Thursday, March 26, 2015

மார்ச் 29, 2015

திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

திருவழிபாட்டு முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு திரு வழிபாட்டு நிகழ்வுகளுக்கு உங்களை வரவேற்கின்றோம். இஸ்ரயேல் மக்களின் வெற்றி ஆர்ப்பரிப்புகளுக்கு இடையே எருசலேமில் நுழைந்த இயேசு கிறிஸ்து, அதே மக்களின் கூக்குரலால் மரணத்துக்கு தீர்ப்பிடப்பட்ட நிகழ்வுகளை சிந்திக்க இந்த குருத்தோலை பவனி நமக்கு அழைப்பு விடுக்கிறது. புனித வியாழனன்று இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது, யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டது, புனித வெள்ளி ன்று அவர் சிலுவையில் உயிர் துறந்து அடக்கம் செய்யப்பட்டது என திருப்பாடுகளின் நீண்ட வரலாற்றை நாம் இன்றையத் திருப்பலியில் தியானிக்க இருக்கின்றோம். நம்மைப் பாவங்களில் இருந்து விடுவிக்கää தன் உயிரையே பலியாகத் தந்த ஆண்டவர் இயேசு வுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம் என்பதை சிந்தித்தவாறே, இந்த திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், இயேசுவின் திருப்பாடுகளைப் பற்றிய இறைவாக்கினர் எசாயாவின் முன்னறிவிப்பு இடம்பெறுகிறது. இயேசுவை படைவீரர்கள் அவமானப் படுத்திய நிகழ்வையும்ää அவர் சாட்டையால் அடிக்கப்பட்டதையும் இந்த இறைவாக்கு எடுத்துரைக்கிறது. நமது பாவங்களால் நாம் இயேசுவைக் காயப்படுத்திய தருணங் களுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டு இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், தந்தை கடவுளின் மீட்புத் திட்டத்தில் இயேசு கிறிஸ்து எவ்வாறு செயலாற்றினார் என்பதை எடுத்துரைக்கிறது. சிலுவைச் சாவு வரைத் தன்னை அர்ப்பணித்த இயேசுவின் தாழ்ச்சி நிறைந்த கீழ்ப்படிதலேää அவரை மேலான மாட்சிக்கு உயர்த்தியது என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார். நாமும் நமது கீழ்ப்படிதலால் கடவுளின் மாட்சியில் பங்குபெறும் வரம் கேட்டு இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.


இறைமக்கள் மன்றாட்டு:
1. மீட்பு அளிப்பவரே இறைவா,
   உமது திருமகன் இயேசு வழங்கும் மீட்பை பறைசாற்ற நீர் தேர்ந்தெடுத்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உலக மக்களுக்கு மீட்பின் கருவிகளாகத் திகழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. வெற்றி வேந்தரே இறைவா,
   மனித குலத்திற்காக இயேசு சிலுவையில் அனுபவித்த வேதனைகளைப் பற்றி கவலை கொள்ளாமல் வாழும் மக்கள் அனைவரும் மனந்திரும்பி, இயேசுவின் கீழ்ப்படிதல் நிறைந்த அன்பினை உணர்ந்து வாழ
உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நீதியின் அரசரே இறைவா,
   பிறரைத் தீர்ப்பிடும் மனநிலையோடு பணியாற்றும் எங்கள் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் அனைவரும், தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்த தேவையான மன மாற்றத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கத்தின் ஊற்றே இறைவா,
   உம் திருமகனின் திருப்பாடுகளை நினைவுகூர்ந்து, உலகில் பல்வேறு பலவீனங் களாலும் பிரச்சனைகளாலும் நோய்களாலும் துன்புறும் மக்கள்மீது இரக்கம் காட்டி உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்பின் உருவே இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது மேலான அன்பையும் இயேசுவின் தாழ்ச்சி நிறைந்த தியாகத்தையும் உணர்ந்தவர்களாய், உம் திருவுளத்துக்கு கீழ்ப்படிந்து வாழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.