பொதுக்காலம் 14-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
ஆறுதலுக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் பதினான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள்
அனைவரை யும் அன்புடன் அழைக்கிறோம். நாம் துன்பங்களால் சோர்வுறும் நேரங்களில் கிறிஸ்து இயேசுவிடம் ஆறுதலைக் கண்டடைய இன்றைய திருவழிபாடு
நமக்கு அழைப்பு
விடுக் கிறது. ஞானிகளும் அறிஞர்களும் அல்ல, குழந்தை உள்ளம் கொண்டவர்களே கடவுளின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை உணர்வது அவசியம். கனிவும் மனத்தாழ் மையும் உள்ள இயேசுவின் நுகத்தை ஏற்றுக்கொண்டு, அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறோம். நமது சுமைகள் நம்மை அழுத்தும்போது, ஆண்டவரின் பாதத்தில் இளைப்பாறுதல் அடைய வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
இன்றைய முதல் வாசகம், அமைதியின் அரசராக உலகிற்கு வந்த இயேசுவைப் பற்றிய முன்னறிவிப்பை நமக்குத் தருகிறது. அவர் நீதி உள்ளவராகவும், வெற்றி வேந்தராகவும், கழுதையின் மேல் ஏறி வரும் எளிய அரசராகவும் இருப்பார் என இறைவாக்கினர் செக் கரியா முன்னறிவிக்கிறார். அமைதியின் அரசரான இயேசு, போர்ப்படைகளும், போர்க்கரு விகளும் இல்லாமல் செய்வார் என்ற வாக்குறுதி வழங்கப்படுகிறது. கிறிஸ்துவின் ஆட்சி உலகெங்கும் மலர வரம் வேண்டி, இவ்வாசகத்தை உளமேற்போம்.
முதல் வாசக முன்னுரை:
ஆறுதலுக்குரியவர்களே,
இரண்டாம் வாசக முன்னுரை:
ஆறுதலுக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், தூய ஆவிக்கு ஏற்ற வாழ்வு வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். நாம் ஊனியல்புக்கு ஏற்றவாறு செயல்பட்டால், கிறிஸ்து வுக்கு உரியவர்களாக வாழ முடியாது என்பதை அறிவுறுத்துகிறார். தூய ஆவியின் ஆல யங்களாக நாம் செயல்படும்போது, கிறிஸ்துவின் இயல்பைக் கொண்ட உயிர்ப்பின் மக் களாக வாழ்வோம் என்று சுட்டிக்காட்டுகிறார். நமது தீச்செயல்களை கொன்றழித்து, இறை வன் தரும் வாழ்வில் பங்கேற்க வரம் வேண்டி, இவ்வாசகத்தை உளமேற்போம்.

1. ஆறுதலின் ஊற்றே இறைவா,
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்,
துறவறத்தார் அனைவரும், கிறிஸ்து வழங்கும் ஆறுதலை திருச்சபையின் மக்களுக்கு பெற்றுத்தரும் கருவிகளாக செயல்படத் தேவை யான ஆற்றலை வழங்குமாறு உம்மை
மன்றாடுகிறோம்.
2. வாழ்வின் ஊற்றே இறைவா,
உலகெங்கும் அழிவை விளைவிக்கும் தீமையின் ஆதிக்கம் பெருகி வரும் சூழலில், மக்கள் அனைவரும் நீர் அளிக்கும் அமைதி நிறைந்த வாழ்வை விருப்பத்துடன் தேடத் தூண்டுதல் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
உலகெங்கும் அழிவை விளைவிக்கும் தீமையின் ஆதிக்கம் பெருகி வரும் சூழலில், மக்கள் அனைவரும் நீர் அளிக்கும் அமைதி நிறைந்த வாழ்வை விருப்பத்துடன் தேடத் தூண்டுதல் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் ஊற்றே இறைவா,
எம் நாட்டில் உமது மேன்மையை அறியாமல் இருளில் வாழும் மக்களுக்கு, நற்செய்தி யின் உண்மை ஒளியை வழங்குபவர்களாக கிறிஸ்தவர்கள் அனைவரையும் உருவாக்கு மாறு உம்மை மன்றாடுகிறோம்.
எம் நாட்டில் உமது மேன்மையை அறியாமல் இருளில் வாழும் மக்களுக்கு, நற்செய்தி யின் உண்மை ஒளியை வழங்குபவர்களாக கிறிஸ்தவர்கள் அனைவரையும் உருவாக்கு மாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆற்றலின் ஊற்றே இறைவா,
போர்கள், வன்முறைகள் உள்ளிட்ட தீமைகளின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற மக்கள் அனைவரும், இவ்வுலகில் உமது அமைதியின் அரசை நிறுவும் ஆர்வத்துடன் செயல்பட உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
போர்கள், வன்முறைகள் உள்ளிட்ட தீமைகளின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற மக்கள் அனைவரும், இவ்வுலகில் உமது அமைதியின் அரசை நிறுவும் ஆர்வத்துடன் செயல்பட உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. மகிழ்வின் ஊற்றே இறைவா,
எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், இயேசுவின் எளிய நுகத்தை எங்கள் மேல் ஏற்றுகொள்ளவும், அவர் வழியாக இளைப்பாறுதலைக் கண்டடை யவும் அருள் புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.