பொதுக்காலம் 3-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
நற்செய்திக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள்
அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் வார்த்தைகளை ஏற்று அவரில் ஒன்றித்தி ருக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு
விடுக்கிறது. கிறிஸ்து இயேசு பாவத்தின் அடிமைத்தளையால் ஒடுக்கப்பட்ட நம்மை விடுவிக்கவும், கடவுளின் திட்டம் பற்றிய சரியான பார்வையை நமக்கு வழங்கவும் இவ்வுலகிற்கு வந்தார் என்பது தெளிவுபடுத்தப் படுகிறது. மறைநூல் வாக்குகளை நிறைவேற்றிய இறைமகன் இயேசுவே நமது மீட்பர் என்று உறுதியாக நம்பி ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். மறைநூலில் முழு மையான நம்பிக்கை கொண்டவர்களாக, ஒரே உடலின் உறுப்புகளாக கிறிஸ்துவில் இணைந்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
இன்றைய முதல் வாசகம் குருவும் திருச்சட்ட வல்லுநருமான எஸ்ரா இஸ்ரேல் மக் கள் நடுவே மறைநூலை திறந்து வாசித்த நிகழ்வை எடுத்துரைக்கிறது.
மறைநூலின் சட்டங்கள் வாசிக்கப்பட்டு, அவற்றுக்கு விளக்கம் வழங்கப்பட்டபோது மக்கள் தங்கள் உள்ளங்களைத் திறந்து மனம் வருந்தி அழுதார்கள் என்று வாசிக்கிறோம். அதே வேளை யில், ஆண்டவரில் மகிழ்ந்திருக்க அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதையும் காண்கி றோம். இறைவார்த்தைக்கு நம் உள்ளங்களைத் திறந்து மனம் வருந்தவும், அதன் மூலம் அகமகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ளவும் வரம் கேட்டு, இவ்வாசகத்தை செவியேற்போம்.
முதல் வாசக முன்னுரை:
நற்செய்திக்குரியவர்களே,
இரண்டாம் வாசக முன்னுரை:
நற்செய்திக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஒரே உடலின் உறுப்புகளாக கிறிஸ்துவில் ஒன்றித்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். உடலின் அனைத்து உறுப் புகளும் தேவையானவையாகவும், புறக்கணிக்க முடியாதவையாகவும் இருக்கின்றன. அதே போன்று, கிறிஸ்துவின் உடலாம் திருச்சபையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் ஆண்டவரின் முன்னிலையில் மதிப்புக்கு உரியவராய் திகழ்கிறார். எனவே, ஒவ்வொரு வரும் மற்றவர் மீது அக்கறை கொண்டு வாழ வேண்டும் என்று திருத்தூதர் அறிவுறுத் துகிறார். பல்வேறு அருள் கொடைகளைப் பெற்றுள்ள நாம், கிறிஸ்துவுக்காக ஒருவர் மற்றவரின் ஆன்மீகத் தேவைகளை நிறைவு செய்பவர்களாக திகழும் வரம் கேட்டு, இவ்வாசகத்தை செவியேற்போம்.

1. மறைநூலின் நாயகரே இறைவா,
திருச்சபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மறைநூலின் படிப்பினைகளை தங்கள் வாழ்வில் செயல்படுத்தவும், திருச் சபையின் மக்களை இறைவார்த்தையின் பாதையில் நடத்தவும் அருள்புரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மகிழ்ச்சியின் ஊற்றே இறைவா,
உலக மக்கள் அனைவரும் இறைவார்த்தையைக் கேட்டு மனம் வருந்தவும், உம்மைப் பற்றிய உண்மைகளைப் புரிந்துகொண்டு மீட்பின் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் தேவை யான உதவிகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
உலக மக்கள் அனைவரும் இறைவார்த்தையைக் கேட்டு மனம் வருந்தவும், உம்மைப் பற்றிய உண்மைகளைப் புரிந்துகொண்டு மீட்பின் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் தேவை யான உதவிகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் நற்செய்தியே இறைவா,
உலக வரலாற்றில் உம் திருமகன் வழியாக நீர் நிறைவேற்றிய மீட்புத் திட்டத்தை எம் நாட்டு மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளவும், உமக்கு உரியவர்களாய் வாழத் தூண்டு தல் பெறவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. விடுதலையின் நிறைவே இறைவா,
பலவிதமான உடல், உள்ள, ஆன்ம நோய்களால் வருந்தும் மக்களை கனிவுடன் கண் ணோக்கி, அவர்களுக்குத் தேவையான நற்சுகமும் புதுவாழ்வும் அளித்து பாதுகாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
பலவிதமான உடல், உள்ள, ஆன்ம நோய்களால் வருந்தும் மக்களை கனிவுடன் கண் ணோக்கி, அவர்களுக்குத் தேவையான நற்சுகமும் புதுவாழ்வும் அளித்து பாதுகாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வாழ்வின் வழிகாட்டியே இறைவா,
எம் பங்கு திருச்சமூகத்தில் வாழும் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், ஒரே உடலின் உறுப்புகளாக கிறிஸ்துவில் இணைந்து வாழத் தேவையான அருள் கொடைகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.