பொதுக்காலம் 13-ம் ஞாயிறு
முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 1:13-15,2:23-24
சாவைக்
கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை.
இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள்
யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும்
அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது
இல்லை. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின்
சாயலில் அவர்களை உருவாக் கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில்
நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.
இரண்டாம் வாசகம்: 2 கொரிந்தியர் 8:7,9,13-15
சகோதர சகோதரிகளே, நம்பிக்கை,
நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தை யும் மிகுதியாய்க்
கொண்டிருக்கிறீர்கள். எங்கள்மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெரு
கிக்கொண்டு
வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபட வேண்டும்.
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர்
செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள்
செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். மற்றவர்களின் சுமையைத் தணிப்ப தற்காக
நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும்
சம நிலையில் இருக்கவேண்டும் என்றே சொல்கிறோம். இப்பொழுது உங்களிடம்
மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம்
மிகுதியாக இருக்கும்போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே
சமநிலை ஏற்படும். "மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை;
குறைவாகச்
சேகரித்த வருக்கும் எதுவும் குறைவுபடவில்லை'' என்று மறைநூலில் எழுதியுள்ளது
அன்றோ!
நற்செய்தி வாசகம்: மாற்கு 5:21-43
அக்காலத்தில்
இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும்
பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார்.
தொழு கைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு
அவரது காலில் விழுந்து, "என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர்
வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப்
பிழைத்துக் கொள்வாள்'' என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன்
சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்.
அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத் தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு
இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு
பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட் டவர். அவர் நிலைமை வரவர மிகவும்
கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப் பட்டு, மக்கள்
கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையைத்
தொட்டார். ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்'' என்று
அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு
நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில்
உணர்ந்தார்.
உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள்
கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "என் மேலுடையைத் தொட்டவர் யார்?'' என்று
கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், "இம்மக்கள் கூட்டம் உம்மைச்
சூழ்ந்து
நெருக்கு வதைக் கண்டும், 'என்னைத் தொட்டவர் யார்?' என்கிறீரே!''
என்றார்கள்.
ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப்
பார்த்துக்கொண்டிருந் தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய்,
அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும்
அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக்
குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு'' என்றார்.
அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, தொழு கைக்கூடத்
தலைவருடைய
வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள்.
போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?'' என்றார்கள். அவர்கள் சொன்னது
இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத்
தலைவரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்'' என்று கூறினார்.
அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர
வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.
அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே
அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர்
உள்ளே சென்று, "ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை,
உறங்கு கிறாள்'' என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால்
அவர்
அனைவரை யும் வெளியேற்றிய பின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன்
இருந்தவர் களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச்
சென்றார்.
சிறுமியின் கை யைப் பிடித்து அவளிடம், "தலித்தா கூம்'' என்றார். அதற்கு,
'சிறுமி, உனக்குச் சொல்லு கிறேன், எழுந்திடு' என்பது பொருள். உடனே
அச்சிறுமி
எழுந்து நடந்தாள். அவள் பன்னி ரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும்
மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். "இதை யாருக்கும் தெரிவிக்கக்
கூடாது'' என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்ட ளையிட்டார்;
அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.