பொதுக்காலம் 17-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
வாழ்வுக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரை யும் அன்புடன்
அழைக்கிறோம். இறைவன் நமக்கு மிகுதியாக தருகிறார் என்ற கருத்தை இன்றைய
திருவழிபாடு நமக்கு முன்வைக்கிறது. மக்கள் மீது பரிவு கொண்டவராய் இயேசு
அப்பங்களைப் பலுகச் செய்கிறார். நம் மேல் கனிவு காட்டும் இறைவன், நமது
வாழ்வில் அற்புதங்களை செய்யவும் தயாராக இருக்கிறார் என்பதை
உணர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இறைவனின் செயல்பாட்டை நம்
வாழ்வில் உணர, நாம் அன்போடும் தாழ்மையோடும் நம்மை அவரிடம் ஒப்படைக்க
வேண்டியது அவசியம். ஆண்டவரின் அருஞ்செயல்களை நமது வாழ்வில் காண வரம்
வேண்டி, இந்த திருப்பலி யில் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை:
வாழ்வுக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகம், இயேசு அப்பங்களைப் பலுகச் செய்ததன் முன் அடையாள மாக
இறைவாக்கினர் எலிசா செய்த அற்புதத்தை எடுத்துரைக்கிறது. பணியாளர் கொண்டு
வந்த இருபது வாற்கோதுமை அப்பங்களைப் பலுகச் செய்து எலிசா நூறு பேரின் பசியாற் றிய நிகழ்வையும், ஆண்டவரின் சொல்லுக்கு ஏற்ப அவற்றில் மீதியும் இருந்ததாக இங்கு
காண்கிறோம். நாமும் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்து, மிகுதியான
வரங் களைப் பெற வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
வாழ்வுக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவரில் முழுமையாக நம்பிக்கை கொள்ள அழைப்பு விடுக்கிறார். அன்பு, அமைதி, பொறுமை, கனிவு, தாழ்மை ஆகியவற்றைக் கடைபிடித்து, அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும் என்ப தையும் அவர் எடுத்துரைக்கிறார். திருமுழுக்கின் வழியாக கடவுளின் பிள்ளைகளாக மாறியுள்ள நாம், அவரை முழுமையாக சார்ந்து வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத் துக்கு செவிமடுப்போம்.
இறைமக்கள் மன்றாட்டு: இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவரில் முழுமையாக நம்பிக்கை கொள்ள அழைப்பு விடுக்கிறார். அன்பு, அமைதி, பொறுமை, கனிவு, தாழ்மை ஆகியவற்றைக் கடைபிடித்து, அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும் என்ப தையும் அவர் எடுத்துரைக்கிறார். திருமுழுக்கின் வழியாக கடவுளின் பிள்ளைகளாக மாறியுள்ள நாம், அவரை முழுமையாக சார்ந்து வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத் துக்கு செவிமடுப்போம்.
1. பரிவுள்ளவராம் இறைவா,
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனை வரும் உமது மக்கள் மீது பரிவு கொள்ளும் நல்ல மேய்ப்பர்களாகவும், அவர்களின் தேவை யறிந்து பணிபுரியும் சிறந்த தலைவர்களாகவும் செயல்பட துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. கனிவுள்ளவராம் இறைவா,
எங்கள் நாட்டு மக்களை வழிநடத்தும் அரசியல், சமூகத் தலைவர்கள் அனைவரும் மக்களை அன்பு, அமைதி, ஒற்றுமை போன்ற இறையரசின் மதிப்பீடுகளில் வழிநடத்த வும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க உழைக்கவும் உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. இரக்கம் உள்ளவராம் இறைவா,
உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் தேவைகளில் உம்மையே நாடி வரவும், உமது இரக்கத்தால் அனைத்து நலன்களையும் பெற்று, உமக்கு உகந்த மக்களாக உருமாற்றம் பெறவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வளிப்பவராம் இறைவா,
போர்ச் சூழல், வறட்சி, இல்லாமை, இயலாமை போன்ற காரணங்களால் உணவின்றி வாடுவோருக்கும், அன்பின்மை, அமைதியின்மை, நலமின்மை போன்ற துன்பங்களால் வருந்துவோருக்கும் புதுவாழ்வு வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மிகுதியாகத் தருபவராம் இறைவா,
எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம்மில் முழு மையாக நம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, நீர் வழங்கும் அருளாதார, பொருளாதார நலன்களை மிகுதியாகப் பெற்று மகிழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.