உயிர்ப்பு காலம் 4-ம் ஞாயிறு
முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 2:14,36-41
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில்
அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: "நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும்
மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ர யேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக
அறிந்துகொள்ளுங்கள்."
அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்றத்
திருத்தூதர்களையும் பார்த்து, "சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?"
என்று கேட்டார்கள்.
அதற்குப் பேதுரு, அவர்களிடம், "நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள்
பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின்
பெயரால் திருமுழுக்குப் பெறுங் கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப்
பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்கு றுதியானது உங்களுக்கும் உங்களது
பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம்
அழைக்கும் அனைவருக்கும் உரியது" என்றார்.
மேலும் அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, "நெறிகெட்ட இந்தத்
தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்'' என்று
அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தை களை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப்
பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயி ரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.
பதிலுரைப் பாடல்:
திருப்பாடல் 23:1-3.3-4.5.6
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். (பல்லவி)
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக் கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். (பல்லவி)
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. (பல் லவி)
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். (பல் லவி)
இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 2:20-25

அன்பிற்குரியவர்களே, நன்மை செய்தும், அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால்,
அது கடவுளுக்கு உகந்ததாகும். கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு
முன்மாதி ரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய
அடிச்சுவடுகளைப் பின்பற் றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள். 'வன்செயல் எதுவும் அவர் செய்த தில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில்
இருந்ததில்லை.' பழிக்கப்பட்டபோது பதிலுக்கு பழிக்கவில்லை;
துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; நியாயமாகத் தீர்ப்பு
வழங்கு வோரிடம் தம்மை ஒப்படைத்தார். சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை
அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு
செய்தார். அவர் தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள். நீங்கள் வழி
தவறி அலையும் ஆடுக ளைப் போல இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள்
ஆன்மாக்களின் ஆயரும் கண் காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி
வந்திருக்கிறீர்கள்.
வாழ்த்தொலி: யோவான் 10:14,15
நற்செய்தி வாசகம்: யோவான் 10:1-10
அல்லேலூயா, அல்லேலூயா! "நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்தி ருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன," என்கிறார் ஆண்டவர். அல்லே லூயா!
நற்செய்தி வாசகம்: யோவான் 10:1-10
சிந்தனை: வத்திக்கான் வானொலி