பொதுக்காலம் 12-ம் ஞாயிறு
ஆண்டவர் கூறியது: நான் தாவீது குடும்பத்தார் மேலும், எருசலேமில்
குடியிருப்போர் மேலும் இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையையும்
பொழிந்தருள்வேன்.
அப் போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்று நோக்குவார்கள்; அவனை
உற்றுநோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்து
போன தம் தலைப்பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும் மனம் கசந்து அழுவார்கள்.
அந்நாளில் எருசலேமில் எழும்பும் ஓலம் மெகிதோவின் சமவெளியில் அதத்ரிம்மோனின்
புலம்பலைப் போலப் பெரிதாயிருக்கும்.
இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 3:26-29
சகோதர சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங் கள் அனைவரும் கடவுளின்
மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி
திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்.
இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக்
குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை;
கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்.
நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல்களுமாய்
இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும்
இருக்கிறீர்கள்.
நற்செய்தி வாசகம்: லூக்கா 9:18-24