பொதுக்காலம் 3-ம் ஞாயிறு
அந்நாள்களில் ஏழாம் மாதம் முதல் நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்து
கொள் ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக்
கொண்டு வந்தார். தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் காலை முதல்
நண் பகல் வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள
சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச்
செவி கொடுத்தனர்.
திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மரமேடையின் மேல்
நின்று கொண்டிருந்தார். எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர்
திரு நூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத்
திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண் டவரை வாழ்த்தினார். மக்கள்
எல்லாரும் கைகளை உயர்த்தி "ஆமென்! ஆமென்!'' என்று பதிலுரைத்தார்கள்;
பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள். மக்க ளுக்குப்
புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க
வாசித்தார்கள்.
ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்துகொண்டனர். ஆளுநர்
நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய
லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: "இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித
நாள்; எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்'' என்றனர். ஏனெனில் மக்கள்
அனைவ ரும் திருச்சட்டத்தின் சொற்களைக் கேட்டதிலிருந்து அழுது
கொண்டிருந்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் போய்க்
கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத் தைக் குடியுங்கள்; எதுவும் தயார்
செய்யாதவருக்குச் சிறிது அனுப்பி வையுங்கள். ஏனென் றால், நம் ஆண்டவரின்
புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே
உங்களது வலிமை'' என்று கூறினார்.
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 12:12-30
சகோதர சகோதரிகளே, உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயி னும் உடல் ஒன்றாய்
இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும்
கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும்
ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த
ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.
உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்பு களால் ஆனது. "நான் கை அல்ல; ஆகவே
இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல'' எனக் கால் சொல்லுமானால், அது அவ்வுடலைச்
சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? "நான் கண் அல்ல; ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன்
அல்ல'' எனக் காது சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை
என்றாகிவிடுமா? முழு உடலும் கண்ணாயிருந்தால் கேட் பது எப்படி? முழு உடலும்
காதாயிருந்தால் முகர்வது எப்படி? உண்மையில் கடவுள் ஒவ்வோர் உறுப்பையும்
தாம் விரும்பியவாறே உடலில் அமைத்தார். அவை யாவும் ஒரே உறுப்பாய் இருந்தால்
உடல் என ஒன்று இருக்குமா? எனவேதான் பல உறுப்புகளை உடை யதாய் இருந்தாலும்
உடல் ஒன்றே. கண் கையைப் பார்த்து, 'நீ எனக்குத் தேவையில்லை' என்றோ தலை
கால்களைப் பார்த்து, 'நீங்கள் எனக்குத் தேவையில்லை' என்றோ சொல்ல முடியாது.
மாறாக, உடலில் மிக வலுவற்றனவாய்த் தோன்றும் உறுப்புகளே மிகவும்
தேவையானவையாய் இருக்கின்றன. உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என
நமக்குத் தோன்றுபவற்றிற்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம். நம்
மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்புப் பெறுகின்றன. மறைந்திராத நம்
உறுப்புகளுக்கு அது தேவையில்லை. மாறாக, மதிப்புக் குறைந்த உறுப்புகளுக்கு
மிகுந்த மதிப்புக் கொடுத்தே கடவுள் உடலை ஒன்றித்து உருவாக்கினார்.
உடலில் பிளவு ஏற்படாமல், ஒவ்வோர் உறுப்பும் மற்ற உறுப்புகளின் மீது
ஒரேவிதக் கவலை கொள்ளவேண்டும் என்றே இப்படிச் செய்தார். ஓர் உறுப்பு
துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன் புறும். ஓர்
உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து
மகிழ்ச்சியுறும். நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி
உறுப்பு கள்.
அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டா வது
இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்லசெயல்
செய்வோர்களையும், அதன்பின் பிணிதீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணை
நிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப் பேச்சுப்
பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். எல்லாருமே திருத்தூதர்களா?
எல்லாருமே இறைவாக் கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்லசெயல்
செய்பவர்களா? இல்லை. எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா?
எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம்
அளிப்பவர்களா? இல்லையே!
நற்செய்தி வாசகம்: லூக்கா 1:1-4,4:14-21
சிந்தனை: வத்திக்கான் வானொலி