Thursday, January 10, 2013

ஜனவரி 13, 2013

ஆண்டவரின் திருமுழுக்கு விழா

திருப்பலி முன்னுரை:
திருமுழுக்கு பெற்றவர்களே,
   நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்கு விழா திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். திருமுழுக்கின் வழியாக நாம் கடவு ளின் பிள்ளைகளாக ஆகியிருக்கிறோம் என்பதை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைமகனாம் இயேசு இந்த உலக வரலாற்றில் தோன்றி, மானிட ரான நாம் செய்ய வேண்டியவற்றை தமது எடுத்துக்காட்டான வாழ்வு மூலம் நமக்கு கற்பித்தார். தூய ஆவியின் அருளைப் பெற்று கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழுமாறு, திருமுழுக்கின் வழியாக நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்து இயேசுவைப் போன்று இறைத்தந்தையின் திருவுளத்திற்கு நம்மை முழுமையாக கைய ளிக்கும் மனம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
திருமுழுக்கு பெற்றவர்களே,
   இன்றைய முதல் வாசகம் இஸ்ரயேலுக்கு ஆண்டவர் அருளும் பாவ மன்னிப்பைப் பற்றிய இறைவாக்கினை எடுத்துரைக்கிறது. ஆற்றலுடன் ஆட்சிபுரிய வருகின்ற நம் தலைவராகிய ஆண்டவர், நமக்காக வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருவதாக எசாயா இறைவாக்கு உரைக்கிறார். ஓர் ஆயனைப் போல் தம் மந்தையை மேய்க்கும் ஆண்டவர், ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார் என்பது முன்னறிவிக்கப் படுகிறது. மாட்சிமிகு ஆண்டவரின் வருகைக்காக வழியை ஆயத்தம் செய்யும் விதத்தில், நமது வாழ்வை நெறிப்படுத்தும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
திருமுழுக்கு பெற்றவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப் பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்து, இறைப்பற்று டன் தூய வாழ்வு வாழ திருமுழுக்கின் அருளால் பயிற்சி பெற வேண்டுமென எடுத்துரைக் கிறார். நம் மீட்பராம் இயேசுவின் வழியாக தூய ஆவியைப் பெற்றுள்ள நாம், அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாக மாறி, நிலைவாழ்வை உரிமைப்பேறாக அடை யும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நல்லாயராம் இறைவா,
   உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும், திருச்சபையின் மக்களை நிலைவாழ்வுக்கு உரிய மந்தைகளாகத் தயார் செய்யத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மாட்சியின் ஆண்டவராம் இறைவா,
   உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் உமது மேலான மாட்சியை அறிந்துகொள் ளவும், மக்கள் அனைவரையும் உமக்கு உரியவர்களாக ம
ந்திருப்பவும் தேவையான ஆற்றலை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. ஆவியைப் பொழிபவராம் இறைவா,
  
ம் ஒளியைக் காணாமல், உமது திருச்சபையின் வழிகாட்டுதலில் இருந்து விலகி வாழும் எம் நாட்டு மக்கள் அனைவரும், தூய ஆவியின் தூண்டுதலால் உம்மைப் பற்றிய உண்மைகளை அறிந்து ஏற்றுக்கொள்ள உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. தூய்மைப்படுத்துபவராம் இறைவா,
   சுயநலம், வெறுப்பு, பகைமை, அநீதி, வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றின் கறை களால் மாசு படிந்திருக்கும் இந்த உலகை, உமது அருளாலும் அன்பாலும் தூய்மைப்படுத்த
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. திருமுழுக்கு அளிப்பவராம் இறைவா,
   உமது பெயரால் திருமுழுக்கு பெற்று, உமது பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டிருக் கும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் கிறிஸ்துவின் அருளில் நிலைத்து வாழத் தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.