Saturday, June 29, 2013

ஜூன் 30, 2013

பொதுக்காலம் 13-ம் ஞாயிறு

முதல் வாசகம்: 1 அரசர்கள் 19:16,19-21 
   அந்நாள்களில் ஆண்டவர் எலியாவை நோக்கி, "ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்'' என்றார். எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொ ழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந் தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார். எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, "நான் என் தாய் தந்தையிடம் விடை பெற்று வர அனுமதி தாரும். அதன் பின் உம்மைப் பின்செல்வேன்" என்றார். அதற்கு அவர், "சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!" என்றார். எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற, அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.
இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 5:1,13-18
   சகோதர சகோதரிகளே, கிறிகிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத் தளை எனும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள். அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்க ளுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமை களாய் இருங்கள். ``உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக'' என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை! எனவே நான் சொல்கிறேன்: தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறை வேற்ற மாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங் கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவதில்லை. நீங்கள் தூய ஆவியால் வழி நடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 9:51-62
  அக்காலத்தில் இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே, எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள வில்லை. அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?'' என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள். அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, "நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்'' என்றார். இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடு களும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை'' என்றார். இயேசு மற்றொருவரை நோக்கி, "என்னைப் பின்பற்றி வாரும்'' என்றார். அவர், "முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, "இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படு வார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்'' என்றார். வேறொருவரும், "ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்'' என்றார். இயேசு அவரை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, June 27, 2013

ஜூன் 30, 2013

பொதுக்காலம் 13-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   பொதுக்காலத்தின் பதிமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இயேசுவின் அழைப்பை காலம் தாழ்த்தாமல் ஏற்க இன்றைய திருவழி பாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாத மக்களை, அவர் சினம் கொண்டு அழிப்பதில்லை என்றாலும் அவரை நம் இல்லத்தில் வரவேற்பது நம் கடமை. தலை சாய்க்கக்கூட இடமில்லாதவராக இயேசு இந்த உலகில் வாழ்ந்தார். தன்னைப் பின் பற்ற விரும்பும் ஒவ்வொருவரும், உலகப்பற்று இல்லாதவர்களாய் இருக்க வேண்டுமென ஆண்டவர் விரும்புகிறார். திரும்பிப் பார்க்காமல் கிறிஸ்துவைப் பின்தொடர்பவரே இறை யாட்சிக்கு உட்பட முடியும் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் விருப் பத்துக்கு நம்மையே அர்ப்பணித்து வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் எலிசாவின் அழைப்பை பற்றி எடுத்துரைக் கிறது. ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்த எலிசாவை, ஆண்டவரின் பணிக்காக எலியா தேர்ந் தெடுக்கும் நிகழ்வை இங்கு காண்கிறோம். ஆண்டவரின் அழைப்பை பெற்ற எலிசா பெற்றோரிடம் விடைபெற்று வர அனுமதி கோருகிறார். எலியா அனுமதி அளித்ததும், எலிசா உழுத கலப்பையால் ஏர் மாடுகளை சமைத்து விருந்து பரிமாறுவதைக் காண்கி றோம். அவர் பெற்றோரிடம் விடைபெற்று, எலியாவைப் பின்பற்றி இறைவாக்கு பணி யாற்றுகிறார். எலிசாவைப் போன்று, நாமும் ஆண்டவரின் அழைப்பை கால தாமதமின்றி ஏற்றுக்கொள்ள வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து வழங்கிய உரிமை வாழ் வில் நிலைத்திருக்க நமக்கு அழைப்பு விடுக்கிறார். ஊனியல்பின் செயல்களுக்கு அடிமை களாய் இல்லாமல், கிறிஸ்துவின் அன்பினால் நிறைவு காணும்படி நமக்கு அறிவுரை வழங்குகிறார். ஊனியல்பின் இச்சைகளைப் புறக்கணித்து தூய ஆவியின் தூண்டுதலுக் கேற்ப வாழ பவுல் நம்மை அழைக்கிறார். ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்காமல், அன்பின் சமூகமாய் ஒன்றிணைத்து வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசு வின் அழைப்பை உணர்ந்தவர்களாய், தூய ஆவியின் கனிகளை நம் வாழ்வில் விளை விக்கும் வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. பணியாற்ற அழைப்பவராம் இறைவா,
  
உமது பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத் தார் அனைவரும், உமக்கு பிரமாணிக்கம் உள்ளவர்களாய் வாழ்ந்து, உமது திருவுளத்தை இம்மண்ணில் நிறைவேற்ற துணை நிற்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. விடுதலை அருள்பவராம் இறைவா,
   உலகெங்கும் நிலவி வரும் வன்முறை, தீவிரவாதம், அடக்குமுறை ஆகியவற்றின் பிடி யில் இருந்து மக்களை விடுவிப்பவர்களாக திகழும் ஆற்றலை நாடுகளின் தலைவர்க ளுக்கு வழங்குமாறு
உம்மை மன்றாடுகிறோம்.
3. மீட்பு அளிப்பவராம் இறைவா,
   இந்தியாவில் உம்மை ஏற்றுக்கொள்ளாமல் வாழும் பிற சமய மக்கள், உம் மகன் வழி யாக நீர் வழங்கும் மீட்பையும், உரிமை வாழ்வையும் கண்டுணர்ந்து கொள்ள அருள்புரி யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வு தருபவராம் இறைவா,
  உலகின் தீய வழிகாட்டுதலால் ஊனியல்பின் இச்சைகளுக்கு அடிமைகளாகி, உமது அன் பையும் பிறரது உறவையும் புறக்கணித்து வாழும் மக்கள், உமது அருளால் புதுவாழ்வு பெற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

5. வரங்களை பொழிபவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் அழைப்பை உணர்ந்தவர்களாய், பிறரிடையே தூய ஆவியின் கனிகளை விளைவிக்கும்  அருட்கருவி களாய் செயல்பட வரம் தருமாறு 
உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, June 22, 2013

ஜூன் 23, 2013

பொதுக்காலம் 12-ம் ஞாயிறு

முதல் வாசகம்: செக்கரியா 12:10-11
   ஆண்டவர் கூறியது: நான் தாவீது குடும்பத்தார் மேலும், எருசலேமில் குடியிருப்போர் மேலும் இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையையும் பொழிந்தருள்வேன். அப் போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்று நோக்குவார்கள்; அவனை உற்றுநோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்து போன தம் தலைப்பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும் மனம் கசந்து அழுவார்கள். அந்நாளில் எருசலேமில் எழும்பும் ஓலம் மெகிதோவின் சமவெளியில் அதத்ரிம்மோனின் புலம்பலைப் போலப் பெரிதாயிருக்கும்.
இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 3:26-29
   சகோதர சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங் கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 9:18-24
  அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட் டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், "நான் யார் என மக்கள் சொல்கிறார் கள்?'' என்று அவர் கேட்டார். அவர்கள் மறுமொழியாக, "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். "ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழி யாக, "நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். மேலும் இயேசு, "மானிட மகன் பல வாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்பட வும் வேண்டும்'' என்று சொன்னார். பின்பு அவர் அனைவரையும் நோக்கி, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Saturday, June 15, 2013

ஜூன் 16, 2013

பொதுக்காலம் 11-ம் ஞாயிறு

முதல் வாசகம்: 2 சாமுவேல் 12:7-10,13
   அந்நாள்களில் நாத்தான் தாவீதிடம், "நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னை திருப்பொழிவு செய்தேன்; நான் உன்னை சவுலின் கையினின்று விடுவித்தேன். உன் தலைவரின் வீட்டை உன்னிடம் ஒப்படைத்தேன்; அவன் மனைவியரையும் உனக்கு மனைவியர் ஆக் கினேன்; இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்; இது போதாதென்றால் உனக்கு மேலும் மிகுதியாய்க் கொடுத்திருப்பேன். பின் ஏன் நீ ஆண்டவ ரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர்தம் பார்வையில் தீயது செய்தாய்? இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இரையாக்கி, அவன் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண் டாய்; அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்! இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது; ஏனெனில் நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்.'" அப்போது தாவீது நாத்தானிடம், "நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்" என்று சொன்னார். நாத்தான் தாவீதி டம், "ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய்" என்றார்.
இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 2:16,19-21
   சகோதர சகோதரிகளே, திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்து வின் மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடி யும் என நாம் அறிந்திருக்கிறோம். ஆதலால்தான் நாமும் சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, நம்பிக்கையால் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகுமாறு கிறிஸ்து இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் எவருமே இறைவ னுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை. திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன். அதற்கு அச்சட்டமே காரணம். நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ் துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார். நான் கடவுளின் அருள் பயனற்றுப்போக விடமாட்டேன். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக் கூடுமானால் கிறிஸ்து இறந்தது வீண் என்றாகுமே!

நற்செய்தி வாசகம்: லூக்கா 7:36-8:3
  அக்காலத்தில் பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந் தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரிய வந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு, அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசி னார். அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியா யிற்றே" என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். இயேசு அவரைப் பார்த்து, "சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்" என்றார். அதற்கு அவர், "போதகரே, சொல்லும்" என்றார். அப்பொழுது அவர், "கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரிய மும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன் பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?'' என்று கேட்டார். சீமோன் மறு மொழியாக, "அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கி றேன்" என்றார். இயேசு அவரிடம், "நீர் சொன்னது சரியே" என்றார். பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், "இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்த மிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்: இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார். பின்பு அப்பெண்ணைப் பார்த்து, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார். "பாவங்களை யும் மன்னிக்கும் இவர் யார்?" என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக் குள் சொல்லிக்கொண்டார்கள். இயேசு அப்பெண்ணை நோக்கி, "உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க" என்றார். அதற்குப் பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவரு டன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார் வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணி விடை செய்து வந்தார்கள்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, June 13, 2013

ஜூன் 16, 2013

பொதுக்காலம் 11-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினோராம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம். நம்பிக்கை மற்றும் அன்பால் கடவுளுக்கு ஏற்புடையோர் ஆகுமாறு இன் றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது பலவீனத்தால் நாம் பல பாவங் களை செய்து கடவுளின் அன்பில் இருந்து விலகி விடுகிறோம். வாழ்வின் பல்வேறு துன்பச் சூழல்களால், கடவுள் மீதான நம்பிக்கையை இழந்து உலகப் போக்கில் இன்பம் காண முயற்சிக்கிறோம். இன்றைய நற்செய்தியில் வரும் பெண்ணைப் போன்று நமது பாவ நிலையை உணர்ந்து, கடவுளின் காலடிகளில் தஞ்சமடைய நாம் அழைக்கப்படுகி றோம். நமது மனமாற்றத்தை கண்ணீராய் வெளிப்படுத்தும்போது, கடவுளின் கருணை உள்ளத்தை நாம் கண்டுகொள்ள முடியும். மனம் திரும்பிய புது வாழ்வால், ஆண்டவ ருக்கு உகந்தோராய் மாறும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், தாவீது அரசரின் மனமாற்றத்தை குறித்து எடுத்துரைக்கிறது. ஆண்டவரால் இஸ்ரயேலின் அரசராய் திருப்பொழிவு செய்யப்பட்ட தாவீது, கடவுளின் அன்பை மறந்து உலகப் பொருட்களில் இன்பம் காண முயற்சிக்கிறார். சிற்றின்ப ஆசை களுக்கு அடிமையான தாவீது, இத்தியராகிய உரியாவைக் கொன்று, அவரது மனைவியை உரிமையாக்கி கொள்கிறார். இதை இறைவாக்கினர் நாத்தான் வழியாக ஆண்டவர் கண் டிப்பதைக் காண்கிறோம். தாவீதும் தன் பாவத்தை உணர்ந்தவராய், "நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்" என அறிக்கையிட்டு மன்னிப்பு பெறுகிறார். நமது பாவ வாழ்வால் ஆண்டவரை வேதனைப்படுத்தியிருந்தால், தாவீதைப் போன்று மனம் வருந்தி மன்னிப்பு பெற வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நம்பிக்கையாலே நாம் இறைவ னுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என எடுத்துரைக்கிறார். திருச்சட்டம் சார்ந்த செயல்கள் அல்ல, இயேசு கிறிஸ்து மீது கொள்ளும் நம்பிக்கையே மீட்பு அளிக்கிறது என்பதை உணர அழைப்பு விடுக்கப்படுகிறது. கடவுள் மீதான நம்பிக்கை, கடவுளின் விருப்பத்துக்கு நம்மை அர்ப்பணித்து வாழத் தூண்டுகிறது. தன்னையே சிலுவையில் பலியாக கையளித்த கிறிஸ் துவின் அருளால், பாவத்திற்கு எதிரான தூய வாழ்வு வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இயேசு கிறிஸ்து மீதான நம்பிக்கையால், கடவுளை அன்பு செய்து வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,
  
உமது திருச்சபையின் மக்கள் விசுவாசத்திலும் அன்பிலும் வளரத் தேவையான வழி காட்டுதலை அளிக்கும் ஞானத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும், வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் ஊற்றாம் இறைவா,
   ஆசியா, ஆப்ரிக்கா கண்டங்களில் போர் மேகங்கள் சூழ்ந்து காணப்படும் நாடுகளில் அமைதி ஏற்படவும், உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு விடிவு கிடைக்கவும் உத
விட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. தூண்டுதல் ருபவராம் இறைவா,
   இந்தியாவில் வாழும் பிற சமயத்தினர் உமது உண்மையின் ஒளியைக் காணவும், உம்மில் நம்பிக்கை கொண்டு உம்மையும் பிறரையும் அன்பு செய்து வாழவும் தூண்டுதல் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மன்னிப்பு அருள்பவராம் இறைவா,
  உலகில் பிறர் உடைமைகள் மீதும், பிறருக்கு உரியவர்கள் மீதும் ஆசை கொண்டு, உமது விருப்பத்துக்கும், பிறரன்பு கட்டளைக்கும் எதிரான பாவங்களில் சிக்கித் தவிப்போரை அவற்றிலிருந்து மீட்டிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் உரிமையாளராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், நம்பிக்கையிலும் அன்பிலும் வளரவும், உம் திருமகனைப் பின்பற்றி பாவத்திற்கு இடமளிக்காத தூயோராய் வாழவும்
வரம் தந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, June 8, 2013

ஜூன் 9, 2013

பொதுக்காலம் 10-ம் ஞாயிறு

முதல் வாசகம்: 1 அரசர்கள் 17:17-24
   ஒருநாள் எலியா தங்கியிருந்த வீட்டுத் தலைவியின் மகன் நோயுற்றான். அவனது நோய் மிகவும் முற்றவே, அவன் மூச்சு நின்று விட்டது. அவர் எலியாவிடம், "கடவுளின் அடியவரே, எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? என் பாவத்தை நினைவூட்டவும் என் மகனைச் சாகடிக்கவுமா நீர் வந்திருக்கிறீர்?" என்றார். எலியா அவரிடம், "உன் மகனை என்னிடம் கொடு" என்று சொல்லி, அவனை அவர் மடியிலிருந்து எடுத்துத் தாம் தங்கியிருந்த மாடி யறைக்குத் தூக்கிச் சென்று தம் படுக்கையில் கிடத்தினார். அவர் ஆண்டவரை நோக்கி, "என் கடவுளாகிய ஆண்டவரே, எனக்குத் தங்க இடம் கொடுத்த கைம்பெண்ணின் மகனை சாகடித்து அவளைத் துன்புறுத்தலாமா?" என்று கதறினார். அவர் அந்தச் சிறுவன்மீது மூன்று முறை குப்புறப் படுத்து ஆண்டவரை நோக்கி, "என் கடவுளாகிய ஆண்டவரே, இந் தச் சிறுவன் மீண்டும் உயிர் பெறச் செய்யும்" என்று மன்றாடினார். ஆண்டவரும் எலியா வின் குரலுக்குச் செவிகொடுத்தார். சிறுவனுக்கு மீண்டும் உயிர் திரும்பி வரவே, அவன் பிழைத்துக் கொண்டான். எலியா சிறுவனைத் தூக்கிக்கொண்டு மாடி அறையிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்து, "இதோ! உன் மகன் உயிருடன் இருக்கிறான்" என்று கூறி அவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார். அந்தப் பெண் எலியாவிடம், "நீர் கடவுளின் அடி யவர் என்றும் உம் வாயிலிருந்து வரும் ஆண்டவரின் வாக்கு உண்மையானது என்றும் தெரிந்து கொண்டேன்" என்றார்.
இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 1:11-19
   சகோதர சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்க ளுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல. எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்க வில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது. நான் யூத நெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண் டேன் என்பதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்க வனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூத நெறியில் சிறந்து விளங்கி னேன். ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண் டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. எனக்கு முன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்கு போகவுமில்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்கு போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன். ஆண்டவரின் சகோதரரான யாக் கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை.

நற்செய்தி வாசகம்: லூக்கா 7:11-17
  அக்காலத்தில் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந் திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம் பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, "அழாதீர்" என்றார். அருகில் சென்று பாடை யைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், "இளை ஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு" என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்ச முற்று, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று சொல்லி கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, June 6, 2013

ஜூன் 9, 2013

பொதுக்காலம் 10-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
வாழ்வுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பத்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம். ஆண்டவரின் உயிரளிக்கும் ஆற்றலை உணர்ந்துகொள்ள இன்றைய திரு வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. துன்பத்தில் இருப்போர் மீது பரிவு காட்டும் இறை வனாக நம் ஆண்டவர் இருக்கிறார் என்பதை உணர்ந்து வாழ அழைக்கப்படுகிறோம். நயீன் நகர கைம்பெண்ணின் மகனை இயேசு உயிரோடு எழுப்பிய நிகழ்வை இன்றைய நற்செய்தியில் நாம் காண்கிறோம். "கடவுள் தம் மக்களைத் தேடி வந்தார்" என்பதை பிற ருக்கு அறிவிக்க நாம் தூண்டுதல் பெறுமாறு செபிப்போம். உயிர் தரும் ஆண்டவரின் வல் லமையால் நம் வாழ்வின் துன்பங்கள் விலக வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
வாழ்வுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், சாரிபாத்து கைம்பெண்ணின் மகனை இறைவாக்கினர் எலியா உயிரோடு எழுப்பிய நிகழ்வைத் தருகிறது. ஆகாபு அரசனிடம் இருந்து தப்பித்து ஓடிய எலியா, சாரிபாத்து நகரில் வசித்த ஒரு கைம்பெண்ணின் வீட்டில் தங்கி இருந்தார். அந்த கைம்பெண்ணின் மகன் திடீரென நோயுற்று இறந்து விடுகிறான். ஆண்டவரிடம் மன்றாடி, எலியா அந்த சிறுவனை உயிரோடு எழுப்பியதைக் காண்கிறோம். நாமும் ஆண் டவரின் ஊழியர்களுக்கு உதவி செய்து, கடவுளிடம் இருந்து வரும் கைமாறைப் பெற்றுக் கொள்ள வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
வாழ்வுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், பிற இனத்தவர்க்கு நற்செய்தி அறிவிக்க தேர்ந்தெடுக்கப் பட்டது பற்றிய திருத்தூதர் பவுலின் தன்னிலை விளக்கத்தை தருகிறது. திருச்சபையைத் துன்புறுத்தி ஒழிக்க முயன்ற சவுல், இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயி லாக பவுலாக மாறிய நிகழ்வு இங்கு தரப்படுகிறது. கடவுளின் அருளால் நற்செய்தியை அறிவிக்க அழைப்பு பெற்ற பவுல், தன் தொடக்க கிறிஸ்தவ வாழ்வையும் விவரிக்கிறார். கிறிஸ்துவை நம் வாழ்வில் ஏற்றுள்ள நாம் அனைவரும் அவருக்கு சான்று பகர்பவர் களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. என்றும் வாழ்பவராம் இறைவா,
  
உலகெங்கும் பரவியுள்ள உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், இறைமக்களை வாழ்வின் உண்மை நெறியில் வளர்த்தெடுக்க தேவையான அருளைப் பொழியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வு தருபவராம் இறைவா,
   ஆசியா, ஆப்ரிக்கா கண்டங்களில் உமது நற்செய்திக்காக துன்புறும் கிறிஸ்தவர்களும், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களில் விசுவாசம் இன்றி வாழும் கிறிஸ் தவர்களும் உமது ஆற்றலை வியந்துணர உதவுமாறு
உம்மை மன்றாடுகிறோம்.
3. புகலிடம் அருள்பவராம் இறைவா,
   உமது திருச்சபையில் நிகழும் வல்ல செயல்கள் மூலம், எம் நாட்டு மக்கள் அனைவரும் உம்மை தங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ளவும், விண்ணகத்தை அடையாளப்படுத்தும் புக லிடமாக திருச்சபையைக் காணவும் தூண்டுதல் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. பரிவு காட்டுபவராம் இறைவா,
   தங்கள் பாவங்களுக்கு பரிகாரமாகவும், உமது மாட்சி வெளிப்படும் வகையிலும் உடல், உள்ள வேதனைகளை அனுபவிக்கும் மக்கள் அனைவரும், மகிழ்ச்சிநிறை புதுவாழ்வை கண்டுணர துணை
புரியுமாறு வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உயிர் அளிப்பவராம் இறைவா,
   எங்கள் பங்கு குடும்பத்தில் வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது ஆற்றலால் புத்துயிர் பெற்று, உடல், உள்ள, ஆன்ம சுகத்தோடு உமது சாட்சிகளாய் வாழ
வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, June 1, 2013

ஜூன் 2, 2013

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா

முதல் வாசகம்: தொடக்க நூல் 14:18-20
   அந்நாள்களில் சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் 'உன்னத கடவுளின்' அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிராமை வாழ்த்தி, "விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!'' என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 11:23-26
   சகோதர சகோதரிகளே, ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக் கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, "இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்'' என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, "இந்தக் கிண்ணம் என் இரத்தத் தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல் லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்'' என்றார். ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும் வரை அறிவிக்கிறீர்கள்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 9:11-17
  அக்காலத்தில் இயேசு மக்களை வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். பொழுது சாயத் தொடங்கவே பன்னிரு வரும் அவரிடம் வந்து, "இவ்விடம் பாலை நிலம் ஆயிற்றே; சுற்றிலும் உள்ள ஊர்களுக் கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்'' என்றனர். இயேசு அவர்களிடம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங் கள்'' என்றார். அவர்கள், "எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்'' என்றார்கள். ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர் களை நோக்கி, "இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்'' என் றார். அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண் ணாந்து பார்த்து, அவற்றின்மீது ஆசி கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரி டம் கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3