Thursday, January 17, 2013

ஜனவரி 20, 2013

பொதுக்காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
மாட்சிக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். நம் ஆண்டவரின் மாட்சிமிகு செயல்களை நம் வாழ்வில் அனுபவிக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதர் களாகிய நாம் அனைவரும் கடவுளின் மேன்மையை உணர்ந்து, அவரது மாட்சிமையில் பங்குபெறவே அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் உதவியைப் பெற்று மகிழ அன்னை மரியாவின் பரிந்துரை தேவை என்பதை இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது. கானாவூர் திருமண நிகழ்ச்சியில் திராட்சை இரசம் தீர்ந்த பொழுது, மரியன்னையின் பரிந்துரையால் ஒரு புதுமை நிகழ்ந்ததைக் காண்கிறோம். நமது அன் றாடத் தேவைகளில் இறையன்னையின் பரிந்துரையை நாடி, இறைவனின் உதவிகளை சுவைத்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
மாட்சிக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம் கடவுளை மணமகனாகவும், திருச்சபையை மணமகளாக வும் சித்தரிக்கிறது. இங்கு எசாயா பயன்படுத்தும் அடையாளப் பெயர்களான சீயோன், எருசலேம் ஆகியவை ஆண்டவரின் திருச்சபையைக் குறித்து நிற்கின்றன. நாம் இறை மாட்சியைப் பெற்றவர்களாய், ஆண்டவரின் மணிமுடியாகத் திகழ அழைக்கப்படுகின் றோம். திருமண உறவைப் போன்ற மிக நெருங்கிய பிணைப்புடன் ஆண்டவரோடு இணைந்து வாழும் வரம் கேட்டு, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
மாட்சிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவரின் மாட்சி நம்மில் வெளிப்படத் தேவையான கொடைகளைப் பற்றிப் பேசுகிறார். அருள் கொடைகள் பல வகையாக இருந்தாலும் தூய ஆவியார் ஒருவரே; திருத்தொண்டுகள் பலவகையாக இருந்தாலும் ஆண்டவர் ஒருவரே; செயல்பாடுகள் பலவகையாக இருந்தாலும் கடவுள் ஒருவரே என்பதை அவர் நமக்கு தெளிவுபடுத்துகிறார். ஆண்டவரின் விருப்பத்துக்கு ஏற்ப நமக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள ஆற்றலைப் பயன்படுத்தி இறை மாட்சியை வெளிப் படுத்துபவர்களாய் வாழும் வரம் கேட்டு, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஞானத்தின் தொடக்கமாம் இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தூய ஆவியின் ஆற்றலைப் பெற்றவர்களாய், திருச்சபையின் மக்களையும், உலக நாடுகளின் தலைவர் களையும் நிறை உண்மையின் பாதையில் வழிடத்த உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. ஆற்றலின் ஊற்றாம் இறைவா,
  உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் அதிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்தி, தீமைகளின் பிடியில் இருந்து மக்களை காக்கவும், நன்மையின் பாதையில் அவர்களை வழிநடத்தவும் தேவையான அருளை வழங்க
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மாட்சியின் மன்னராம் இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் உம்மைப் பற்றிய உண்மைகளை விரும்பித் தேடவும், கிறிஸ்தவ உண்மைகளைப் புறக்கணிக்க தூண்டும் தவறான வழிகாட்டுதல்களில் இருந்து விலகி நடக்கவும், உம மாட்சிமையின் அரசை இம்மண்ணில் வரவேற்கவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. புதுமைகளின் வேந்தராம் இறைவா,
   உலகில் பணம், புகழ், பதவி போன்றவற்றுக்கு ஆசைப்பட்டு, நீதியையும் உண்மை யையும் குழிதோண்டி புதைக்கும் தீயவர்கள் மனந்திரும்பவும், கிறிஸ்தவ நம்பிக்கை களுக்கு தவறான விளக்கம் அளிக்கும் மதவெறியர்கள் உம்மைப் பற்றிய உண்மைகளை ஏற்றுக்கொள்ளவும் புதுமை செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மீட்பின் நாயகராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது இறை மாட்சியை உலகிற்கு பறைசாற்றுபவர்களாக திகழவும், வாழ்வின் அனைத்து போராட் டங்களிலும் நீர் அளிக்கும் மீட்பை சுவைத்து மகிழவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.