பொதுக்காலம் 10-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
வாழ்வுக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் பத்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம்.
ஆண்டவரின் உயிரளிக்கும் ஆற்றலை உணர்ந்துகொள்ள இன்றைய திரு வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.
துன்பத்தில் இருப்போர் மீது பரிவு காட்டும் இறை வனாக நம் ஆண்டவர் இருக்கிறார் என்பதை உணர்ந்து வாழ அழைக்கப்படுகிறோம். நயீன் நகர கைம்பெண்ணின் மகனை இயேசு உயிரோடு எழுப்பிய நிகழ்வை இன்றைய நற்செய்தியில் நாம் காண்கிறோம். "கடவுள் தம் மக்களைத் தேடி வந்தார்" என்பதை பிற ருக்கு அறிவிக்க நாம் தூண்டுதல் பெறுமாறு செபிப்போம். உயிர் தரும் ஆண்டவரின் வல் லமையால் நம் வாழ்வின் துன்பங்கள் விலக வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை:
வாழ்வுக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகம், சாரிபாத்து கைம்பெண்ணின் மகனை இறைவாக்கினர் எலியா உயிரோடு எழுப்பிய நிகழ்வைத் தருகிறது. ஆகாபு
அரசனிடம் இருந்து தப்பித்து ஓடிய எலியா, சாரிபாத்து நகரில் வசித்த ஒரு கைம்பெண்ணின் வீட்டில் தங்கி இருந்தார். அந்த கைம்பெண்ணின் மகன் திடீரென நோயுற்று இறந்து விடுகிறான். ஆண்டவரிடம் மன்றாடி, எலியா அந்த சிறுவனை உயிரோடு எழுப்பியதைக் காண்கிறோம். நாமும் ஆண் டவரின் ஊழியர்களுக்கு உதவி செய்து, கடவுளிடம் இருந்து வரும் கைமாறைப் பெற்றுக் கொள்ள வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
வாழ்வுக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகம், பிற இனத்தவர்க்கு நற்செய்தி அறிவிக்க தேர்ந்தெடுக்கப் பட்டது பற்றிய திருத்தூதர் பவுலின் தன்னிலை விளக்கத்தை தருகிறது. திருச்சபையைத் துன்புறுத்தி ஒழிக்க முயன்ற சவுல், இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயி லாக பவுலாக மாறிய நிகழ்வு இங்கு தரப்படுகிறது. கடவுளின் அருளால் நற்செய்தியை அறிவிக்க அழைப்பு பெற்ற பவுல், தன் தொடக்க கிறிஸ்தவ வாழ்வையும் விவரிக்கிறார். கிறிஸ்துவை நம் வாழ்வில் ஏற்றுள்ள நாம் அனைவரும் அவருக்கு சான்று பகர்பவர் களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.
இன்றைய இரண்டாம் வாசகம், பிற இனத்தவர்க்கு நற்செய்தி அறிவிக்க தேர்ந்தெடுக்கப் பட்டது பற்றிய திருத்தூதர் பவுலின் தன்னிலை விளக்கத்தை தருகிறது. திருச்சபையைத் துன்புறுத்தி ஒழிக்க முயன்ற சவுல், இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயி லாக பவுலாக மாறிய நிகழ்வு இங்கு தரப்படுகிறது. கடவுளின் அருளால் நற்செய்தியை அறிவிக்க அழைப்பு பெற்ற பவுல், தன் தொடக்க கிறிஸ்தவ வாழ்வையும் விவரிக்கிறார். கிறிஸ்துவை நம் வாழ்வில் ஏற்றுள்ள நாம் அனைவரும் அவருக்கு சான்று பகர்பவர் களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.
இறைமக்கள் மன்றாட்டு:
1. என்றும் வாழ்பவராம் இறைவா,
உலகெங்கும் பரவியுள்ள உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், இறைமக்களை வாழ்வின் உண்மை நெறியில் வளர்த்தெடுக்க தேவையான அருளைப் பொழியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வு தருபவராம் இறைவா,
ஆசியா, ஆப்ரிக்கா கண்டங்களில் உமது நற்செய்திக்காக துன்புறும் கிறிஸ்தவர்களும், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களில் விசுவாசம் இன்றி வாழும் கிறிஸ் தவர்களும் உமது ஆற்றலை வியந்துணர உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. புகலிடம் அருள்பவராம் இறைவா,
உமது திருச்சபையில் நிகழும் வல்ல செயல்கள் மூலம், எம் நாட்டு மக்கள் அனைவரும் உம்மை தங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ளவும், விண்ணகத்தை அடையாளப்படுத்தும் புக லிடமாக திருச்சபையைக் காணவும் தூண்டுதல் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. பரிவு காட்டுபவராம் இறைவா,
தங்கள் பாவங்களுக்கு பரிகாரமாகவும், உமது மாட்சி வெளிப்படும் வகையிலும் உடல், உள்ள வேதனைகளை அனுபவிக்கும் மக்கள் அனைவரும், மகிழ்ச்சிநிறை புதுவாழ்வை கண்டுணர துணைபுரியுமாறு வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உயிர் அளிப்பவராம் இறைவா,
எங்கள் பங்கு குடும்பத்தில் வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது ஆற்றலால் புத்துயிர் பெற்று, உடல், உள்ள, ஆன்ம சுகத்தோடு உமது சாட்சிகளாய் வாழ வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.