தவக்காலம் 4-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
இறையன்பில் இனியோரே,
தமது அளவு கடந்த அன்பால் நம்மை மீட்கத் திருவுளம் கொண்ட ஆண்டவரின் பெய ரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாடு, கடவுளின் இரக்கத்தை யும் அன்பையும் உணர்ந்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவராகிய கடவுள் சினம்கொள்ளத் தயங்குபவர்; அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வோ ருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுபவர் என்பதை உணர்வோம். கடவுளின் இரக்கமும் அன்பும், இயேசு கிறிஸ்துவின் மீட்புச் செயலில் வெளிப்பட்டன. இறை மகனில் முழுமையாக நம்பிக்கை கொண்டு, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.
இனியவர்களே,

முதல் வாசக முன்னுரை:
இன்றைய முதல் வாசகம் எருசலேம் கோவில் அழிக்கப்பட்டதையும், பாரசீக அரசர்
சைரசு அக்கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப ஆணை பிறப்பித்ததையும் எடுத்துரைக்
கிறது. கடவுள் அனுப்பிய இறைவாக்கினர்களையும், அவர்களின் வார்த்தைகளையும்
புறக்கணித்ததால், கடவுளின் சினம் யூதர்களை தண்டித்ததையும், அவரது இரக்கத்தினால் அவர்கள் மீண்டும் புதுவாழ்வு பெற்றதையும் இங்கு காண்கிறோம். கடவுளின் வார்த்தை களை உள்ளத்தில் ஏற்று வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
இனியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகம் இயேசு கிறிஸ்து வழியாக நாம் பெற்றுள்ள மீட்பைப் பற்றி பேசுகிறது. கடவுளின் இரக்கத்தாலும் அன்பாலும் மீட்கப்பட்ட நாம், கிறிஸ்துவின் அருளைக் கொடையாகப் பெற்றிருக்கிறோம் என்று திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார். இறையருளில் நாம் நிலைத்து வாழ, கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் உருக்கமாக வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.
இறைமக்கள் மன்றாட்டு:
1. நிலைவாழ்வு தரும் இறைவா,
உமது திருமகனின் அரசை உலகெங்கும் நிறுவ உழைத்து வருகின்ற எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவருக்கும் நிலைவாழ்வைப் பரிசளிக்க வேண்டுமென்று உம்மைப் பணிந்து மன்றாடுகிறோம்.
2. தீமையை அழிக்கும் இறைவா,
உமது மாட்சியை களங்கப்படுத்தும் விதமாக உலக மக்களிடையே காணப்படும் சிலை வழிபாட்டு கோயில்கள் அனைத்தையும் அழித்தொழிக்க வேண்டுமென்று தாழ்மையுடன் உம்மை மன்றாடுகிறோம்.
3. சினம் கொள்ளும் இறைவா,
உலகெங்கும் காணப்படும் அநீதிகள், வன்முறைகள், பயங்கரவாதச் செயல்கள் ஆகிய வற்றுக்கு காரணமானவர்கள் மீது உமது சினத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று மன உருக்கத்துடன் உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கம் காட்டும் இறைவா,
இயற்கைச் சீற்றங்களாலும், உடல்நல பாதிப்புகளாலும், மன வேதனைகளாலும், மற்ற வாழ்க்கைப் போராட்டங்களாலும் பாதிக்கப்பட்டுத் துன்புறும் அனைவருக்கும் புதுவாழ்வு வழங்க வேண்டுமென்று பணிவன்புடன் உம்மை மன்றாடுகிறோம்.
5. நம்பிக்கை அருளும் இறைவா,
எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நீர் தரும் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ளும் ஒளியின் மக்களாக வாழ உதவ வேண்டுமென்று உரிமையுடன் உம்மை மன்றாடுகிறோம்.