உயிர்ப்பு காலம் 6-ம் ஞாயிறு
முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 8:5-8,14-17
அந்நாள்களில் பிலிப்பு, சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு
மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த
அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒருமனத்தோடு அவருக்குச்
செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து
உரத்த குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால்
ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி
உண்டாயிற்று. சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை
எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப் பட்டு, பேதுருவையும் யோவானையும்
அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால்
ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள்; ஏனெனில் அதுவரை அவர்களுள்
யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவ ராகிய இயேசுவின் பெயரால் அவர்கள்
திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்பு பேதுருவும் யோவானும்
தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே, அவர்கள் தூய ஆவி யைப் பெற்றார்கள்.
பதிலுரைப் பாடல்:
திருப்பாடல் 66:1-3.4-5.6-7.16,20
பல்லவி: அனைத்துலகோரே, கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி, "உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை" என்று சொல்லுங்கள். (பல்லவி)
"அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்" என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. (பல்லவி)
கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள் கிறார்! (பல்லவி)
கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என் னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! (பல்லவி)
இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 3:15-18

அன்பிற்குரியவர்களே, உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப்
போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம்
கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால்,
பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும்
குற்றமற்ற தாய் இருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப்
பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள்.
ஏனெனில், தீமை செய்து துன்புறுவதைவிட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை
செய்து துன்புறுவதே மேல். கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே
முறையாக இறந்தார். அவர் உங்களை கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார்.
நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடு இருந்த
அவர் இறந்தார் எனினும் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.
வாழ்த்தொலி: யோவான் 14:23
நற்செய்தி வாசகம்: யோவான் 14:15-21
அல்லேலூயா, அல்லேலூயா! "என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்," என்கிறார் ஆண்டவர்.
அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்: யோவான் 14:15-21