் முழுமையான நம்பிக்கை கொண்டு, கடவுள் அருளும் மீட்பை சுவைக்கும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அருள் பொழிகின்ற இறைவா,
   பணம், பதவி, புகழ் போன்ற உலக மாயைகளில் இருந்து விலகி வாழும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் வழங்கி, உம் மக்களை புனிதத்தின் பாதையில் வழிநடத்த உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. மீட்பு அளிக்கின்ற இறைவா,
   உலக நாடுகளை ஆட்சி செய்கின்ற தலைவர்கள் அலகையின் மயக்கும் ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல், உமது அன்பின் ஆட்சியை மக்களிடையே செயல்படுத்துபவர்களாக திகழ துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒளி கொடுக்கின்ற இறைவா,
   உமது அரசை எம் நாட்டில் விரிந்து பரவச் செய்யும் ஓர் அரசை, நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் வழியாக அமையவும், அதன் மூலம் இந்தியாவைச் சூழ்ந்துள்ள ஆன்மீக இருள் மறையவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. மாற்றம் தருகின்ற இறைவா,
   வாழ்வைத் திசைமாற்றும் இவ்வுலகின் மாயக் கவர்ச்சிகளாலும், தீவிரவாத செயல்களா லும்  தங்கள் வாழ்வை சீரழித்து நிற்கும் இளைஞர்களும், அவர்களை தவறான வழியில் நடத்துபவர்களும் மனந்திரும்ப உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. புதுவாழ்வுக்கு அழைக்கின்ற இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் திருமகன் இயேசுவைப் பின்பற்றி பாவச் சோதனைகளை வெற்றி கொள்ளவும், உமது திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாக வாழவும் துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, March 1, 2014

மார்ச் 2, 2014

பொதுக்காலம் 8-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 49:14-15
   "சீயோனோ, 'ஆண்டவர் என்னைக் கைநெகிழ்ந்து விட்டார்; என் தலைவர் என்னை மறந்துவிட்டார்' என்கிறாள். பால் குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங் கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்'' என்கிறார் ஆண்டவர்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 62:1-2.5-6.7-8 
பல்லவி: என் நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு.
   கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்பு கிடைப் பது அவரிடமிருந்தே; உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே; என் கோட்டை யும் அவரே; எனவே நான் சிறிதும் அசைவுறேன். (பல்லவி)
   நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு; ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே; உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன். (பல்லவி) 
   என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன; என் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமும் கடவுளே. மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்; அவர் முன்னிலை யில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 4:1-5
   சகோதர சகோதரிகளே, நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள், கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும். பொறுப்பாளர் கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ! என்னைப் பொறுத்தமட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித் தால் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக்கொள் ளவும் மாட்டேன். எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயி னும் நான் குற்றமற்றவனாகி விடமாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒரு வரே. எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்கு முன் யாருக் கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக் குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவ ரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.

வாழ்த்தொலி: எபிரேயர் 4:12
     அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந் தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லே லூயா! 

நற்செய்தி வாசகம்: மத்தேயு 6:24-34
   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது. ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும் உடையை விட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங் கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலா னவர்கள் அல்லவா! கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன்கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப்போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ் வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாய்ச் செய்யமாட்டாரா? ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள் ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்."