Wednesday, May 23, 2012

மே 27, 2012

தூய ஆவியாரின் வருகை பெருவிழா

திருப்பலி முன்னுரை:
இறை ஆவிக்குரியவர்களே,
   தூய ஆவியாரின் வருகை பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விண்ணகம் செல்லும் முன்பு, தனது சீடர்களை பலப்படுத்தும் துணையாளராக  தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித் திருந்தார். இயேசு விண்ணேற்றம் அடைந்த பத்தாம் நாளில் தூய ஆவியாரின் வருகை நிகழ்ந்தது. தேற்றரவாளரான தூய ஆவியாரின் ஆற்றலால் உறுதிப்படுத்தப்பட்ட திருத்தூ தர்கள் கிறிஸ்துவின் நற்செதியைத் துணிவுடன் பறைசாற்றி திருச்சபையை நிறுவிய நாளை நாம் இன்று கொண்டாடுகிறோம்.மரணத்தை தூய ஆவியின் ஆற்றலைப் பெற்ற வர்களாய் கிறிஸ்துவுக்கு சான்று பகரும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் நாம் உருக்க மாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
ஆவிக்குரியவர்களே, 
     இன்றைய முதல் வாசகம், அன்னை மரியா மேலும், திருத்தூதர்கள் மீதும் தூய ஆவி இறங்கிவந்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட சீடர்கள், திருத்தூதர் பேதுருவின் தலைமையில் நற்செய்தியைப் பறைசாற்றுவதையும், அவர்கள் பல்வேறு மொழிகளில் பேசுவதைக் கேட்டு மக்கள் வியப்படைவதையும் இங்கு காண் கிறோம். தூய ஆவியாரின் ஆலயங்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம், ஆவிக்குரிய செயல்களில் ஆர்வமாக செயல்பட வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆவிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், தூய ஆவியாரின் கனிகளைப் பற்றி பேசுகிறது. ஊனியல்பின் இச்சைகளை விலக்கி, தூய ஆவியின் கனிகளை விளைவிப்பவர்களே இயேசுவுக்கு உரியவர்கள் என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். ஆவியானவரின் வழி காட்டுதல்படி வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஆவியைப் பொழிபவராம் இறைவா,
   தூய ஆவியாரின் வருகையால் தோன்றி வளர்ந்த திருச்சபை, அதே ஆவியாரால் வழிநடத்தப்பட்டு செழித்தோங்குமாறு, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும்
ஆவியானவரின் அருள் கொடைகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. புதுவாழ்வு அளிப்பவராம் இறைவா,
   இந்த உலகில் பணம், பதவி, சிற்றின்பம் போன்றவற்றில் சுகங்களைத் தேடி, அருள் வாழ்வில் நாட்டமின்றி வாழும் மக்கள் மீது உமது புதுப்பிக்கும் ஆவியைப் பொழிந்து, விண்ணகத்தை  வாழ்வை நாடித் தேடும் மனதை அவர்களுக்கு அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. நீதியின் அரசராம் இறைவா,
   எம் நாட்டு மக்கள் மீதும், தலைவர்கள் மீதும் உமது ஆவியைப் பொழிந்து, நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் செம்மையான பாதையில் எங் களை வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. பிரிந்ததை இணைப்பவராம் இறைவா,
   கிறிஸ்துவின் பெயரால் பல்வேறு சபைகளாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், தூய ஆவியா
ரின் வல்லமையால் ஒன்றிணைக்கப்பட்டு, உலகமெங்கும் கிறிஸ்துவின் சாட்சிகளாக விளங்கத் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எம்மில் செயலாற்றுபவராம் இறைவா,
   எம் பங்கு சமூகத்தில் வாழும் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனை வரும், தூய ஆவியாரின் செயல்களை எங்கள் வாழ்வில் வெளிப்படுத்தி, கிறிஸ்துவில் இணைந்து வாழத் தேவையான
அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.