பொதுக்காலம் 16-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை
அன்போடு வரவேற்கிறோம். இறைவனின் வார்த்தையை நம் உள்ளத்தில் ஏற்று கடவுளின் ஆட்சிக் குட்பட்ட மக்களாய் வாழ இன்றைய திருவழிபாடு
அழைப்பு விடுக்கிறது. மானிட மகனால் விதைக்கப்பட்ட நல்ல விதைகளுடன், தீயவன் விதைத்த களைகளும் சேர்ந்து வளர கட வுள் அனுமதிக்கிறார் என்பதை உணர அறிவுறுத்தப்படுகிறோம். அறுவடை நாளில் களை கள் தீக்கிரையாக்கப்படும் என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். களைகளைப் போன்று பிறருக்கு கெடுதல் செய்பவர்களாய் இருக்காமல், கடவுள் விரும்பும் வகையில் பலன் அளிப்பவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.
இந்த உலகில் கிறிஸ்துவின் அரசை பரவச் செய்யும் புளிப்பு மாவாகவும், பிறருக்கு அடைக்கலம் கொடுக்கும் கடுகு விதையாகவும் செயல்பட வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகம், ஆண்டவராகிய கடவுளின் நீதியைப் பற்றி எடுத்துரைக்கிறது. அனைத்தையும் ஆட்சி செய்கின்ற கடவுளின் மேலான ஆற்றலையும், நீதியையும் புரிந் துகொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். நம் ஆண்டவர், செருக்குற்றிருப்போரை அடக்கு கிறவராகவும், கனிவோடு தீர்ப்பு வழங்குகிறவராகவும், பொறுமையோடு ஆட்சி செய்கிற வராகவும் இருக்கிறார் என்பது உணர்த்தப்படுகிறது. நம்மை நம்பிக்கையால் நிரப்பி, பாவங் களில் இருந்து மனமாற்றம் அருளும் ஆண்டவரின் பாதம் பணிந்து வாழ வரம் வேண்டி,
இவ்வாசகத்துக்கு செவியேற்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், வலுவற்ற நிலையில் தூய ஆவி யாரின் துணையை வேண்டுமாறு நமக்கு அழைப்புவிடுக்கிறார். சொல் வடிவம் பெறமுடி யாத நம்முடைய பெருமூச்சுகளின் வழியாக தூய ஆவியார் நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். உள்ளங்களைத் துருவி அறியும் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ திருத்தூதர் நம்மை அழைக்கிறார். தூய ஆவியின் துணையோடு இறைநம்பிக்கையில் நிலைத்திருந்து நிறைவாழ்வைப் பெற்றுக்கொள்ள வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவியேற்போம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், வலுவற்ற நிலையில் தூய ஆவி யாரின் துணையை வேண்டுமாறு நமக்கு அழைப்புவிடுக்கிறார். சொல் வடிவம் பெறமுடி யாத நம்முடைய பெருமூச்சுகளின் வழியாக தூய ஆவியார் நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். உள்ளங்களைத் துருவி அறியும் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ திருத்தூதர் நம்மை அழைக்கிறார். தூய ஆவியின் துணையோடு இறைநம்பிக்கையில் நிலைத்திருந்து நிறைவாழ்வைப் பெற்றுக்கொள்ள வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவியேற்போம்.
இறைமக்கள் மன்றாட்டு:
1. வானுலக அரசரே இறைவா,
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது அரசை உல கெங்கும் பரவச் செய்யும் முனைப்புடன் செயல்படத் தேவையான மனவுறுதியையும், ஆற் றலையும் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. பூவுலக அரசரே இறைவா,
கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, உலகில் வாழும் மக்களி டையே, உமது இறையரசின் புளிப்பு மாவாக செயல்படும் வல்லமையையும், ஆர்வத்தை யும் வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. நீதியின் அரசரே இறைவா,
எம் நாட்டில் உமது இறையரசின் மதிப்பீடுகள் விரைந்து பரவவும், பிற சமயத்தினர் அனைவரும் உமது மேன்மையை உணர்ந்து தீயவனின் பிடியில் இருந்து வெளியேறவும் அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. நன்மையின் அரசரே இறைவா,
இவ்வுலக தீமைகளின் நடுவே வாழும் இறைமக்கள் எவரும், தீயவனின் செயலுக்கு இடம்கொடுத்து அழிந்து போகாமல், உமது ஆற்றலால் நிலைவாழ்வுக்கு உரியவர்களாய் செழித்து வளர உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. உன்னத அரசரே இறைவா,
எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாகவும், உமது அரசை இவ்வுலகில் கட்டி எழுப்புபவர்களாகவும் வாழ துணை செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.