பொதுக்காலம் 22-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை:
கைம்மாறுக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் இருபத்திரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன் போடு
வரவேற்கிறோம். நாம் ஆண்டவரிடம் இருந்து கிடைக்கும் கைம்மாறுக்காக பணி வோடும் பெருந்தன்மையோடும் வாழ இன்றைய
திருவழிபாடு
நமக்கு அழைப்பு விடுக்கி றது. தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்து வோர் உயர்த்தப் பெறுவர் என்று இயேசு நமக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.
பணத்தையும், பதவியையும், புகழையும் விரும்பித் தேடாமல், தாழ்ச்சியோடு வாழுமாறு ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். இருப்பவர்களோடு உறவு பாராட்டுவதைக் காட்டிலும் இல் லாதவர்களோடு பகிர்ந்து வாழ்வதற்கு முதலிடம் அளிக்குமாறு நாம் அழைக்கப்படுகி றோம். பணிவும் பகிர்வும் நிறைந்த வாழ்வு மூலம், கடவுள் தரும் கைம்மாறைப் பெற்று மகிழ வரம் வேண்டி,
இத்திருப்பலியில்
பங்கேற்போம்.
இன்றைய முதல் வாசகம், தாழ்ச்சியோடு நடப்பதன் வழியாக ஆண்டவரின் பரிவைப் பெற முடியும் என்னும் கருத்தை எடுத்துரைக்கிறது. தாழ்ச்சியால் நாம் கடவுளுக்கு உகந் தோரின் அன்பை பெறுவது மட்டுமின்றி, ஆண்டவருக்கு மாட்சி அளிப்பவர்களாகவும் திகழ்கிறோம் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். நாம் இறுமாப்பு கொள்ளும் வேளை யில், நம்மில் தீமையை அனுமதிக்கிறோம் என்பதை உணருமாறும் வாசகம் எச்சரிக்கை விடுக்கிறது. நாம் தாழ்ச்சியால் ஞானத்தை அடைந்து, ஆண்டவருக்கு உகந்தவர்களாக வாழ வரம் வேண்டி,
இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.
முதல் வாசக முன்னுரை:
கைம்மாறுக்குரியவர்களே,
இரண்டாம் வாசக முன்னுரை:
கைம்மாறுக்குரியவர்களே,
இறைமக்கள் மன்றாட்டு:
1. கைம்மாறு அளிப்பவரே இறைவா,
உமது பணிக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக் கள், துறவறத்தார் அனைவரும், உமது முன் தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ்ந்து, மக்க ளுக்கு பெருந்தன்மையுடன் தொண்டாற்றும் வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. உயர்ந்தோரை தாழ்த்துபவரே இறைவா,
பணம், பதவி, புகழ் போன்றவற்றுக்கு அடிமையாகி, மக்களின் நலன்களை புறக்கணித்து வாழும் உலக நாடுகளின் தலைவர்கள் மனந்திரும்பி, உமது திருவுளத்தை செயல்படுத்து பவர்களாய் வாழத் தேவையான மனமாற்றத்தை தருமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. தாழ்ந்தோரை உயர்த்துபவரே இறைவா,
கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் அவர்களை சிறப்பாக மேன் மைப்படுத்தி, உம்மை அறியாமல் வாழும் பெரும்பான்மை மக்களிடையே மனமாற்றம் ஏற்படத் தூண்டுதல் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. எச்சரிக்கை தருபவரே இறைவா,
உலகில் இறுமாப்பு, தற்பெருமை, சீற்றம், பகையுணர்வு போன்ற தீமைகளால் சமூக வாழ்வுக்கு அச்சுறுத்தலாக வாழும் அனைவரும் மனம் திரும்பி, தாழ்ச்சியோடும் பெருந் தன்மையோடும் மற்றவர்களை ஏற்று வாழ உதவிடுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. வாழ்வை வழங்குபவரே இறைவா,
எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், பணிவுக்கும், பகிர் வுக்கும் அழைப்பு விடுக்கும் உம் திருமகனின் வார்த்தைகளுக்கு செவிகொடுத்து, விண்ண கத்தை உரிமையாக்கிக்கொள்ள துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.