Thursday, July 31, 2014

ஆகஸ்ட் 3, 2014

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
விருந்துக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். ஆண்டவர் தரும் விருந்தில் பங்கேற்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. தம்மை பின்தொடர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, இயேசு உண வளித்த நிகழ்வை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. ஆண்டவரில் நம்பிக்கை கொள் வோருக்கு எந்த நன்மையும் குறைவுபடாது என்பதை உணர அழைக்கப்படுகிறோம். காண்கிறோம். இயேசு பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவு கொண்டார் என்று வாசிக்கிறோம். சீடர்கள் அளித்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு, இயேசு ஆயிரக்கணக்கானோரின் பசியைப் போக்குகிறார். நம் தேவைகளை அறிந்திருக்கிற ஆண்டவரை எப்பொழுதும் விடாது பின்தொடர வரம் வேண்டி, இத்திருப் பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
விருந்துக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், நிறைவு தராத உணவுக்காக ஏன் உழைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறது. தாகமாய் இருப்பவர்கள் நீர்நிலைகளில் தாகம் தீர்க்கவும், பசியாய் இருப்பவர்கள் இலவசமாய் தானியங்களைப் பெற்றுக்கொள்ளவும் இறைவன் அழைப் பதை எடுத்துரைக்கிறது. ஆண்டவரின் குரலுக்கு செவிகொடுத்து, நல்லுணவை உண்ண வும், கொழுத்ததை உண்டு மகிழவும் நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் உடன் படிக்கையில் நிலைத்திருந்து, அவரது பேரன்பை சுவைத்து மகிழ வரம் வேண்டி, இவ்வாச கத்திற்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
விருந்துக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், பசியும் வேதனையும் ஆண்டவ ரிடம் இருந்து நம்மை பிரிக்க முடியாது என்பதை நினைவூட்டுகிறார். நம்மேல் அன்பு கூர்ந்த இயேசுவின் செயலால் நமக்கு வருகிற சோதனைகள் அனைத்திலும் நாம் வெற்றி அடைகிறோம் என்று எடுத்துரைக்கிறார். இயேசுவின் அளவற்ற அன்பில் இருந்து, விலகி விடாதவாறு கவனமாய் இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உணவளிப்பவரே இறைவா,
  
விண்ணக அப்பமாகிய நற்கருணையை பகிர்ந்தளிக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மக்களின் ஆன்மீகப் பசியைப் போக்குபவர்களாக திகழ வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வளிப்பவரே இறைவா,
  
பல்வேறு கவலைகளில் மூழ்கியிருக்கும் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், மக்களின் நல்வாழ்வுக்கு தேவையானவற்றைச் செய்வதிலும் ஆர்வங்காட்ட தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒளியூட்டுபவரே இறைவா,
   தவறானவற்றை கடவுளாக ஏற்று வாழ்கின்ற எம் நாட்டு மக்கள் அனைவரும், உமது உண்மையின் ஒளியைக் கண்டுணரவும், அழிவுக்குரிய அனைத்தையும் விட்டுவிட்டு உம் மைப் பின்தொடரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. வழிகாட்டுபவரே இறைவா,
   போர்களாலும், வன்முறைகளாலும், இயற்கைச் சீற்றங்களாலும் துன்பத்தில் வாடும் மக்கள் அனைவரும், நீர் தருகின்ற
உண்மை அமைதியை அடையத் தேவையான வழிகாட் டுதலை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. அருள் பொழிபவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம்மை எப்பொழுதும் விடாது பின்தொடர்ந்து வரவும், நீர் தருகின்ற விண்ணக விருந்தில் பங்கு பெறவும்
அருள் புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.