பொதுக்காலம் 15-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
வார்த்தைக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள்
அனைவரை யும் அன்புடன் அழைக்கிறோம். இறைவனின் வார்த்தைய நம் உள்ளத்தில் ஏற்று பலன் தருபவர்களாய் வாழ இன்றைய திருவழிபாடு
நமக்கு அழைப்பு
விடுக்கிறது. நமது உள் ளத்தை கடவுளுக்கு உகந்த நல்ல நிலமாக மாற்ற நாம் அழைக்கப்படுகிறோம். நம் கண்கள் பேறுபெற்றவை; ஏனெனில் நற்கருணையில் வாழும் ஆண்டவரை அவை காண்கின்றன. நம் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் விவிலியத்தில் உள்ள ஆண்டவரின் வார்த்தை களை அவை கேட்கின்றன. அதேநேரத்தில், நம்மை ஆண்டவருக்கு ஏற்ற பலன் தரவிடா மல் தடுக்கும் உலகு சார்ந்த கவர்ச்சிகள் மற்றும் கவலைகளில் இருந்து விலகி வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.
இன்றைய முதல் வாசகம், ஆண்டவரின் வார்த்தை எவ்வாறு பலன் தருகிறது என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது. வானத்திலிருந்து இறங்கி வரும் மழையும் பனியும், நிலத்தில் விளைச்சலைத் தந்து விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு
உணவையும் பல னாக கொடுக்கின்றன. அவ்வாறே ஆண்டவரின் வார்த்தை, அவரது விருப்பத்தை நம்மில் நிறைவேற்றி பலன் கொடுக்கும் என்ற தெளிவைப் பெற அழைக்கப்படுகிறோம். ஆண்ட வரின் வார்த்தைக்கு பலன் தருபவர்களாய் வாழும் வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவி மடுப்போம்.
முதல் வாசக முன்னுரை:
வார்த்தைக்குரியவர்களே,
இரண்டாம் வாசக முன்னுரை:
வார்த்தைக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், இவ்வுலகின் துன்பங்களால் நாம் சோர்ந்து போகக்கூடாது என்ற அறிவுரையை வழங்குகிறார். வரவிருக்கும் கடவுளின் மாட்சியை நம் கண்முன் கொண்டு கடவுளுக்கு உகந்த பிள்ளைகளாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். கடவுளின் மாட்சி வெளிப்படும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நாம், அவரது விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாய் திகழ அழைக்கப்படு கிறோம். நாம் கடவுளின் மக்கள் என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

1. வார்த்தையை அனுப்புபவரே இறைவா,
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்,
துறவறத்தார் அனைவரும், உமது உண்மையின் வார்த்தையை உலகுக்கு எடுத்துரைத்து, உமக்கு உகந்த பிள்ளைகளாக மக்களைத் தயார் செய்ய உதவுமாறு உம்மை
மன்றாடுகிறோம்.
2. வார்த்தையை விதைப்பவரே இறைவா,
உலகெங்கும் பரவியுள்ள தீமை மற்றும் அழிவின் நடுவே வாழும் மக்கள் அனைவரின் உள்ளத்திலும், உமது நன்மையின் வார்த்தையை விதைத்து உமக்கேற்ற பலன் தருபவர் களாய் உருவாக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
உலகெங்கும் பரவியுள்ள தீமை மற்றும் அழிவின் நடுவே வாழும் மக்கள் அனைவரின் உள்ளத்திலும், உமது நன்மையின் வார்த்தையை விதைத்து உமக்கேற்ற பலன் தருபவர் களாய் உருவாக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. வார்த்தையை விளைவிப்பவரே இறைவா,
எம் நாட்டில் உமது வார்த்தை விதிக்கப்படும் இடங்கள் பாறைகளாகவும், முட்புதர்க ளாகவும் இல்லாமல், நல்ல நிலங்களாக பலன் தரவும், கிறிஸ்துவின் நற்செய்தி விரைந்து பரவவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
எம் நாட்டில் உமது வார்த்தை விதிக்கப்படும் இடங்கள் பாறைகளாகவும், முட்புதர்க ளாகவும் இல்லாமல், நல்ல நிலங்களாக பலன் தரவும், கிறிஸ்துவின் நற்செய்தி விரைந்து பரவவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. பலனளிக்கச் செய்பவரே இறைவா,
போர், வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றில் ஆர்வம் காட்டும் தீயோரிடையே உமது அன்பின் வார்த்தையை விதைத்து, இந்த உலகம் அமைதியின் கனியை அறுவடை செய்ய துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
போர், வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றில் ஆர்வம் காட்டும் தீயோரிடையே உமது அன்பின் வார்த்தையை விதைத்து, இந்த உலகம் அமைதியின் கனியை அறுவடை செய்ய துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. நற்பலனில் மகிழ்பவரே இறைவா,
எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது வார்த்தையை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவும், உமது விருப்பத்தை எங்கள் வாழ்வாக்கி நூறு மடங்கு பலன் தரவும் அருள் தருமாறு உம்மை மன்றாடுகிறோம்.