உயிர்ப்பு காலம் 3-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
எங்களோடு தங்கும் ஆண்டவரே!
வழிப்போக்கர்களே,
உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால், உயிர்ப்பு காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். இருள் சூழும் நேரத்தில் நாம் நடந்து செல்லும்போது, இயேசு நமக்கு வழித்துணையாக வருகிறார் என் பதை உணர்ந்துகொள்ள இன்றைய திருவழிபாடு நமக்கு
அழைப்பு விடுக்கிறது. இயேசு வின் இறப்பால் மனம் உடைந்து போயிருந்த சீடர்கள் இருவர் எம்மாவு செல்லும் வழியில், ஆண்டவர் உடன் நடப்பதைக் காண்கிறோம். அவர்களின் அவநம்பிக்கையைப் போக்கும் விதமாக மறைநூலின் இறைவாக்குகள் மூலம் தமது உயிர்ப்பை விளக்கி கூறுகிறார். இயேசு அப்பத்தைப் பிட்டபோது, சீடர்கள் அவரைக் கண்டு கொண்டார்கள். நற்கருணை யில் நம்மோடு உடனிருக்கும் ஆண்டவர் இயேசுவை, நமது விசுவாசப் பயணத்தில் வழித் துணையாக கொண்டு வாழும் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
வழிப்போக்கர்களே,
இன்றைய முதல் வாசகம், பெந்தகோஸ்து நாளில் எருசலேம் நகரில் பேதுரு ஆற்றிய மறையுரையை எடுத்துரைக்கிறது. அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்த இயேசு, கடவுளது திட்டத்தின்படியே யூதர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டார் என்று பேதுரு கூறுகிறார். யூதர்கள் அவரை உரோமையர்கள் மூலம் சிலுவையில் அறைந்துக் கொன்றாலும், தந்தையாம் கடவுள் உயிர்த்தெழச் செய்ததை விளக்குகிறார். இறைத்தந் தையின் வலப்பக்கம் வீற்றிருக்கும் இயேசுவின் உயிர்ப்புக்கு திருத்தூதர்களே சாட்சிகள் என்றும் எடுத்துரைக்கிறார். இயேசுவை நமது வழித்துணையாக ஏற்றுக்கொண்டுள்ள நாம், அவருக்கு சான்று பகர்ந்து வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.
முதல் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசக முன்னுரை:
வழிப்போக்கர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு, இயேசுவின் வழியாக கடவுளிடம் நம்பிக்கை கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறார். மக்களின் பாவங்களுக்கு பரிகாரமாக கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்துவே என்பதை உணர நாம் அழைக்கப்படுகி றோம். கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தத்தால் மீட்கப்பட்ட அனைவரும் நம்பிக்கை வாழ்வில் நிலைத்திருக்குமாறு திருத்தூதர் வலியுறுத்துகிறார். உயிர்த்தெழுந்து விண்ண கத்தில் வீற்றிருக்கும் கிறிஸ்துவின் வருகைக்காக நாம் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்க நினைவூட்டப்படுகிறோம். விசுவாசத்தில் தளராமல் கிறிஸ்துவை எதிர்நோக்கிய வர்களாய் பயணத்தை தொடர வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.
இறைமக்கள் மன்றாட்டு:
1. வாழ்வின் வழித்துணையே இறைவா,
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உம்மையே வழித் துணையாக கொண்டு விசுவாச வாழ்வில் நடை பயிலவும், உம் மக்களை வழிநடத்தவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. மூவுலக அரசரே இறைவா,
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் நற்கருணையில் உம் திருமகனின் உடனிருப்பை உணரவும், பிற சமயத்தினர் முன்னிலையில் உமக்கு சான்று பகரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பின் உருவே இறைவா,
எங்கள் நாட்டில் உருவெடுத்து வரும் மத பயங்கரவாதம், இன, மொழி தீவிரவாதம் ஆகியவை மறைந்து, மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு அமைதியில் வாழ உதவு மாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கத்தின் ஊற்றே இறைவா,
உலகத்தின் கவலைகளுக்கும், துன்பங்களுக்கும் தீர்வு தேடி அலையும் மக்கள் அனை வரும், உம் வழியாக அமைதி காணவும், நீரே உண்மையான கடவுள் என்பதை உணரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. உண்மையின் நிறைவே இறைவா,
எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் திருமகனின் உடலால் ஊட்டம் பெற்று வழிநடக்கவும், அவரது உயிர்ப்புக்கு சாட்சிகளாய் திகழவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.