தூய ஆவியாரின் வருகை பெருவிழா
முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 2:1-11
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில்
கூடி யிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல்
வானத்திலி ருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.
மேலும் நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து
அமர்ந்ததை அவர்கள் கண் டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால்
ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும்
வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கி னார்கள். அப்பொழுது வானத்தின் கீழுள்ள
அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள்
எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள்
ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர்.
எல்லாரும் மலைத்துப்போய், "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர்
அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர் கள் பேசுவதை நாம்
ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?" என வியந்தனர். "பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசபொத்தாமியா, யூதேயா,
கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், பிரிகியா,
பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரை யடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும்
மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கி யிருந்தவர்களும், யூதரும், யூதம்
தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின்
மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!" என்றனர்.
இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 5:16-25
சகோதர சகோதரிகளே, தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழுங்கள்; அப்போது
ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு
முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக் கொன்று
எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவ தில்லை.
நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால், திருச்சட்டத்திற்கு
உட்பட்டவர் களாய் இருக்கமாட்டீர்கள். ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும்
தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு,
பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை,
பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும்.
இத்தகையவற்றில் ஈடுபடு வோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவ தில்லை என்று நான்
ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன். ஆனால் தூய
ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம்,
நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில்
திருச்சட்டத்திற்கு இடமில்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள்
ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில்
அறைந்துவிட்டார்கள். தூய ஆவியின் துணை யால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி
காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.
நற்செய்தி வாசகம்: யோவான் 15:26-27,16:12-15
சிந்தனை: வத்திக்கான் வானொலி