Thursday, June 27, 2013

ஜூன் 30, 2013

பொதுக்காலம் 13-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   பொதுக்காலத்தின் பதிமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இயேசுவின் அழைப்பை காலம் தாழ்த்தாமல் ஏற்க இன்றைய திருவழி பாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாத மக்களை, அவர் சினம் கொண்டு அழிப்பதில்லை என்றாலும் அவரை நம் இல்லத்தில் வரவேற்பது நம் கடமை. தலை சாய்க்கக்கூட இடமில்லாதவராக இயேசு இந்த உலகில் வாழ்ந்தார். தன்னைப் பின் பற்ற விரும்பும் ஒவ்வொருவரும், உலகப்பற்று இல்லாதவர்களாய் இருக்க வேண்டுமென ஆண்டவர் விரும்புகிறார். திரும்பிப் பார்க்காமல் கிறிஸ்துவைப் பின்தொடர்பவரே இறை யாட்சிக்கு உட்பட முடியும் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் விருப் பத்துக்கு நம்மையே அர்ப்பணித்து வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் எலிசாவின் அழைப்பை பற்றி எடுத்துரைக் கிறது. ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்த எலிசாவை, ஆண்டவரின் பணிக்காக எலியா தேர்ந் தெடுக்கும் நிகழ்வை இங்கு காண்கிறோம். ஆண்டவரின் அழைப்பை பெற்ற எலிசா பெற்றோரிடம் விடைபெற்று வர அனுமதி கோருகிறார். எலியா அனுமதி அளித்ததும், எலிசா உழுத கலப்பையால் ஏர் மாடுகளை சமைத்து விருந்து பரிமாறுவதைக் காண்கி றோம். அவர் பெற்றோரிடம் விடைபெற்று, எலியாவைப் பின்பற்றி இறைவாக்கு பணி யாற்றுகிறார். எலிசாவைப் போன்று, நாமும் ஆண்டவரின் அழைப்பை கால தாமதமின்றி ஏற்றுக்கொள்ள வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து வழங்கிய உரிமை வாழ் வில் நிலைத்திருக்க நமக்கு அழைப்பு விடுக்கிறார். ஊனியல்பின் செயல்களுக்கு அடிமை களாய் இல்லாமல், கிறிஸ்துவின் அன்பினால் நிறைவு காணும்படி நமக்கு அறிவுரை வழங்குகிறார். ஊனியல்பின் இச்சைகளைப் புறக்கணித்து தூய ஆவியின் தூண்டுதலுக் கேற்ப வாழ பவுல் நம்மை அழைக்கிறார். ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்காமல், அன்பின் சமூகமாய் ஒன்றிணைத்து வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசு வின் அழைப்பை உணர்ந்தவர்களாய், தூய ஆவியின் கனிகளை நம் வாழ்வில் விளை விக்கும் வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. பணியாற்ற அழைப்பவராம் இறைவா,
  
உமது பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத் தார் அனைவரும், உமக்கு பிரமாணிக்கம் உள்ளவர்களாய் வாழ்ந்து, உமது திருவுளத்தை இம்மண்ணில் நிறைவேற்ற துணை நிற்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. விடுதலை அருள்பவராம் இறைவா,
   உலகெங்கும் நிலவி வரும் வன்முறை, தீவிரவாதம், அடக்குமுறை ஆகியவற்றின் பிடி யில் இருந்து மக்களை விடுவிப்பவர்களாக திகழும் ஆற்றலை நாடுகளின் தலைவர்க ளுக்கு வழங்குமாறு
உம்மை மன்றாடுகிறோம்.
3. மீட்பு அளிப்பவராம் இறைவா,
   இந்தியாவில் உம்மை ஏற்றுக்கொள்ளாமல் வாழும் பிற சமய மக்கள், உம் மகன் வழி யாக நீர் வழங்கும் மீட்பையும், உரிமை வாழ்வையும் கண்டுணர்ந்து கொள்ள அருள்புரி யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வு தருபவராம் இறைவா,
  உலகின் தீய வழிகாட்டுதலால் ஊனியல்பின் இச்சைகளுக்கு அடிமைகளாகி, உமது அன் பையும் பிறரது உறவையும் புறக்கணித்து வாழும் மக்கள், உமது அருளால் புதுவாழ்வு பெற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

5. வரங்களை பொழிபவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் அழைப்பை உணர்ந்தவர்களாய், பிறரிடையே தூய ஆவியின் கனிகளை விளைவிக்கும்  அருட்கருவி களாய் செயல்பட வரம் தருமாறு 
உம்மை மன்றாடுகிறோம்.