தவக்காலம் 2-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
மாட்சிக்குரியவர்களே,
எல்லாம் வல்ல ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். நமது பாவங்களுக்காக இறந்து, உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவின் மாட்சியில் பங்கு பெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைத்தந்தையின் அன்பு மைந்தர் இயேசுவுக்கு செவிசாய்க்க கடவுள் நம்மை அழைக்கிறார். திருச்சட்டத்தையும், இறைவாக்குகளையும் நிறைவேற்றிய இயேசுவைப் போன்று, இறைத்திட்டத்தை அறிந்து வாழ்வில் செயல்படுத்த நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் பாடு கள் வழியாக, அவரது உயிர்ப்பின் மாட்சியில் பங்குபெற வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
இன்றைய
முதல் வாசகம், ஆபிரகாமுக்கு கடவுள் அளித்த வாக்குறுதியை எடுத்துரைக் கிறது. ஆண்டவராகிய கடவுள் தமது திட்டத்தை ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தி, அவரை வேற்று நாட்டுக்கு அனுப்புவதைக் காண்கிறோம். ஆபிரகாமைப் பெரிய இனமாக்குவதாக வும், சிறப்புறச் செய்வதாகவும் ஆண்டவர் வாக்களிக்கிறார். ஆபிரகாமின் வழியாக மண் ணுலகின் மக்களினங்கள் ஆசி பெறும் என்ற வாக்குறுதி வழங்கப்படுகிறது. ஆபிரகாமைப் போன்று ஆண்டவரின் திருவுளத்துக்கு நம்மை அர்ப்பணிப்பவர்களாக வாழ வரம் கேட்டு, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
மாட்சிக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துவின் நற்செய்திக்காக துன்பத்தை ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்துவின் அருளால் மீட்கப்பட் டுள்ள நாம் அனைவரும் தூய வாழ்வு வாழ வேண்டுமென அறிவுறுத்துகிறார். அழியா வாழ்வை ஒளிரச் செய்த நம் மீட்பர் இயேசுவின் அருளை நாம் முழுமையாக பயன் படுத்திக்கொள்ள அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவின் துன்பங்களில் பங்கேற்று, அவர் தருகின்ற விண்ணக மாட்சியைப் பெற்று மகிழும் வரம் கேட்டு, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.
இறைமக்கள் மன்றாட்டு:
1. மாட்சி மிகுந்தவரான இறைவா,
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், ஆபிரகாம் கொண்ட நம்பிக்கையின் வழிமரபினராக விளங்கும் திருச்சபையின் மக்களை, உமது மாட்சிக்கு உகந்தவர்களாக உருமாற்றும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மகத்துவம் மிக்கவரான இறைவா,
சிலுவை வழியாக உம் திருமகன் நிறைவேற்றிய மீட்புச் செயலை, உலக மக்கள் அனை வரும் அறிந்து ஏற்றுக்கொள்ளவும், உம்மில் நம்பிக்கை கொண்டவர்களாய் நீர் தருகின்ற மாட்சியை உரிமையாக்கவும் அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நலம் அளிப்பவரான இறைவா,
எம் நாட்டு மக்களிடையே நிலவும் தவறான நம்பிக்கைகள், கொள்கைகள், கோட்பாடு கள் அனைத்தும் மறையவும், தீமை, வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றின் மீதான வெறுப்புணர்வு பெருகவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நிறைவு தருபவரான இறைவா,
உலக ஆசைகளாலும், போட்டி, பொறாமையினாலும் மன அமைதி இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், உமது மாட்சியில் நிறைவு காண்பவர்களாய் வாழ்ந்து, அமைதியை யும் மகிழ்ச்சியையும் சுவைக்க வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உருமாற அழைப்பவரான இறைவா,
எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது நிறைவான ஆசீரைப் பெற்று உருமாறியவர்களாய், உலகத்தின் முன்னிலையில் இறை மாட்சிக்கு உகந்த புதுவாழ்வு வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.