பொதுக்காலம் 15-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பெற்றவர்களே,
பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்களை அன்பு டன் வரவேற்கிறோம். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் அனைவரும், அவரது பணிக்காக அனுப்பப்பட்டிருப்பதை இன்றைய திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. இயேசுவை அறியாதவர்களிடம், அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க கிறிஸ்தவர் களாகிய நம் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு என்பதை உணர அழைக்கப்படுகி றோம். இயேசுவிடம் பிறரைக் கொண்டு சேர்க்கும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில்
பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பெற்றவர்களே,
இன்றைய முதல் வாசகம், பெத்தேலின் குருவாகிய அமட்சியா ஆமோஸ் இறைவாக் கினரை வேறிடத்துக்கு சென்று இறைவாக்கு உரைக்க கோரும் நிகழ்வை எடுத்து ரைக்கிறது. இஸ்ரயேலில் இறைவாக்கு உரைக்க ஆண்டவரே தன்னை அனுப்பியதாக ஆமோஸ் துணிவுடன் பதிலளிப்பதை இங்கு காண்கிறோம். இறைவனின் பணியினை நாமும் துணிவோடு ஆற்ற வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பெற்றவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நாம் கடவுளுக்காக கிறிஸ்துவின் வழியாக தேர்ந்தேடுக்கப்பட்டிருப்பதை நினைவூட்டுகிறார். இயேசு நமக்காக சிந்திய இரத்தத்தால் நாம் மீட்பு அடைந்துள்ளோம் என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். கிறிஸ் துவின் தலைமையில் அனைத்தையும் ஒன்று சேர்க்க உழைக்கும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.
இறைமக்கள் மன்றாட்டு: இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நாம் கடவுளுக்காக கிறிஸ்துவின் வழியாக தேர்ந்தேடுக்கப்பட்டிருப்பதை நினைவூட்டுகிறார். இயேசு நமக்காக சிந்திய இரத்தத்தால் நாம் மீட்பு அடைந்துள்ளோம் என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். கிறிஸ் துவின் தலைமையில் அனைத்தையும் ஒன்று சேர்க்க உழைக்கும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.
1. பணியாற்ற அழைப்பவராம் இறைவா,
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனை வரும் உமக்கு உகந்த பணியாளர்களாக விளங்கவும், திருச்சபையின் மக்கள் அனைவ ரையும் உமது பணி செய்பவர்களாக உருமாற்றவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. தலைவராக பணிப்பவராம் இறைவா,
இந்த உலகின் ஒவ்வொரு நாட்டிலும் தலைமைப் பணியாற்றும் ஒவ்வொருவரையும் உமது அன்பினால் நிறைத்து, உமக்கு உகந்தவர்களாய் இறையரசைக் கட்டியெழுப்பும் தெளிந்த மனதை அவர்களில் உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. பொறுப்பை வழங்குபவராம் இறைவா,
எங்கள் நாட்டில் நடைபெற இருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தலில் உமக்கு உகந்த ஒரு நல்ல தலைவருக்கு வாக்களிக்கும் தூண்டுதலை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப் பினர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. அற்புதங்கள் செய்பவராம் இறைவா,
பல்வேறு நோய்களாலும், துன்பங்களாலும் வேதனை அடைந்து வருந்தும் மக்கள் அனைவரும், கிறிஸ்தவர்களின் செபங்களால் அற்புதங்களைப் பெற்று உமது இறை யரசில் ஒன்றிணைய உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. தேர்ந்தெடுத்து அனுப்புபவராம் இறைவா,
எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது அன்பின் சாட்சிகளாகவும் நற்செய்தியின் தூதுவர்களாகவும் வாழவும், நீர் எங்களுக்கு நியமித் துள்ளப் பணிகளை நிறைவேற்றுபவர்களாக திகழவும் துணை செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.