Thursday, June 13, 2013

ஜூன் 16, 2013

பொதுக்காலம் 11-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினோராம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம். நம்பிக்கை மற்றும் அன்பால் கடவுளுக்கு ஏற்புடையோர் ஆகுமாறு இன் றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது பலவீனத்தால் நாம் பல பாவங் களை செய்து கடவுளின் அன்பில் இருந்து விலகி விடுகிறோம். வாழ்வின் பல்வேறு துன்பச் சூழல்களால், கடவுள் மீதான நம்பிக்கையை இழந்து உலகப் போக்கில் இன்பம் காண முயற்சிக்கிறோம். இன்றைய நற்செய்தியில் வரும் பெண்ணைப் போன்று நமது பாவ நிலையை உணர்ந்து, கடவுளின் காலடிகளில் தஞ்சமடைய நாம் அழைக்கப்படுகி றோம். நமது மனமாற்றத்தை கண்ணீராய் வெளிப்படுத்தும்போது, கடவுளின் கருணை உள்ளத்தை நாம் கண்டுகொள்ள முடியும். மனம் திரும்பிய புது வாழ்வால், ஆண்டவ ருக்கு உகந்தோராய் மாறும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், தாவீது அரசரின் மனமாற்றத்தை குறித்து எடுத்துரைக்கிறது. ஆண்டவரால் இஸ்ரயேலின் அரசராய் திருப்பொழிவு செய்யப்பட்ட தாவீது, கடவுளின் அன்பை மறந்து உலகப் பொருட்களில் இன்பம் காண முயற்சிக்கிறார். சிற்றின்ப ஆசை களுக்கு அடிமையான தாவீது, இத்தியராகிய உரியாவைக் கொன்று, அவரது மனைவியை உரிமையாக்கி கொள்கிறார். இதை இறைவாக்கினர் நாத்தான் வழியாக ஆண்டவர் கண் டிப்பதைக் காண்கிறோம். தாவீதும் தன் பாவத்தை உணர்ந்தவராய், "நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்" என அறிக்கையிட்டு மன்னிப்பு பெறுகிறார். நமது பாவ வாழ்வால் ஆண்டவரை வேதனைப்படுத்தியிருந்தால், தாவீதைப் போன்று மனம் வருந்தி மன்னிப்பு பெற வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நம்பிக்கையாலே நாம் இறைவ னுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என எடுத்துரைக்கிறார். திருச்சட்டம் சார்ந்த செயல்கள் அல்ல, இயேசு கிறிஸ்து மீது கொள்ளும் நம்பிக்கையே மீட்பு அளிக்கிறது என்பதை உணர அழைப்பு விடுக்கப்படுகிறது. கடவுள் மீதான நம்பிக்கை, கடவுளின் விருப்பத்துக்கு நம்மை அர்ப்பணித்து வாழத் தூண்டுகிறது. தன்னையே சிலுவையில் பலியாக கையளித்த கிறிஸ் துவின் அருளால், பாவத்திற்கு எதிரான தூய வாழ்வு வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இயேசு கிறிஸ்து மீதான நம்பிக்கையால், கடவுளை அன்பு செய்து வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,
  
உமது திருச்சபையின் மக்கள் விசுவாசத்திலும் அன்பிலும் வளரத் தேவையான வழி காட்டுதலை அளிக்கும் ஞானத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும், வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் ஊற்றாம் இறைவா,
   ஆசியா, ஆப்ரிக்கா கண்டங்களில் போர் மேகங்கள் சூழ்ந்து காணப்படும் நாடுகளில் அமைதி ஏற்படவும், உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு விடிவு கிடைக்கவும் உத
விட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. தூண்டுதல் ருபவராம் இறைவா,
   இந்தியாவில் வாழும் பிற சமயத்தினர் உமது உண்மையின் ஒளியைக் காணவும், உம்மில் நம்பிக்கை கொண்டு உம்மையும் பிறரையும் அன்பு செய்து வாழவும் தூண்டுதல் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மன்னிப்பு அருள்பவராம் இறைவா,
  உலகில் பிறர் உடைமைகள் மீதும், பிறருக்கு உரியவர்கள் மீதும் ஆசை கொண்டு, உமது விருப்பத்துக்கும், பிறரன்பு கட்டளைக்கும் எதிரான பாவங்களில் சிக்கித் தவிப்போரை அவற்றிலிருந்து மீட்டிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் உரிமையாளராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், நம்பிக்கையிலும் அன்பிலும் வளரவும், உம் திருமகனைப் பின்பற்றி பாவத்திற்கு இடமளிக்காத தூயோராய் வாழவும்
வரம் தந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.