உயிர்ப்பு காலம் 3-ம் ஞாயிறு
முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 2:14,22-33
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில்
அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: "யூத மக்களே, எருசலே மில் வாழும்
மக்களே, இதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். எனது சொற்களைக் கவனித்துக்
கேளுங்கள். இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக்
கேளுங்கள்.கடவுள் நாச ரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில்
வல்லசெயல்களையும் அருஞ்செயல்களை யும் அடையாளங்களையும் செய்து, அவரை
இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே. கடவுள்
தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறி வின்படியும் இந்த
இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறி யாதார்
மூலம் அவரைச் சிலுவையில் அறைந்துக் கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை
மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால் மரணம்
அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. தாவீது அவரைக்குறித்துக்
கூறியது: 'நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என்
வலப்பக்கம் உள்ளார்; எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம்
பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும்
எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம்
ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுக்குழி யைக் காணவிடமாட்டீர்.
வாழ்வின் வழியை நான் அறியச்செய்வீர்; உமது முன்னிலை யில் எனக்கு நிறைவான
மகிழ்ச்சி உண்டு.' சகோதர சகோதரிகளே, நமது குல முதல்வ ராகிய தாவீதைக்
குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம்
செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர்
இறை வாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில்
வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை
அறிந்திருந்தார். அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன் னறிந்து, 'அவரைப்
பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக்
காண விடமாட்டீர்' என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை
உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். அவர்
கடவுளின் வலதுப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய
ஆவியைத் தம் தந்தையிட மிருந்து பெற்றுப் பொழிந்தருளி னார். நீங்கள்
காண்பதும் கேட்பதும் இதுதான்."
பதிலுரைப் பாடல்:
திருப்பாடல் 16:1-2,5.7-8.9-10.11
பல்லவி: ஆண்டவரே, வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்!
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. (பல்லவி)
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச் சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். (பல்லவி)
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாது காப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். (பல்லவி)
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. (பல்லவி)
இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 1:17-21

நீங்கள் "தந்தையே" என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர்
செயல்களின் படியே தீர்ப்பு வழங்குகிறார். ஆகையால் இவ்வுலகில் நீங்கள்
அன்னியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள் உங்கள்
மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை
விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது
பொன்னும் வெள்ளியும் போன்று அழி வுக்குட்பட்டது அல்ல; மாறாக, மாசு மறுவற்ற
ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும் உலகம்
தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில்
உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார். அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது
நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து
பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை
எதிர்நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார்.
வாழ்த்தொலி: திருப்பாடல் 118:24
நற்செய்தி வாசகம்: லூக்கா 24:13-35
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்: லூக்கா 24:13-35
சிந்தனை: வத்திக்கான் வானொலி