பொதுக்காலம் 14-ம் ஞாயிறு
முதல் வாசகம்: எசேக்கியேல் 2:2-5
அந்நாள்களில் ஆண்டவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை
எழுந்து நிற்கச் செய்தது; அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன்.
அவர் என்னிடம், "மானிடா! எனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய
இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்று வரை அவர்களும்
அவர்களுடைய மூதாதையரும் எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம்
செய்துள்ளனர்'' என்றார். "வன் கண்ணும் கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன்.
நீ அவர்களிடம் போய், 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்று சொல். கலக
வீட்டாராகிய அவர்கள், செவிசாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.''
இரண்டாம் வாசகம்: 2 கொரிந்தியர் 12:7-10
சகோதர சகோதரிகளே, எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு
பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக் கொண்டே
இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய
தூதனைப்போல் இருக்கிறது. நான் இறுமாப்பு அடையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது.
அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவ ரிடம் வருந்தி
வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், "என் அருள் உனக்குப் போதும்;
வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்'' என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன்.
அப்போது கிறிஸ் துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும்
இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு
நான் அகமகிழ்கி றேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக
இருக்கிறேன்.
நற்செய்தி வாசகம்: மாற்கு 6:1-6