பொதுக்காலம் 16-ம் ஞாயிறு
முதல் வாசகம்: எரேமியா 23:1-6
ஆண்டவர் கூறுவது: "என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும்
மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு!" தம் மக்களை வழிநடத்தும் மேய்ப்பர்களுக்கு
எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: "நீங்கள் என் மந்தையைச்
சித றடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்தீர்கள்; அதனைப் பராமரிக்கவில்லை." "இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன்"
என்கிறார் ஆண் டவர். "என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து
நாடு களிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப்பட்டிக்குக்
கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும். அவற்றைப் பேணிக் காக்க நான்
மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா; திகிலுறா; காணாமலும் போகா"
என்கிறார் ஆண்டவர். ஆண்டவர் கூறுவது: "இதோ நாள்கள் வருகின்றன. அப்போது நான் தாவீதுக்கு ஒரு
நீதியுள்ள 'தளிர்' தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார்.
அவர் ஞானமுடன் செயல்படு வார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும்
நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல்
பாதுகாப்புடன் வாழும். 'யாவே சித்கேனூ' - ஆண்ட வரே நமது நீதி - என்னும்
பெயரால் இந்நகர் அழைக்கப்படும்."
இரண்டாம் வாசகம்: எபேசியர் 2:13-18
சகோதர சகோதரிகளே, ஒரு காலத்தில் தொலையில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு
கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டுவரப் பட்டிருக்கிறீர்கள். ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு
இனத் தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற
துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். பல
கட்டளைகளையும் விதி களையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு
இனத்தவரையும் தம்மோடு இணைந் திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து
அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார்.
சிலுவையின் வழியாக இரு இனத் தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க
இப்படிச் செய்தார். அவர் வந்து, தொலையில் இருந்த உங்களுக்கும்,
அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற் செய்தியாக அறிவித்தார். அவர்
வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும்
பேறு பெற்றிருக்கிறோம்.
நற்செய்தி வாசகம்: மாற்கு 6:30-34