Wednesday, May 9, 2012

மே 13, 2012

பாஸ்கா காலம் 6-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறைவனின் அன்பர்களே,
   இறைமகன் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நாம் இறைவனின் அன்பில் நிலைத் திருக்க இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. இயேசு தந்தையின் அன்பில் நிலைத்திருப்பதுபோல, இயேசுவின் கட்டளைகளை கடைபிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருக்க நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவில் இணைந்திருந்து, ஒருவர் மற்ற வரை அன்புசெய்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே, 
   இன்றைய முதல் வாசகம், கொர்னேலியுவுக்கு பேதுரு திருமுழுக்கு வழங்கிய நிகழ் வினை எடுத்துரைக்கிறது. யூதர்கள் மட்டுமே கடவுளின் அன்புக்கு உரியவர்கள், கிறிஸ்த வர்கள் ஆகும் தகுதிபெற்றவர்கள் என்று எண்ணப்பட்டச் சூழ்நிலையில், யூதரல்லாத பிற இனத்தவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்ததைக் காண்கிறோம். இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, அவரது அருள் வரங்களைப் பெற்று மகிழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், கடவுளிடம் இருந்து வரும் அன்பை பிறரோடு பகிர்ந்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் வாழ்வு பெறும் பொருட்டு, தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பிய கடவுளின் செயலிலேயே அன்பின் தன்மை விளங்குகிறது என்று திருத்தூதர் யோவான் எடுத்துரைக்கிறார். இறைவனிடமும் பிறரிடமும் நாம் செலுத்தும் அன்பால், பாவங்களை வெல்லும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.


இறைமக்கள் மன்றாட்டு:
1. அன்பே உருவான இறைவா,
  
திருச்சபையின் மக்கள் அனைவரும் இறையன்பிலும் பிறன்பிலும் வளர, தேவை யான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் அளிக்குமாறு, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உமது அன்பில் வழிநடத்த வேண்டுமென்று உம்மைத் தாழ் மையுடன் மன்றாடுகிறோம்.
2. அன்பின் நிறைவே இறைவா,
   உமது அன்பை வெளிப்படுத்த, இந்த உலகில் தோன்றிய உம் திருமகன் இயேசுவில் நம்பிக்கை கொண்டு, அவர் வழியாக உம்மை அன்பு செய்யும் வரத்தை, உலக மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மை
த் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.
3. அன்பின் அரசரான இறைவா,
   எங்கள் நாட்டு மக்களிடையே, உம்மைப் பற்றிய விழிப்புணர்வு பெருகவும், உமது அன்பின் அரசில் ஒன்றிணையும் ஆர்வம் வளரவும், அதன் வழியாக எம் நாட்டில் அன்பும் மகிழ்ச்சியும் நிறைவு காணவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

4. அன்பின் பிறப்பிடமே இறைவா,
   உலகில் அன்பின்மையால் உருவாகியுள்ள அனைத்து தீமைகளும் முடிவுக்கு வரவும், இறையன்பும் பிறரன்பும் மக்களிடையே வளர்ச்சி காணவும், துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கவும் உதவ வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

5. அன்பு தந்தையே இறைவா,
   எங்கள் பங்கு சமூகத்தில் அன்பும் ஒற்றுமையும் பெருகவும், அன்பு செயல்கள் வளரவும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர் வதித்து, உமது அன்பில் நிலைத்திருக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை
த் தாழ் மையுடன் மன்றாடுகிறோம்.