Thursday, January 31, 2013

பிப்ரவரி 3, 2013

பொதுக்காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். இறைவனின் பணியில் ஏற்படும் இடையூறுகளைப் பற்றி சிந் திக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவர் இயேசு இஸ்ர யேல் மக்களிடையே வல்லமை மிகுந்த ஓர் இறைவாக்கினராக திகழ்ந்தார். இறைவாக் கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதை அவர் அறிந் திருந்தார். இஸ்ரயேலில் பணியாற்றிய இறைவாக்கினர் பலரும் சந்தித்த அனுபவங் களைப் பின்புலமாக கொண்டு இயேசு துணிவோடு செயல்படுவதைக் காண்கிறோம். ஆண்டவரின் உண்மையான வார்த்தைகள் இஸ்ரயேலரை சீற்றம் கொள்ளச் செய்ததாக இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. இயேசுவின் கருக்கு வாய்ந்த வார்த்தைகளால் உள்ளம் கிழிக்கப்பட்டு, மனந்திரும்பிய புதுவாழ்வு வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவை நம் வாழ்வில் முழுமையாக ஏற்று, உண்மையான கிறிஸ்தவர்களாக வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படுவதைப் பற்றி யும், அவர் முன் இருக்கும் சவால்களைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. தாய் வயிற்றில் உருவாகும் முன்பே கடவுளுக்கு அறிமுகமானவராகவும், பிறப்பதற்கு முன்பே ஆண்டவ ரால் திருநிலைப்படுத்தப்பட்டவராகவும் இறைவாக்கினர் விளங்குகிறார் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். மக்கள் அனைவரின் எதிர்ப்புக்கு ஆளானாலும், அதை தாங்கி கொள்ளும் வலிமைமிகு வெண்கலச் சுவராக இறைவாக்கினர் திகழ்வதையும் காண்கி றோம். இறைவார்த்தைக்கு உள்ளங்களைத் திறந்தவர்களாய் வாழ்ந்து, கடவுளின் திருவு ளத்தை நிறைவேற்றுபவர்களாய் திகழும் வரம் கேட்டு, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், அன்பின் மேன்மையைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கிறார். அன்பு பொறுமையுள்ளது, நன்மை செய்யும், பொறாமைப்ப டாது, இறுமாப்பு அடையாது, இழிவானதைச் செய்யாது என, அன்பின் பெருமைகளை பவுல் அடுக்கிக்கொண்டே செல்கிறார். இறைவாக்கு உரைக்கும் கொடையும், பரவசப்பேச் சுப் பேசும் கொடையும், அறிவும் அழிந்துபோனாலும், அன்பு ஒருபோதும் அழியாது என உரைக்கும் திருத்தூதர், விசுவாசம், நம்பிக்கை ஆகியவற்றை விட அன்பே உயர்ந்தது நமக்கு சுட்டிக்காட்டுகிறார். நாம் பெற்றுள்ள கடவுளின் கொடைகளை நிறைவான அன் போடு பயன்படுத்தும் வரம் கேட்டு, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உலகின் நற்செய்தியான இறைவா, 
   இக்கால உலகில் நற்செய்தி அறிவிப்பதன் சவால்களை உணர்ந்தவர்களாய், உமது ஆற்றலின் துணையோடு திருச்சபையை வழிநடத்தும் வரத்தை எம் திருத்தந்தை, ஆயர் கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் வழங்கிப் பாதுகாத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பே உருவான இறைவா,
  உலக மக்கள் அனைவரும் அன்பில் வளரவும், அதன் வழியாக
பொறாமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, இழிசெயல், தன்னலம், தீவினை போன்றவை மறைந்து, உண்மையும் நன்மை யும் உலகில் நிலைபெற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நன்மையை விதைப்பவரான இறைவா,
  
எம் நாட்டு மக்களை வழிநடத்தும் தலைவர்கள் அனைவரையும் உமது கருவிகளாக மாற்றி, அவர்கள் வழியாக உம்மைப் பற்றிய உண்மையின் நற்செய்தியை எம் நாடு முழுவதும் விதைத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. கொடை வள்ளலான இறைவா,
   உமக்கு உகந்த விசுவாசிகளுக்கு நலம் அளிக்கும் கொடைகளை வழங்கி, இந்த சமூ கத்திலும், குடும்பங்களிலும், தனிநபர்களிலும் காணப்படும் அனைத்து விதமான தீமை களும், நோய்களும் நீங்க துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. புதுவாழ்வு தருபவரான இறைவா,
   உமது திருமகனின் வார்த்தைகளால் உள்ளம் கிழிக்கப்பட்டவர்களாய், மனந்திரும்பிய புதுவாழ்வு வாழும் வரத்தை எம் பங்கு மக்கள், அருட்சகோதரிகள், பங்குத்தந்தை அனை வருக்கும் அளித்து, இயேசுவின் வழியில் உமது பிள்ளைகளாக திகழும் வரமருள வேண் டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.